இந்தியாவில் இட ஒதுக்கீடு

சமுதாயத்தில் அழுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி/வேலையில் இடங்களை ஒதுக்கும் திட்டம்.

இட ஒதுக்கீடு சமுதாயத்தில் அழுத்தப்பட்ட பகுதி சார்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை நிலைகளில் ஓரளவு இடங்களை ஒதுக்கி காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். அப்படி அழுத்தப்பட்ட மக்கள் இனம், சாதி, மொழி, பால், வசிப்பிடம், பொருளாதார சூழல், உடல் ஊனம் போன்ற முறைகளில் இருக்கலாம். எடுத்துக்காட்டாக பெண்கள் பல சமூகங்களில் படிப்பு, வெளி வேலை இல்லாமல் வீட்டு வேலையே செய்து வந்தனர். இந்தியாவில் பல சாதிகளுக்கு படிப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு, சமூக தாழ்நிலையில் அழுத்தப்பட்டனர். கிராமப்புற மக்கள் புதிய பொருளாதார/வணிக வளர்ச்சியுற்ற காலத்தில் பல படிப்பு/வேலை வாய்ப்புகளைப் பெறாமல் இழக்க நேரிடுகிறது எனக் கருதப் படுகிறது. சில நாடுகளில் இனப் பேராதிக்கத்தினாலும் இட ஒதுக்கீடு ஏற்படலாம் இது அமெரிக்கா போன்ற பல நாடுகளில் சாமானிய உறுதிச் செயல் என்றும் தெரியப்படும்.

சர்ச்சைதொகு

இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் ஒதுக்கீடுதான் சமுதாயத்தின் கடந்தகால கடுமையான மேடுபள்ளங்களையும், காலங்காலமாகப் பல குடிகளுக்கு இழைத்த கொடுமைகளை ஈடு செய்யும் வழி என்கிறார்கள். அதனால் பல்வேறு மனிதர்கள் -எல்லா சாதி, இனம், பால், தாய்மொழி, இருப்பிடம், கலாசாரம், தேசீயம் சார்ந்தவர்கள்- எல்லா தொழில்களிலும், கல்விக்கூடங்களிலும் இருக்கும் நிலை இந்த கொள்கையை நியாயமாக்குகிறது. இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள், அக்கொள்கை வேண்டத்தகாத பயன்களைக் கொடுத்து சமூகநலனைக் குறைக்கிறது என்பர். ஏனெனில் இட ஒதுக்கீடு பலருக்கு எதிராக அமையும், அதனால் காழ்ப்புகளை வளர்த்து சமூக நல்லிணக்கத்தைக் குறைக்கிறது என்கின்றனர்.[சான்று தேவை]

இந்திய அரசின் இட ஒதுக்கீடுதொகு

 • முன்னாள் படைவீரர்களுக்கு (Ex_Servicemen) அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவன வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[1]

[2][3][4]

 • தேவையான கல்வித் தகுதி படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் 4% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[5][6]
 • மாநில அரசுகள் பெண்களுக்கு 30 முதல் 33% வரை வேலை வாய்ப்பிலும், கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[7]

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடுதொகு

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பொதுப் பிரிவினருக்கு (OC) 31%ம், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 26.5%ம், பிற்படுத்தப்பட்ட இசுலாமியருக்கு (BCM) 3.5% இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) 20%ம், பட்டியல் சாதியினருக்கு (SC) 15%ம், பட்டியல் சாதிகளில் ஒன்றான அருந்ததியருக்கு (SCA) 3% இடஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினருக்கு (ST) 1% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.[8]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. Ex-Servicemen given extended reservation benefit in civil side employment
 2. Ex-Servicemen
 3. http://www.dgrindia.com/jobs_exservicemen.html?officers=1
 4. மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு மத்திய அரசுக்கு கோர்ட் பாராட்டு
 5. CONSOLIDATED INSTRUCTIONS OF DOP&T ON 3% RESERVATION
 6. Central Government Schemes
 7. 33% RESERVATION FOR WOMEN IN ALL STATE GOVERNMENT JOBS
 8. தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு

வெளி இணைப்புகள்தொகு