இந்தியக் குச்சிப்பூச்சி

பூச்சி இனம்
இந்தியக் குச்சிப்பூச்சி
கராசியசு மொரோசசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பாசுமடோடியே
குடும்பம்:
லோன்ஞ்சோடிடே
பேரினம்:
கராசியசு
இனம்:
க. மொரோசசு
இருசொற் பெயரீடு
கராசியசு மொரோசசு
சைனெட்டி, 1901
வேறு பெயர்கள்

திக்சிப்பசு மொரோசசு சைனெட்டி, 1901[1][2]

கராசியசு மொரோசசு (Carausius morosus) ('பொதுவான', 'இந்திய' அல்லது 'ஆய்வக' குச்சிப்பூச்சி) என்பது பாசுமடோடியா குடும்பச் சிற்றினமாகும். இது பெரும்பாலும் பள்ளிகள் மற்றும் தனிநபர்களால் செல்லப்பிராணிகளாகப் பார்க்கப்படுகிறது.[1] இப்பூச்சிகள் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சேகரிப்பிலிருந்து உருவாகியுள்ளன. பெரும்பாலான பாஸ்மடோடியாவைப் போலவே, க. மொரோசசும் இரவாடுதல் வகையினைச் சார்ந்தது. இவை கன்னிப்பிறப்பு மூலம் தோற்றுவிக்கப்பட்ட பெண் பூச்சிகள் ஆகும். இவற்றால் இனச்சேர்க்கை இல்லாமல் இனப்பெருக்கம் செய்ய முடியும். ஆண் பூச்சிகளைப் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை. இருப்பினும் வளர்க்கப்படும் நிலையில் இருபாலிகள் (பெண் மற்றும் ஆண் பண்புகள் கொண்ட தனிநபர்கள்) சில நேரங்களில் வளர்க்கப்படுகின்றன.

விளக்கம்

தொகு
 
C. morosus eggs.

பெண் பூச்சிகள் நீளமானவை. இவை சுமார் 80-100 மிமீ (3-4 அங்குல நீளம்) நீளத்தில் வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். முன்னங்கால்களின் அடிப்பகுதியில் சிவப்பு திட்டுகளையும், நடு கால்களில் ஒத்த திட்டுகள் மஞ்சள் நிறத்திலிருக்கும். முட்டைகள் 2 மிமீ (0.8 அங்குலம்) நீளமும், முட்டை வடிவமும், பழுப்பு நிறத்திலும், ஒரு முனையில் பழுப்பு தடித்த அமைப்புடன் காணப்படும். முட்டைகள் பொரிக்கும் போது, அடைப்பு திறக்கப்பட்டு, இருண்ட, சிறிய, சரம் போன்ற துவாரத் திறப்பிலிருந்து இளம் உயிரி வெளியே வலம் வருகிறது. முட்டைகள் ஒற்றைமய மரபுத்திரியுடைன ஆகும்.

நடத்தை

தொகு

பிற உயிரிகள் இதனைத் தொந்தரவு செய்யும் போது, முக்கிய பாதுகாப்பு முறையாக மரணித்த பூச்சி போல நடிக்கும். உடல் கடினமாகி, கால்கள் உடலின் மேலே பற்றிப் பிடிக்கப்படும். காற்றில் இலைகளின் இயக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இவை அசைவதையும் காணலாம்.

பூச்சிகள் இரவில், சுறுசுறுப்பாக இருக்கும்போது உண்கின்றன. பகலில், இவை தங்கள் உணவுத் தாவரங்களில் உடலுக்கு ஏற்ப கால்களுடன் ஓய்வெடுக்கிறார்கள்.

தற்செயலான அறிமுகங்கள்

தொகு

இவற்றின் தெளிவற்ற தன்மை காரணமாக, க. மொரோசசு தற்செயலாக அறிமுகப்படுத்தப்பட்ட இனமாகப் பெரிய பிரித்தானியா, தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு சில சந்தர்ப்பங்களில் இவை ஒரு பூச்சி தீங்குயிரியாக மாறிவிட்டன.[3] சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், ஏராளமான அலங்காரத் தாவரங்களில் இவை அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களா உள்ளதைக் கண்டறிந்தன.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Roskov Y.; Kunze T.; Orrell T.; Abucay L.; Paglinawan L.; Culham A.; Bailly N.; Kirk P.; Bourgoin T.; Baillargeon G.; Decock W.; De Wever A. (2011). Didžiulis V. (ed.). "Species 2000 & ITIS Catalogue of Life: 2011 Annual Checklist". Species 2000: Reading, UK. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
  2. Sinéty, Robert de (1901). Recherches sur la biologie et l'anatomie des phasmes (Thesis) (in பிரெஞ்சு). J. van In & Cie.
  3. Baker, E. (2015). "The worldwide status of stick insects (Insecta: Phasmida) as pests of agriculture and forestry, with a generalised theory of phasmid outbreaks". Agriculture and Food Security 4 (22). doi:10.1186/s40066-015-0040-6. 
  4. Baker, E. (2015). "Carausius morosus in San Diego". Figshare. doi:10.6084/m9.figshare.1304202.