இடைக் கற்காலம்

இடைக் கற்காலம் (Mesolithic) என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியில், கற்காலத்தில், பழைய கற்காலத்துக்கும், புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலமான கட்டத்தைக் குறிக்கிறது.

இடைக் கற்காலம்
[[File:|264px|alt=]]
நீரோடைகளின் அருகே வேட்டைக்காரர்கள் தற்காலிக தங்கும் குடில், அயர்லாந்து
Geographical rangeஐரோப்பா
காலப்பகுதிகற்காலத்தின் முடிவு
காலம்இடைக் கற்காலம் (பண்டைய அண்மை கிழக்கு)
கிமு 15,000 – கிமு 5,000 (ஐரோப்பா)
முந்தியதுபழைய கற்காலம்
பிந்தியதுபுதிய கற்காலம்
நடு கற்காலம் (பண்டைய அண்மை கிழக்கு)

இக்காலத்துக்குரிய எச்சங்கள் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன. புதிய கற்காலத்திலேயே முறையான காடழிப்பு முயற்சிகள் இடம்பெற்றன எனினும், இடைக் கற்காலத்திலும் உலகின் காட்டுப் பகுதிகளில், காடுகள் அழிக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பெரும்பாலான பகுதிகளில், நுண்கற்கருவிகள், இக்காலப் பண்பாட்டுக்குரிய சிறப்பியல்பாகக் காணப்படுகின்றன. தூண்டில்கள், கற் கோடரிகள் மற்றும் ஓடங்கள், வில்லுகள் போன்ற மரப் பொருட்கள் என்பனவும் சில இடங்களில் காணப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைக்_கற்காலம்&oldid=2814438" இருந்து மீள்விக்கப்பட்டது