இட்டாநகர்

அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமும் ஓர் மாநகராட்சியும் ஆகும்.


இட்டாநகர் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமாகும். இது இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. நிஷி என்னும் பழங்குடிகளே இங்கு பெரும்பான்மையினராக வசிக்கும் பழங்குடிகள் ஆவர்.தலைநகராக இருப்பதன் காரணமாக, இட்டாநகர் நாட்டின் பிற பகுதிகளுடன் தரை வழியாகவும் வான் வழியாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.சுமார் முப்பது (30) வார்டுகளைக் கொண்ட இந்த நகரம் 60,000ற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.இங்கு விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது

ஈட்டாநகர் மாநகராட்சி
—  மாநகராட்சி  —
ஈட்டாநகர் மாநகராட்சி
இருப்பிடம்: ஈட்டாநகர் மாநகராட்சி
, அருணாசலப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 27°06′00″N 93°37′12″E / 27.10000°N 93.62000°E / 27.10000; 93.62000ஆள்கூறுகள்: 27°06′00″N 93°37′12″E / 27.10000°N 93.62000°E / 27.10000; 93.62000
நாடு  இந்தியா
மாநிலம் அருணாசலப் பிரதேசம்
மாவட்டம் பாப்பும் பரே
ஆளுநர் B. D. Mishra
முதலமைச்சர் பெமா காண்டு
மக்களவைத் தொகுதி ஈட்டாநகர் மாநகராட்சி
மக்கள் தொகை 34 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


440 மீட்டர்கள் (1,440 ft)

15ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இட்டா கோட்டை, இந்நகருக்கு அருகில் உள்ளது. இக்கோட்டையின் பெயரை ஒட்டியே இந்நகர் இப்பெயரைப் பெற்றது. இது தவிர, பழமையான கங்கை ஏரியும், தலாய் லாமாவால் புனிதமானதாக அறிவிக்கப்பட்ட புத்தக் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. இந்நகரின் முக்கிய வாழ்வாதாரமாக வேளாண்மை அமைந்துள்ளது.

வெளியிணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டாநகர்&oldid=2967932" இருந்து மீள்விக்கப்பட்டது