இந்தப்பூர்

இந்தப்பூர் (Indapur), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம், புணே மாவட்டம், இந்தப்பூர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இந்தியாவின் கிழக்கில் மசூலிப்பட்டினம், மேற்கில் புணேவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 9 இந்தப்பூர் வழியாக செல்கிறது. இந்தப்பூர் நகரத்தின் அருகில் பாராமதி நகரம், பீமா ஆறு மற்றும் பீமா அணை உள்ளது.

இந்தப்பூர்
நகரம்
இந்தப்பூர் is located in மகாராட்டிரம்
இந்தப்பூர்
இந்தப்பூர்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் இந்தப்பூர் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°07′N 75°02′E / 18.12°N 75.03°E / 18.12; 75.03
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புணே
தாலுகாஇந்தப்பூர்
ஏற்றம்527 m (1,729 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்25,515
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்413106
வாகனப் பதிவுMH-42

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 17 வார்டுகளும், 5,228 குடும்பங்களையும் கொண்ட இந்தப்பூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 25,515 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 13,252 மற்றும் 12,263 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 925 வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.86% ஆகும். சராசரி எழுத்தறிவு 88.22% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 78.16% , இசுலாமியர்கள் 15.11%, பௌத்தர்கள் 4.58%, சமணர்கள் 1.47% மற்றும் பிறர் 0.67% ஆக உள்ளனர். [1]

பொருளாதாரம் தொகு

இதன் முக்கிய விளைபயிர்கள் கோதுமை, கரும்பு மற்றும் சோளம் ஆகும். இந்நகரம் இந்தியப் பாதுகாப்புத் துறையின் கனரக தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Indapur Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தப்பூர்&oldid=3718376" இலிருந்து மீள்விக்கப்பட்டது