இந்தியப் பொதுத் தேர்தல்கள்

இந்தியக் குடியரசில் பொதுத் தேர்தல்கள் (General elections in India) என்பவை, இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவை உறுப்பினர்களை இந்தியக் குடிமக்கள் நேரடி வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யும் தேர்தல்களைக் குறிக்கும். மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெறும் கட்சி அல்லது கூட்டணி ஒருவரை இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறது.

மக்களவையின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்பதால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடைபெறும். ஆனால் ஒரு மக்களவையின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே கலைக்கப்பட்டுப் புதிதாகத் தேர்தல்கள் நடத்தப்படலாம். ஒரு அரசு மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப் பெரும்பான்மையை இழப்பதாலும் அல்லது தானாகவே முன்வந்து பதவி விலகுவதாலும் இந்நிலை ஏற்பட வாய்ப்புண்டு. பொதுத்தேர்தல்களில் 18 வயது நிரம்பிய அனைத்து இந்திய குடிமக்களும் வாக்களிக்கலாம். நாடு முழுவதும் 543 தொகுதிகளிலிருந்து தொகுதிக்கு ஒரு உறுப்பினர் வீதம் 543 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பொதுத் தேர்தல் நாடு முழுவதிலும் ஒரே நேரத்திலோ அல்லது பல கட்டங்களாகவோ நடத்தப்படலாம். இத்தேர்தல்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன]]. 1999 பொதுத் தேர்தல் வரை காகித வாக்குச்சீட்டு முறையினால் நடைபெற்ற வாக்கெடுப்பு தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் மூலம் நடை பெறுகிறது.

வரலாறு தொகு

முதலாவது இரண்டாவது மூன்றாவது
ஆண்டு தேர்தல் மொத்த இடங்கள் கட்சி இடங்கள் % வாக்குகள் கட்சி இடங்கள் % வாக்குகள் கட்சி இடங்கள் % வாக்குகள்
1951-52 [1][2][3] 1வது மக்களவை 489 இதேகா 364 44.99% இபொக 16 3.29% சோக 12 10.59%
1957 [4] 2வது மக்களவை 494 இதேகா 371 47.78% இபொக 27 8.92% பிசோக 19 10.41%
1962 3வது மக்களவை 494 இதேகா 361 44.72% இபொக 29 9.94% சுக 18 7.89%
1967 4வது மக்களவை 520 இதேகா 283 40.78% சுக 44 8.67% பாஜச 35 9.31%
1971 5வது மக்களவை 518 இதேகா 352 43.68% பொகமா 25 5.12% இபொக 23 4.73%
1977 6வது மக்களவை 542 பாலோத 295 41.32% இதேகா 154 34.52% பொகமா 22 4.29%
1980 7வது மக்களவை 529 ( 542* ) இதேகா(இ) 351 42.69% ஜக(ம) 41 9.39% பொகமா 37 6.24%
1984 8வது மக்களவை 541 இதேகா 404 49.01% தெதேக 30 4.31% பொகமா 22 5.87%
1989 9வது மக்களவை 529 இதேகா 197 39.53% ஜத 143 17.79% பாஜக 85 11.36%
1991 10வது மக்களவை 521 இதேகா 232 36.26% பாஜக 120 20.11% ஜத 59 11.84%
1996 11வது மக்களவை 543 பாஜக 161 20.29% இதேகா 140 28.80% ஜத 46 23.45%
1998 12வது மக்களவை 543 பாஜக 182 25.59% இதேகா 141 25.82% பொகமா 32 5.16%
1999 13வது மக்களவை 543 பாஜக 182 23.75% இதேகா 114 28.30% பொகமா 33 5.40%
2004 14வது மக்களவை 543 இதேகா 145 26.53% பாஜக 138 22.16% பொகமா 43 5.66%
2009 15வது மக்களவை 543 இதேகா 206 28.55% பாஜக 116 18.80% சக 23 3.23%
2014 16வது மக்களவை 543 பாஜக 282 31.34% இதேகா 44 19.52% அஇஅதிமுக 37 3.31%
2019 17வது மக்களவை 543 பாஜக 303 37.54% இதேகா 52 19.50% திமுக 23

மேலும் காண்க தொகு

  1. "Lok Sabha Results 1951-52". Election Commission of India. Archived from the original on 17 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.
  2. "Statistical Report on Lok Sabha Elections 1951-52" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 11 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Lok Sabha Elections Stats Summary 1951-52" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Statistical Report on Lok Sabha Elections 1957". Election Commission of India. Archived from the original on 2017-05-11. பார்க்கப்பட்ட நாள் 2016-10-02.