இடம் சுட்டிப் பொருள் விளக்குதல்

நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு

இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல் (Explaining with reference to Context) என்பது இலக்கியம் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறனைச் சோதிக்கும் தேர்வு வினா வகைகளுள் ஒன்றாகும். இது எழுத்துத் தேர்விலேயே பெரும்பாலும் வினவப்படும். ஒரு இலக்கிய படைப்பில் (கவிதை, உரைநடை அல்லது நாடகம்) இருந்து சில வரிகள் கொடுக்கப்படும். மாணவர்கள் அந்த வரிகளைக் கண்டு அது எந்த நூலில் இடம் பெற்ற வரிகள், யார் யாரிடம் கூறுவதாய் அமைந்தது மற்றும் அவ்வரிகளின் பொருள் ஆகியவற்றை விளக்க வேண்டும்.