இதயகோயில்
மணிரத்னம் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(இதய கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இதய கோயில் (Idaya Kovil) இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் , மோகன், ராதா, அம்பிகா மற்றும் கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்து (1985) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1]
இதய கோயில் | |
---|---|
இயக்கம் | மணிரத்னம் |
தயாரிப்பு | ஜிவி |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | எம். ஜி. வல்லபன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் ராதா அம்பிகா சுரேஷ் கவுண்டமணி |
ஒளிப்பதிவு | ராஜராஜன் |
விநியோகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
வெளியீடு | 1985 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- மோகன் - சங்கர்
- இராதா - சூர்யா
- அம்பிகா - கௌரி
- கவுண்டமணி - லோகிதாசன் பாகவதர்
- கபில் தேவ்- சுரேசு
- சின்னி ஜெயந்த் - சுரேசின் நண்பர்
- சார்லி - சார்லி
- செந்தில் லோகிதாசன் - பாகவதரின் உதவியாளர்
- ஜி. சீனிவாசன் ரெட்டியார்- (கௌரியின் தந்தை)
- தியாகு - சுரேசின் நண்பர்
- இளவரசு- சங்கரின் நண்பர்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்- கனகசபை
- மீசை முருகேசன்
- ஓமக்குச்சி நரசிம்மன்- வயலின் கலைஞர்
- டைப்பிஸ்ட் கோபு - கடம் வாசிப்பவர்
- பசி நாராயணன் - பொன்னபலம்
- காஜா ஷெரிப்
- மதன் பாப்- இசை நடத்துனர்
பாடல்கள்
தொகு"இதயம் ஒரு கோவில்" பாடலை எழுதியவர் இளையராஜா. படங்களில் ஒரு முழு பாடலை இளையராஜா எழுதியது இதுதான் முதல் முறை. அந்த சூழ்நிலைக்கு ஒரு கவிஞர் சரியாக எழுதாததால் ஒரு எடுத்துக்காட்டுக்காக பல்லவி கூற ஆரம்பித்து முழுப்பாட்டையும் இளையராஜாவே எழுதிவிட்டார்.[2]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | இதயம் ஒரு கோயில் | இளையராஜா, எஸ். ஜானகி | இளையராஜா | |
2 | இதயம் ஒரு கோயில் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | இளையராஜா | |
3 | யார் வீட்டில் ரோஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | மு. மேத்தா | 04:41 |
4 | கூட்டத்திலே கோயில்புறா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | முத்துலிங்கம் | 04:29 |
5 | பாட்டுத் தலைவன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வாலி | 04:43 |
6 | நான் பாடும் மௌனராகம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து | 04:23 |
7 | வானுயர்ந்த சோலையிலே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வரதராஜன் | 05:14 |
8 | ஊரோரமா ஆத்துப்பக்கம் | இளையராஜா, கே. எஸ். சித்ரா | வாலி | 04:51 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Happy birthday Ilaiyaraaja and Mani Ratnam!". Deccan Herald (in ஆங்கிலம்). 2018-06-02. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
- ↑ Cinema Vikatan (2019-01-23). "50 தடவைக்கு மேல் பார்த்த படம் எது?' - இளையராஜா சொல்லும் ரகசியம் - Exclusive Interview". பார்க்கப்பட்ட நாள் 2024-07-22.