இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்

இந்தியத் துடுப்பாட்டக் கட்டுபாடு வாரியம் (Board of Control for Cricket in India) அல்லது பிசிசிஐ (BCCI) ,தேர்வுத் துடுப்பாட்டம் உட்பட இந்தியாவில் நடைபெறும் அனைத்து முக்கிய துடுப்பாட்ட போட்டிகளுக்கும் பொறுப்பான வாரியமாகும். இந்திய துடுப்பாட்ட அணி மேற்கொள்ளும் அனைத்து சுற்றுப்பயணங்களையும் போட்டிகளையும் அனைத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் 1928ஆம் ஆண்டு திசம்பரில் நிறுவப்பட்டது.இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. இது கொல்கத்தா துடுப்பாட்ட மன்றத்திற்கு மாற்றாக நிறுவப்பட்டது. தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி ஓர் சங்கமாக பதிவு செய்யப்பட்டது.நாட்டின் பல்வேறு அரசு விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்தினாலும் இது ஓர் தனியார் விளையாட்டுக் கழகமாகும். பொதுவாக மாநில துடுப்பாட்டச் சங்கத்தில் உறுப்பினராக, சங்க உறுப்பினர் ஒருவரின் பரிந்துரையுடன் நுழைவுக் கட்டணமும் செலுத்த வேண்டும். மாநில சங்கங்கள் அவர்களது செயலாளர்களை தேர்வு செய்கின்றனர். மாநில செயலாளர்கள் பிசிசிஐ அலுவலர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தனியார் சங்கங்களாகையால் அவர்களது வரவுசெலவு கணக்குகள் பொதுவில் வைக்கப்படுவதில்லை.

இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்
Board of Control for Cricket in India

BCCI
விளையாட்டு துடுப்பாட்டம்
ஆளுகைப் பகுதி இந்தியா
நிறுவபட்ட நாள் திசம்பர் 1928[1]
இணைப்பு பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
இணைக்கப்பட்ட நாள் 31 மே 1926[2]
மண்டல இணைப்பு ஆசியத் துடுப்பாட்ட அவை
இணைக்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 1983
தலைமையகம் துடுப்பாட்ட மையம், வான்கேடே அரங்கம்[3]
அமைவிடம் சர்ச் கேட், மும்பை, மகாராட்டிரம், இந்தியா[3]

[4]

தலைவர் ரோஜர் பின்னி[5]
தலைமை நிர்வாகி ஏமங்கு அமீன்[6]
செயலாளர் ஜெய் சா[5]
ஆடவர் பயிற்றுனர் இராகுல் திராவிட்
மகளிர் பயிற்றுனர் ரமேஷ் பவார்[7]
புரவலர் பைஜூ'சு (தேசிய அணிகள்), கில்லர் (உடை),[8]மாஸ்டர்கார்டு, டாட்டா (ஐபிஎல்–பெபிலீ), டிரீம்11, ஐயுண்டாய், அம்புஜா சிமென்ட், இசுடார் இஸ்போர்ட்சு (அதிகாரபூர்வ ஒலிபரப்பாளர்)[9]
அலுவல்முறை இணையதளம்
www.bcci.tv
இந்தியா

பன்னாட்டுத் துடுப்பாட்ட மன்றத்தில் உறுப்பினராக உள்ள பிசிசிஐ ஒப்புமை இன்றி எந்த துடுப்பாட்டப் போட்டியும் அங்கீகரிக்கப் படுவதில்லை.

விருதுகள் தொகு

துடுப்பாட்டப் வளர்ச்சி மற்றும் போட்டிகள் தொகு

இந்தியாவில் துடுப்பாட்டம் அனைத்து நிலைகளிலும் விளையாடப்படுகிறது. பிசிசிஐ கீழ் வரும் உள்நாட்டு துடுப்பாட்ட போட்டிகளை நடத்தி வருகிறது.

ஒப்பந்தம் தொகு

இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம், வீரர்களுடன் மூன்று வகையான ஒப்பந்தங்களை கொன்டுள்ளது. இது எ - ஒப்பந்தம், பி-ஒப்பந்தம், சி-ஒப்பந்தம் எனப்படும். எ - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள் பருவத்திற்கு ரூபாய் 1 கோடியும் [$186,000], பி- ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள் பருவத்திற்கு ரூபாய் 50 லட்சம், சி-ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள் பருவத்திற்கு ரூபாய் 25 லட்சம் பெறுகின்றனர்.

2013 நவம்பர் மாதத்தின்படி, எ - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள்[10]

2013 நவம்பர் மாதத்தின்படி, பி - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள்.

2013 நவம்பர் மாதத்தின்படி, சி - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள்.

சம்பளம் தொகு

வீரர்களுக்கு கூடுதல் சம்பளமாக 5 நாள் போட்டிக்கு 7 லட்சம், 1 நாள் 4 லட்சம், டி20 போட்டிக்கு 2 லட்சம் வழங்கபடுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Foundation BCCI". https://www.icc-cricket.com/about/members/asia/full/14. 
  2. "Full member Board of Control for Cricket in India." இம் மூலத்தில் இருந்து 4 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221004130227/https://www.icc-cricket.com/about/members/asia/full/14. 
  3. 3.0 3.1 "International Cricket Council" இம் மூலத்தில் இருந்து 4 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221004130227/https://www.icc-cricket.com/about/members/asia/full/14. 
  4. "THE BOARD OF CONTROL FOR CRICKET IN INDIA" இம் மூலத்தில் இருந்து 17 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220517071725/https://www.bcci.tv/about/contact-us. 
  5. 5.0 5.1 "Roger Binny elected 36th BCCI president". Hindustan Times. 18 October 2022 இம் மூலத்தில் இருந்து 18 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221018073154/https://www.hindustantimes.com/cricket/roger-binny-elected-36th-bcci-president-101666074122652.html. 
  6. "Hemang Amin appointed as interim CEO by BCCI" இம் மூலத்தில் இருந்து 10 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221010154803/https://www.inningsbreak.com/hemang-amin-appointed-as-interim-ceo-by-bcci/. 
  7. "Ramesh Powar appointed Head Coach of Indian Women's Cricket team". 13 May 2021. https://www.bcci.tv/articles/2021/news/154387/ramesh-powar-appointed-head-coach-of-indian-women-s-cricket-team. 
  8. "Latest Business and Financial News : The Economic Times on mobile". https://m.economictimes.com/news/sports/kkcls-killer-replaces-mpl-sports-as-official-kit-sponsor-of-team-india/amp_articleshow/96788356.cms&ved=2ahUKEwiHyOCGs5n9AhUL-DgGHVgfB3M4ChAWegQICRAB&usg=AOvVaw2konz1fIwiXJerIyVjdAC6. 
  9. "The Board of Control for Cricket in India" இம் மூலத்தில் இருந்து 19 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211119181159/https://www.bcci.tv/venues. 
  10. "NDTV news on Indian Contracts" இம் மூலத்தில் இருந்து 2013-11-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131119021923/http://sports.ndtv.com/cricket/news/216946-sachin-tendulkar-still-on-bcci-list-of-contracted-players. 

புற இணைப்புகள் தொகு