இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் முகாம்

இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் முகாம் என்பது இலங்கையில், இனப்பிரச்சினை காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே நிகழ்ந்த ஈழப் போரில் இலங்கை ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்களால் நிராதரவான இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள்[1] இந்தியாவில் தஞ்சமடைந்தபோது அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க இந்திய அரசால் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு முகாம்களை குறிப்பதாகும்.

இந்தியாவில் இராஜபாளையம் மொட்டமலை இலங்கைத் தமிழர்கள் முகாம்

தமிழ்நாட்டில் மறுவாழ்வு உதவிகள் தொகு

தமிழ்நாட்டில் 115 முகாம்களில் 73,241 இலங்கை தமிழர்களும் (19,340 குடும்பத்தினர்) மற்றும் வெளி இடங்களில் 31,802 இலங்கை தமிழர்களும் (11,288 குடும்பத்தினர்) உள்ளனர்.[2]


தமிழ்நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு, குடிநீர், மின்சாரம், உணவுப்பொருட்கள், மாதாந்திர பணக் கொடை, திருமண உதவித் திட்டம், மற்றும் கல்வி [3]ஆகியன[4] [5][6]

தற்போதைய நிலை தொகு

தொழில் தொகு

முதியவர்கள் தென்னை கீற்று முடைதல் போன்ற சுயதொழில் மற்றும் கட்டுமானப்பணிகளிலும், இளைஞர்கள் நூற்பாலை மற்றும் விசைத்தறி ஆலைகளிலும் பணிசெய்து வருமானம் ஈட்டுகின்றனர். சுமார் 25 ஆண்டுகள் கடந்த முகாம்களில் உள்ள குடியிருப்புகள் சிதைந்து பாழடைந்த நிலையில் உள்ளது[7] இலங்கை தமிழர்கள் குடியிருப்புகளை சீரமைத்து, இந்திய குடியுரிமை கோருகின்றனர்[8]

தமிழக முகாமை விட்டு தப்பிச்செல்லுதல் தொகு

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை கிடைக்காததால், அரசுப் பணி வாய்ப்பு உள்பட எந்த உதவியும் கிடைக்கவில்லை; எனவே தமிழக முகாமை விட்டு தப்பிச்செல்வதாக அகதிகள் தெரிவித்தனர். [9][10][11]

ஈழம் அகதிகள் மறுவாழ்வு அமைப்பு தொகு

தமிழ்நாட்டில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்ற அமைப்பை சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் மகன் செ. சந்திரகாசன் அமைத்து செயலாற்றி வருகின்றார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு