இந்தியக் கட்டிடக்கலை பள்ளிகள்

இந்தியக் கட்டிடக்கலை பள்ளிகள் (Schools of Planning and Architecture, SPAs), இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற பொதுத்துறை பல்கலைக்கழங்கள் ஆகும். போபால், புதுதில்லி, விஜயவடா ஆகிய இடங்களில் இந்தியக் கட்டிடக்கலை பள்ளிகள் செயல்படுகின்றன. கட்டிடங்கள் கட்ட திட்டமிடுதல், வடிவமைப்பு மற்றும் கட்டிடக் கலை குறித்தான கல்வியை இப்பள்ளிகள் பயில்விக்கின்றன. இந்தியக் கட்டிடக்கலைப் பள்ளிகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.[1]

இந்தியக் கட்டிடக்கலை பள்ளிகள் is located in இந்தியா
புதுதில்லி
புதுதில்லி
போபால்
போபால்
விஜயவாடா
விஜயவாடா
இந்தியக் கட்டிடக்கலை பள்ளிகளின் அமைவிடங்கள்
இந்தியக் கட்டிடக் கலைப் பள்ளிகளின் விவரங்கள்
பெயர் சுருக்கப் பெயர் நிறுவப்பட்ட ஆண்டு நகரம் மாநிலம் இணையதளம்
இந்தியக் கட்டிடக்கலைப் பள்ளி, தில்லி எஸ்பிஏ-D 1941 (1959) புதுதில்லி தில்லி spa.ac.in
இந்தியக் கட்டிடக்கலைப் பள்ளி, போபால் எஸ்பிஏ-B 2008 போபால் மத்தியப் பிரதேசம் spabhopal.ac.in
இந்தியக் கட்டிடக்கலைப் பள்ளி, விஜயவாடா எஸ்பிஏ-V 2008 விஜயவாடா ஆந்திரப் பிரதேசம் spav.ac.in

‡ – year converted to SPA

மாணவர் சேர்க்கை தொகு

பள்ளி மேனிலைப் படிப்பு முடித்த மாணவர்கள் இந்தியக் கட்டிடக்கலைப் பள்ளிகளில் நான்காண்டு இளநிலை கட்டிடக்கலை படிப்பில் சேர்வதற்கு, இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (JEE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டாண்டு முதுகலை கட்டிடக்கலைப் படிப்பில் சேர்வதற்கு பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வில் (GATE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டிடக் கலையில் ஆய்வு படிப்பில் சேர்வதற்கு கட்டிடக்கலையில் முதுநிலைப் படிப்பிலும், நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு