இந்தியாவில் உள்ள பவுத்தக் குகைகள்

இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையில் பவுத்தக் குகைகள் முக்கியமானவை. உலகளவிலும் இக்கோவில்கள் இவற்றின் சிறப்பான கட்டிடக்கலைக்காக அறியப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 1,500 குடைவரைக் கோவில்கள் உள்ளன. இவற்றில் 1000 கோவில்கள் பவுத்தர்களாலும் 300 இந்துக்களாலும் 200 சமணர்களாலும் உருவாக்கப்பட்டவை.

இந்தியாவில் உள்ள பவுத்தக் குகைகள்
16 Ajanta Caves overview.jpg
செய்பொருள்பாறை
உருவாக்கம்பொ.ஊ.மு 3ஆம் நூற்றாண்டு~
தற்போதைய இடம்இந்தியா

இந்தியாவில் உள்ள குடைவரைக் கோவில்களுள் பழமையானது பொது ஊழிக்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பீகாரின் பராபர் குகைகளாகும். இது அசோகராலும் அவரது பேரனாலும் கட்டப்பட்டது. இதைத் தவிர அதிகமான பவுத்தக் குகைகள் இந்தியாவின் மேற்குப் பகுதியில் தக்காண மேட்டுநிலத்தைச் சுற்றியுள்ளன. கர்லா குகைகள், பாஜா குகைகள், பேட்சே குகைகள் போன்ற முற்காலத்தில் கட்டப்பட்ட கோவில்களுக்குச் சான்றாக விளங்குகின்றன. அஜந்தா கோவில் பிற்காலத்தில் கட்டப்பட்டது. நுட்பமான வேலைப்பாடுகளைக் கொண்டது.

தொடக்ககாலத்தில் இயற்கையாக அமைந்த குகைகளில் கோவில்கள் கட்டப்பட்டன. பிற்காலத்தில் செயற்கையாக மலைகளைக் குடைந்து கோவில்கள் கட்டப்பட்டன.