இட்டாக்குபையா
இட்டாக்குபையா (Tacubaya) என்பது மெக்சிக்கோ நகரத்தின் மேற்குப்பகுதியில் மிகுவல் இடால்கோ பரோவில் அமைந்துள்ள நகரப்பகுதியாகும். இது முந்திய குடியேற்றப் பகுதியான கொலனியா இட்டாக்குபையாவைத் தவிர சான் மிகுவல் சாபல்டெபெக் இரண்டாம் பகுதி, அப்சர்வேடோரியோ, தானியல் கார்சா, அம்பிளிசியோன் தானியல் கார்சா ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியது.[2]
இட்டாக்குபையா | |
---|---|
நகரம் | மெக்சிக்கோ நகரம் |
பரோ | மிகுவல் இடால்கோ |
மக்கள்தொகை (2005)- கொலோனியா இட்டாக்குபையா மட்டும்[1] | |
• மொத்தம் | 7,964 |
இப்பகுதி கிறித்துவக் காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்துள்ளது. நகுவத் மொழியிலிருந்து வந்துள்ள இப்பகுதியின் பெயருக்கு நீர் சேருமிடம் எனப் பொருள்.[3] குடியேற்றக் காலத்திலிருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மெக்சிக்கோ நகரத்திலிருந்து இப்பகுதி தனிப்பட்டு இருந்தது; இப்பகுதியின் இயற்கையழகை இரசித்தவாறு பெரும்பணக்காரர்களும் அரசப்பிரதிநிதிகளும் இங்கு வாழ்ந்திருந்தனர். 19ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து மெக்சிக்கோ நகரத்தின் வளர்ச்சியாலும் மக்கள் தொகை பெருக்கத்தாலும் இங்கும் நகரமயமாக்கல் தொடங்கியது.[4] இந்த நகரமயமாக்கலால் இப்பகுதியின் தனித்தன்மை அழிபட்டு நகரத்தின் வறியவர்கள் மிகும் இடமாக மாறத்தொடங்கியது. அதனால் இதனை “லா சியுடேட் பெர்டிடா” (தொலைந்த நகரம்) என்கின்றனர். இங்குக் குடிசைகளில் மக்கள் வாழ்கின்றனர்.[5] முற்காலங்களில் கட்டப்பட்ட மாளிகைகள் இங்கு இன்னமும் உள்ளன; 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காசா அமரில்லாவும் காசா டெ லா போலாவும் இவற்றுள் சிலவாகும்.[6] இப்பகுதியில் மெக்சிக்கோ நகர மெட்ரோ, நகருந்து மையம் உட்படப் பல தெருப் பேருந்துகள் கூடும் அவெனிடா யாலிசுக்கோ போக்குவரத்துக் கூடுதுறை அமைந்துள்ளது.[7]
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பொருட்டு 2011ஆம் ஆண்டு மெக்சிக்கோ நகரம் அடையாளப்படுத்திய 21 மயக்குமிடங்களில் ("Barrio Mágico") இதுவுமொன்று.[8]
மேற்சான்றுகள்
தொகு- ↑ ""Estadisticas:Desarrollo Social por Colonia", Miguel Hidalgo borough website, retrieved 2014-07-07". Archived from the original on 2014-11-20. பார்க்கப்பட்ட நாள் 2015-07-18.
- ↑ "Tacubaya", Mexico Desconocido (எசுப்பானியத்தில்)
- ↑ "Tacubaya" (in Spanish). Mexico City: Mexico City Metro. Archived from the original on ஜூன் 14, 2011. பார்க்கப்பட்ட நாள் January 29, 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ Sosa Ruiz, Andrés (December 2008). "Tacubaya, de suburbio veraniego a ciudad [Tacubaya, from suburb to true city]" (in Spanish) (pdf). Investigaciones Geográficas (Mx) (Mexico City: Universidad Autonoma de Mexico) 67: 150–152. http://redalyc.uaemex.mx/redalyc/pdf/569/56911125011.pdf. பார்த்த நாள்: January 29, 2010.
- ↑ Serrano, Miguel Ángel (January 5, 2007). "Muere mujer calcinada al incendiarse casas precarias [Woman diez when precarious houses burn]" (in Spanish). El Universal (Mexico City) இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 25, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090925022149/http://www.eluniversal.com.mx/notas/398314.html. பார்த்த நாள்: January 29, 2010.
- ↑ "Ruta Turística Parque Lira y Tacubaya" (in Spanish). Mexico City: Borough of Miguel Hidalgo, D.F. Archived from the original on பிப்ரவரி 3, 2010. பார்க்கப்பட்ட நாள் January 29, 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ Gutierrez, Pilar (October 21, 2009). "Descansan puestos cerca en Tacubaya [Retiring stalls near Tacubaya]" (in Spanish). Reforma (Mexico City): p. 5.
- ↑ Quintanar Hinojosa, Beatriz, தொகுப்பாசிரியர் (November 2011). "Mexico Desconocido Guia Especial:Barrios Mágicos [Mexico Desconocido Special Guide:Magical Neighborhoods]" (in Spanish). Mexico Desconocido (Mexico City: Impresiones Aereas SA de CV): 5–6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1870-9400.