இதய உறை
இதய உறை, (pericardium) அல்லது இதய உறைப்பை,(pericardial sac) என்பது இதயத்தையும் மீப்பெரும் குழல்களின் வேர்களையும் அடக்கியுள்ள இரு-சுவர்களுடைய பை.[1] இது இரண்டு அடுக்குகளாக உள்ளது; வெளி அடுக்கு வலுவான இணைப்பிழையத்தாலும் (நார்ச்சவ்வு இதய உறை), உள்ளடுக்கு சீரச் சவ்வாலும் (சீரச்சவ்வு இதய உறை) ஆனது.[2][3] இதயப்புறப்பை நீர்மம் நிறைந்துள்ள இதயஞ்சூழ் குழியை அடக்கியுள்ள பெரிகார்டியம்[2] மார்பு இடைச்சுவரின் மையப்பகுதியை வரையறுக்கிறது. இது இதயத்தை பிற அமைப்புகளிலிருந்து பிரிக்கிறது. மேலும் நோய்த்தொற்று, மழுங்கிய பேரதிர்ச்சியிலிருந்து காக்கிறது. இதயத்தின் அசைவுகளுக்கு உராய்வைக் குறிக்கும் உயவூட்டியாகவும் விளங்குகின்றது.
இதய உறை | |
---|---|
இதயத்தின் சுவர்கள், இதய உறை (பெரிகார்டியம்) வலது பக்கம் காட்டப்பட்டுள்ளது. | |
இதய உறைப் பையின் வெட்டி உள்ளகங் காட்டும் விளக்கப்படம் | |
விளக்கங்கள் | |
அமைவிடம் | A sac around the இதயஞ் சூழ் புறப்பை |
தமனி | இதயவுறை விதானிகத் தமனி |
நரம்பு | விதானிக நரம்பு |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | பெரிகார்டியம் |
கிரேக்கம் | περίκάρδιον |
MeSH | D010496 |
TA98 | A12.1.08.001 A12.1.08.002 |
TA2 | 3341 |
FMA | 9869 |
உடற்கூற்றியல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pericardiectomy". Johns Hopkins Medicine. பார்க்கப்பட்ட நாள் 20 Sep 2020.
- ↑ 2.0 2.1 Hegde, Sheila M. (2019-01-01), Solomon, Scott D.; Wu, Justina C.; Gillam, Linda D. (eds.), "33 - Pericardial Disease", Essential Echocardiography (in ஆங்கிலம்), Elsevier, pp. 347–353.e1, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/b978-0-323-39226-6.00033-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-39226-6, பார்க்கப்பட்ட நாள் 2020-11-17
- ↑ Mou, Steven S.; McCrory, Michael C. (2019-01-01), Ungerleider, Ross M.; Meliones, Jon N.; Nelson McMillan, Kristen; Cooper, David S. (eds.), "28 - Inflammatory Heart Disease: Pericardial Effusion and Tamponade, Pericarditis, and Myocarditis", Critical Heart Disease in Infants and Children (Third Edition) (in ஆங்கிலம்), Philadelphia: Elsevier, pp. 351–364.e5, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/b978-1-4557-0760-7.00028-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4557-0760-7, பார்க்கப்பட்ட நாள் 2020-11-17
வெளி இணைப்புகள்
தொகு- Anatomy photo:21:st-1500 at the SUNY Downstate Medical Center - "மார்பு இடைச்சுவர்: இதய உறை (இதய உறைப்பை)