இண்டர்சிசியம்

இண்டர்சிசியம் (interstitium) மார்ச் மாதம், 2018-ஆம் ஆண்டில் புதிதாக அறியப்பட்ட மனித உறுப்பாகும்.[1][2][3] இண்டர்சிசியம், மனிதத் தோல் மற்றும் உள்ளுறுப்புகளான தசைகள் மற்றும் சுற்றோட்டத் தொகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இடையே உள்ளப் பகுதிகளில் திரவம் நிறைந்த பொருளாக, செல் சுவர் போன்று காணப்படும் பகுதியாகும். இப்புதிய உறுப்பானது தனி உறுப்பாக தனியாக இயங்காது, தனக்கு அடுத்துள்ள உறுப்புகளுடன் இணைந்து இயங்குகிறது.[4][5] இத்திரவப் பொருளை இண்டர்சிசியல் திரவம் என்பர். இத்திரவத்தில் நீர் மற்றும் சில கரைசல்களுடன் கூடியது. இத்திரவம் இறுதியில் நிணநீரில் கலக்கிறது.[5] மனித உடலில் இண்டர்சிசியல் அமைப்பு, இணைப்பு திசுக்கள் மற்றும் ஆதரவு திசுக்களால் ஆனது.

திரவம் நிறைந்த இண்டர்சிசியல் அமைப்புகள், உடல் முழுவதும் உள்ள இணைப்பு திசுக்கள், தோலின் கீழ்புறம், ஜீரண மண்டலச் சுவர்கள், நுரையீரல், தசைகள் மற்றும் சிறுநீர்த்தொகுதிகளில் இருப்பதை முதலில் கண்டறிந்தனர்.

வேலைகள் தொகு

இண்டர்சிசியல் திரவமானது ஒரு நீர்த்தேக்கம் போன்று செயல்படுகிறது. ஊட்டச்சத்துக்களை, நிணநீர் மண்டலம் மற்றும் இரத்த ஓட்ட மண்டலத்தில் கடத்தும் அமைப்பாக செயல்படுவதுடன், ஊட்டச்சத்துகளை, செல்கள், இரத்த ஓட்ட மண்டலங்கள் போன்ற உறுப்புகளுக்கு விநியோகம் செய்கிறது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Meet Your Interstitium, A Newfound 'Organ'
  2. Scientists Have Discovered a New Organ in the Human Body. What is the Interstitium?
  3. https://www.independent.co.uk/news/health/new-organ-human-body-interstitium-cancer-skin-scientists-discovery-new-york-a8275851.html
  4. Bert JL; Pearce RH (1984). The interstitium and microvascular exchange. In: Handbook of Physiology. The Cardiovascular System. Microcirculation (sect. 2; pt. 1; chapt. 12; vol. IV ). Bethesda, MD: American Physiological Society. பக். 521–547. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0683072021. 
  5. 5.0 5.1 5.2 Wiig, H; Swartz, M. A (2012). "Interstitial fluid and lymph formation and transport: Physiological regulation and roles in inflammation and cancer". Physiological Reviews 92 (3): 1005–60. doi:10.1152/physrev.00037.2011. பப்மெட்:22811424. https://www.physiology.org/doi/full/10.1152/physrev.00037.2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டர்சிசியம்&oldid=2750127" இலிருந்து மீள்விக்கப்பட்டது