இந்தியாவின் முதல் நிதி ஆணையம்

இந்தியாவின் முதல் நிதி ஆணையம் (First Finance Commission) என்பது 1952 முதல் 1957 வரையிலான காலத்தில் செயல்படும் விதமாக இந்தியக் குடியரசுத் தலைவரால் 1951ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் கிசித்தீசு சந்திர நியோகி ஆவார்.

உறுப்பினர்கள்

தொகு

வி. பி. மேனன் தனது பதவியிலிருந்து 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் நாள் விலகியதன் காரணமாக வைகுந்தபாய் மேத்தா பொறுப்பேற்றுக் கொண்டார்.[1]

குறிப்பு விதிமுறைகள்

தொகு

கீழ்கண்ட குறிப்புகள் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க முதல் நிதி ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டது:

  • வருமான வரி மற்றும் ஒன்றிய கலால் வரிகளின் ஒதுக்கீடுகள் மற்றும் வரி பகிர்வு.
  • சரத்து 275-ன் பிரிவு 1-ன் முக்கியப் பகுதியின்’ கீழ் உதவி தேவைப்படும் மாநிலங்களுக்கு மானியமாக செலுத்த வேண்டிய தொகைகள்.
  • சரத்து 273ன் படி சணல் மற்றும் சணல் பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியின் பங்கிற்கு பதிலாக சில மாநிலங்களுக்கு உதவித்தொகை
  • சரத்து 278 (1) அல்லது பிரிவு 306-ன் கீழ் பகுதி ஆ மாநிலங்களுடனான ஒப்பந்த விதிமுறைகளின் தொடர்ச்சி அல்லது சரிசெய்தல்.

பரிந்துரைகள்

தொகு
  • வருமான வரி வருவாயில் மாநிலங்களின் பங்கு 55 சதவீதமாக இருக்க வேண்டும்.
  • ஒன்றிய கலால் வரிகளில் மாநிலங்களின் பங்குகள் மூன்று பொருட்களின் மீதான வரி வருமானத்தில் 40 சதவீதமாகவும், எட்டு பொருட்களின் மீதான வரி வருமானத்தில் 25 சதவீதமாகவும், 35 பொருட்கள் வரியின் வருமானத்தில் 20 சதவீதமாகவும் இருக்க வேண்டும் என்று முதல் ஆணையம் பரிந்துரைத்தது.
  • கிடைமட்ட விநியோகத்தைப் பொறுத்தவரை, மக்கள்தொகைக்கு (80%) அதிக பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பங்களிப்பிற்கு 20% எஞ்சிய மதிப்பு மட்டுமே வழங்கப்படுகிறது.
  • மாநிலத்தின் மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மானியங்கள் தொடர்பான பரிந்துரைகள் எதுவும் ஆணையத்தால் செய்யப்படவில்லை.
  • அசாம், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு மட்டுமே ஆணையம் உதவித்தொகையை (பிரிவு 273 இன் கீழ்) வழங்கியது. இருப்பினும், பிரிவு 275 (1) இன் முக்கியப் பகுதியின் கீழ் மற்றும் முதன்மைக் கல்வி மானியங்களின் தலைப்பின் கீழ் பல மாநிலங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன.

ஆணையம் வழங்கிய அனைத்து பரிந்துரைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Members of the previous Finance Commissions: First Finance Commission". Fourteenth Finance Commission. பார்க்கப்பட்ட நாள் 2017-07-22.