இந்தியக் கணிதவியலாளர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
கணித இயலுக்கு அரும் பங்களித்த புகழ் பெற்ற இந்திய கணித அறிஞர்கள் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளனர். சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்து தற்காலம் வரையிலும் கணிதவியலுக்கு ஆக்கங்கள் தந்தவர்கள் பலர் உள்ளனர். இந்தியாவில் இருந்து பல கருத்துக்கள் நடுகிழக்கு நாடுகளுக்கும் அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் ஒருகாலத்தில் பரவியன என பலர் எண்ணுகின்றனர். இந்திய கணிதவியலாளர்கள், இட-மதிப்பீடு, அளவுகோல், மற்றும் பூச்சியத்தின் கருத்தாக்கம் உட்பட பல்வேறு குறிப்பிடத்தக்க பங்களிப்பினைக் கணிதத்திற்கு அளித்துள்ளனர். இந்திய கணித அறிஞர்களின் சிறப்பான பங்களிப்புகள் குறுகிய சில குழுக்களைத் தவிர பரவலாக அறியப்படாததாகவே உள்ளன. இப்பங்களிப்புகளைப்பற்றி சில வரலாற்று ஆய்வாளர்களும் எழுதியுள்ளனர்.[1]
கி.மு.
தொகு- யஞ்ஞவால்க்யா, கி.மு. 1800 கணித முறைப்படி குண்டங்கள் அமைத்தல் பற்றி சடபாத பிராமணத்தில் எழுதியவர்.
- லகதா கி.மு. 1350 வேதவழி வானவியல் கருத்துக்கள்.
- பாணினி
கி.பி. 1-1000
தொகு- ஆரியபட்டர் - கி.பி. 500 வானவியல் அறிஞர். பல அரிய கணக்கு வகைகள் தந்தவர். வட்டத்தின் விட்ட வகுப்பான பை க்கு தோராய மதிப்பைத் தந்தார்
- வராஃகமிகிரர்
- முதலாம் பாஸ்கரர், கி.பி.620
- பிரம்மகுப்தர் - கி.பி. 598-668 சுழியின் கருத்தைக் கணக்கில் பயன்படுத்தல்.
- விரஃகங்கர் (கி.பி. 8 ஆம் நூற்றாண்டு) - ஃபிபனாச்சி தொடரின் விதிமுறைகளைத் தந்தவர்.
- சிறீதரர் காலப்பகுதி கி.பி. 650-850 க்குள் வாழ்ந்தவர். கோளத்தின் கனஅளவும், இருபடி சமன்பாட்டுக்குத் தீர்வும் தந்தவர்.
- வீரசேனர் கி.பி. 8 ஆம் நூறாண்டு. மடக்கை (logarithm) பற்றியும், 2, 3, 4 ஆகிய எண்களை அடியாகக் கொண்டு கணக்கிடும் முறையையும் கூறினார்.
- சிறீதர ஆச்சாரியா (870-930)
- கோவிந்தசாமி கி.பி. 9ஆம் நூற்றாண்டு. முக்கோண சைன்களைத் துல்லியமாக கணக்கிட உதவியவர்.
- மகாவீரர் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு.
- சயதேவர் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு. பெல் (Pell) போன்ற சமன்பாடுகளுக்கு சக்கரவலா என்னும் முறையில் தீர்வு காணுதல். புகழ்பெற்ற செருமானிய கணித அறிஞர் ஹென்க்கல் (Henkel) சயதேவாவின் முறையை மிகவும் பாராட்டியுள்ளார்.
- இரண்டாம் ஆரியபட்டர், கி.பி. 920-1000 மகா சித்தாந்தம் என்னும் நூலை இயற்றியவர்.
கி.பி. 1000-1800
தொகு- பிரம்மதேவர் கி.பி. 1060-1130
- சிறீபதி, கி.பி. 1019-1066
- கோபாலர் - பிபனாச்சி எண்கள் வரிசையைப் பற்றி ஃபிபனாச்சிக்கு முன்னால் விளக்கியுள்ளவர்.
- ஏமச்சந்திரர் - இவரும் பிபனாச்சி எண்கள் வரிசையைப் பற்றி ஃபிபனாச்சிக்கு முன்னால் விளக்கியுள்ளவர்.
- இரண்டாம் பாஸ்கரர் - நுண்கணிதம் பற்றி கருத்துக்கள் தந்தவர்.
- கணேச உபாத்தியாயா 13 ஆம் நூற்றாண்டு ஏரணர் (Logician), மிதிலா குழுவினர்.
- பக்ஷாதாரா, கங்கேஷாவின் மகன், தருக்கநூல் வல்லுநர், மிதிலா பள்ளி
- ஷங்கரா மிஷ்ரா, தருக்கநூல் வல்லுநர், மிதிலா பள்ளி
- நாராயண பண்டிதர் 1340-1400, கேரள (சேர நாட்டு) அறிஞர். கணித கௌமுடி என்னும் நூலை ஆக்கியவர். பொறுக்கல் கணக்கை (combinatorics) எதிர்பார்த்தவர்.
- மாதவர் கி.பி. 1350-1425 கேரள (சேர நாட்டு) அறிஞர். நுண்கணிதத்தில் பல கருத்துக்களை விதைத்தவர். கணிதவியல் பகுப்பாய்வின் (mathematical analysis) தந்தை எனப் புகழப்படுபவர். கேரள வானவியல் மற்றும் கணிதப் பள்ளியைத் தோற்றுவித்தவர்.
