இடப்பெயர்
இடத்தை உணர்த்தும் சொற்களை இடப்பெயர் என்கிறோம். ஊர்களின் பெயர்களும் ஊரில் உள்ள நிலப்பிரிவுகளின் பெயர்களும் இடப்பெயர்கள் ஆகும். நிலம், மலை, காடு, ஆறு, கடல் முதலானவை இடப்பெயர்கள். வானம் என்னும் வெளியைத் தமிழர் இடம் என்றே கொண்டனர். இக்கால அறிவியல் வெளியைப் பொருள்களைத் தாங்கும் ஓர் ஆற்றலாகப் பார்க்கிறது.
பெயர்கள் ஆறு வகையாகப் பகுக்கப்படும்போது, அவற்றில் ஒன்றாக அமைவது இடப்பெயர்.[1]
அடிக்குறிப்பு
தொகு- ↑ பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்