இடது இதயவறை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இடது இதயவறை (தமிழக வழக்கு: இடது வெண்டிரிக்கிள்) மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு சோணையறைகள் (=ஆரிக்கிள் அல்லது ஏட்ரியம்), இரு இதயவறைகள்) ஒன்று ஆகும். இது பிராணவாயு நிறைந்த இரத்தத்தை இடது சோணையறையில் இருந்து இருகூர் வால்வு வழியாகப் பெற்று அதனை மகாதமனி வால்வு வழியாக மகாதமனிக்கு அனுப்புகிறது.
இடது இதயவறை உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்த வேண்டியிருப்பதால் வலது இதயவறையை விட இதன் சுவர்கள் மூன்றில் இருந்து ஆறு மடங்கு வரை தடிமனாக இருக்கின்றன.