- பரமேசுவரர் கி.பி.1360 -1455, கேரள (சேர நாட்டு) அறிஞர். வானவியல், வடிவவியலில் பங்களிப்பு. மாதவரின் கேரளப் பள்ளி.
- நீலகண்ட சோமயாஜி, கி.பி. 1444-1545 கேரள (சேர நாட்டு) அறிஞர். இவர் தந்திர சங்கிரகா என்னும் நூலையும், ஆர்யபாட்டிய பாசியம் என்னும் நூலையும் எழுதியுள்ளார். மாதவரின் கேரளப் பள்ளி.
- மகேந்திர சூரி 14 ஆம் நூற்றாண்டு. யந்திரராஜா என்னும் நூலை எழுதியவர். வானவியல் பற்றிக் கணக்கிடும் விண்மீன்கணித்தட்டு (astrolobe) பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார்.
- சங்கர வாரியார் சுமார் கி.பி. 1530. நீலகண்ட சோமயாஜியின் எழுதிய தந்திர சங்கிரகா என்னும் நூலுக்கு விரிவுரை எழுதியுள்ளார்.
- வாசுதேவ சர்வபாவ்மர், 1450-1525, தருக்கநூல் வல்லுநர், நவத்விப பள்ளி
- ரகுநாத ஷிரோமணி, (1475-1550), தருக்கநூல் வல்லுநர், நவத்விப பள்ளி
- ஜேஷ்டதேவர் - கி.பி. 1500-1610, கேரள (சேர நாட்டு) அறிஞர். இவர் யுக்திபாஷா என்னும் நுண்கணிதம் பற்றிய முதல் நூலை எழுதியவர். மாதவரின் கேரளப் பள்ளி.
- அச்சுத பிஷாரடி, கி.பி.1550-1621, கேரள (சேர நாட்டு) அறிஞர். வானவியல், கிரகணக் கணக்கீடு ஆகியவற்றில் பங்களித்துள்ளார். மாதவரின் கேரளப் பள்ளி.
- மதுரநாதா தர்காவகிஷர், நூ. 1575, தருக்கநூல் வல்லுநர், நவத்விப பள்ளி
- ஜகதீஷ தர்கலாங்காரர், நூ. 1625, தருக்கநூல் வல்லுநர், நவத்விப பள்ளி
- கடதாரா பட்டாச்சார்யர், நூ. 1650, தருக்கநூல் வல்லுநர், நவத்விப பள்ளி
- முனீசுவரர் 17 ஆம் நூற்றாண்டு
- கமலாகரர் (1657)
- சகன்னாத சாம்ராட் (1730)
கி.பி. 1800களில்
தொகு- ராமசுந்தரா (1821 - 1880)
- இராமானுசன் (1887-1920)
- அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்கார் (1892-1953)
- பிரசந்த சந்திர மஃகாலனோபிஸ் (1893-1972)
- சத்தியேந்திர நாத் போசு (1894-1974)
- சஞ்சீவ் ஷா (1803- 1896)
- ரகுநாத் புருஷோத்தம் பரஞ்சேப்
கி.பி. 1900 களில்
தொகு- ராஜ் சந்திர போசு (1901-1987)
- விஜய் மனோஹர் (1901-1987)
- கப்ரேக்கர் (1905-1986)
- எஸ்.என்.ராய் (1906-1966)
- சர்வதமான் சாவ்லா (1907-1995)
- சுப்பிரமணிய சந்திரசேகர் (1910-1995)
- டி.கே. ராய்-சௌதிரி
- ஹரீஷ் சந்திரா (1923-1983)
- அல்லாடி ராமகிருஷ்ணன் (1923-2008)
- சி. ராதாக்கிருஷ்ண ராவ்
- சிறீராம் சங்கர் அபயங்கர் (1930-)
- கே.எஸ்.எஸ். நம்பூத்ரிபாட் (1935-))
- ராம்தாஸ் லோடு பிருட் (1937-1997)
- ஜெயந்த நர்லிகர் (1938-)
- சகுந்தலா தேவி (1939-)
- ஸ்ரீநிவாச வரதன் (1940-)
- விஜய் குமார் பட்டோடி (1945-1976)
- நரேந்திர கருமார்கர் (1957-)
- எம்.வி.சுப்பாராவ் (1921-2006)
- வசிஷ்ட நாராயண் சிங்க்
- திவாகர் விசுவநாத்
- தனஞ்சய் மஃகெந்தாளே
- பாமா சிறீனிவாசன் (1935-)
- கே. ஆனந்த ராவ் (1893 - 1966)
- எஸ்.எஸ்.பிள்ளை (1901 - 1950)
- எஸ்.எஸ்.ஸ்ரீகண்டே
- காஞ்சீவரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்ரி
- நரசிம்மன், எம்.எஸ்.
- பார்த்தசாரதி, கே.ஆர்.
- சி.பி. இராமானுஜம்
- ராகவன் நரசிம்மன்
- ரமணன், எஸ்.
- எம். எஸ். ரகுநாதன்
- மாதவ் நோரி
- மனிந்திரா அகர்வால் (1966-)
- வி. கணபதி அய்யர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-07-06. பார்க்கப்பட்ட நாள் 2006-07-08.