இந்தியாவில் பதிலித்தாய்

இந்தியாவில் பதிலித்தாய் (Surrogacy in India) என்பது பரவலாக அதிகரித்து வரும் ஒரு நடைமுறை ஆகும். தொழில் சார்ந்த நாடுகளில் ஒப்பீட்டளவில் குறைந்த செலவுகள் மற்றும் எளிதாக அணுகக் கூடிய வகையில் இந்திய பதிலித்தாய் நிறுவனங்கள் இருப்பதால் இந்த நடைமுறை பரவலாக அதிகரித்துள்ளது.[1] மருத்துவமனைகளில் கருத்தரித்தல், வாடகை கட்டணம் மற்றும் குழந்தையை பெற்றெடுப்பது உட்பட முழுமையான பணிகளுக்க்காக மருத்துவகங்கள் நோயாளிகளுக்கு $ 10,000 முதல் $ 28,000 வரை கட்டணம் வசூலித்தன.[2] விமான பயணச் சீட்டுகள், மருத்துவ நடைமுறைகள் மற்றும் உணவகங்களின் செலவுகள் உட்பட, இது இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ள விலையில் மூன்றில் ஒரு பங்கு மற்றும் அமெரிக்காவினை ஒப்பிடுகையில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும்.[3][4] பதிலித் தாய்கள் வாடகை ஒப்பந்தங்கள் மூலம் மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் ஒட்டுமொத்த சுகாதாரப் பாதுகாப்பு பெற்றனர்.[5][6]

2005 ஆம் ஆண்டில், இந்தியாவில் ART மருத்துவகங்களின் அங்கீகாரம், மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைக்கான தேசிய வழிகாட்டுதல்களின் 2002 வரைவை அரசாங்கம் அங்கீகரித்தது.[7] வணிக பதிலித்தாய் 2015 ஆம் ஆண்டில் தடை செய்யப்படுவதற்கு முன்பு, பதிலித் தாய்க்கு இந்தியா ஒரு பிரபலமான இடமாக இருந்தது. இந்தியாவில் பதிலித்தாயின் பொருளாதார அளவு பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை, ஆனால் ஜூலை 2012 இல் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா முழுவதும் 3,000 கருவுறுதல் மருத்துவகங்களுடன் ஒரு வருடத்திற்கு $ 400 மில்லியனுக்கும் அதிகமான வணிகம் நடந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[8]

2013 இல், வெளிநாட்டு ஓரினச்சேர்க்கை இணையர் மற்றும் ஒற்றை பெற்றோர்களுக்கான பதிலித்தாய் முறை தடை செய்யப்பட்டது.[9] 2015 ஆம் ஆண்டில், அரசாங்கம் இந்தியாவில் பதிலித்தாய் முறையை தடைசெய்தது மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே கரு நுழைவதை அனுமதித்தது.[7] அதன்பிறகு 2016 இல், வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா [10] இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது, கருவுறாமை பிரச்சனைகளுடன் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் திருமணம் செய்த பாலின பாலினத்தவர் தம்பதியருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முன்மொழியப்பட்டது.[11] 2016 மசோதா சைன் டை காரணமாக நாடாளுமன்ற அமர்வில் ஒத்தி வைக்கப்பட்டது .[12] இந்த மசோதா 2019 இல் மக்களவையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.[13][14]

நீதித்துறை தீர்ப்புகள் தொகு

குழந்தை மஞ்சி யமடா வி. இந்திய ஒன்றியம் (2008) தொகு

2008 ஆம் ஆண்டில், பதிலித்தாய் மூலம் பிறந்த ஒரு குழந்தை (மாஞ்சி யமடா) பிறந்து மூன்று மாதங்கள் ஆகியும் இந்தியாவை விட்டு வெளியேற முடியவில்லை, ஏனெனில் அவள் இந்திய அல்லது ஜப்பானிய தேசியத்தை கொண்டிருக்கவில்லை. இந்த வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.[15] ஜப்பானிய அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் அவளுக்கு ஒரு வருட விசா வழங்கிய பிறகு இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்திய அரசு குழந்தைக்கு செப்டம்பர் 2008 இல் பயணச் சான்றிதழை வழங்கிய பிறகு ஜப்பானிய அரசு நுழைவு இசைவு வழங்கியது.[16]

குஜராத் உயர் நீதிமன்றம் ஆனந்த் மாவட்டத்தில் ஒரு ஜெர்மன் நாட்டவரால் ஈடுசெய்யப்பட்ட பதிலித்தாய் மூலம் பிறந்த இரண்டு இரட்டை குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமையை வழங்கியது.[17] "உயிரியல் பெற்றோர்கள், பதிலித் தாய் அல்லது உழ்முட்டை தானம் செய்பவரின் உரிமைகளை விட, புதிதாகப் பிறந்த இரண்டு, அப்பாவி குழந்தைகளின் உரிமைகள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் என்று நீதிபதிகள் கூறினர். " உக்ரைன், ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பதிலித்தாய் சட்டங்களை நீதிமன்றம் கருத்தில் கொண்டது.

சான்றுகள் தொகு

  1. Shetty, Priya (10 November 2018). "India's unregulated surrogacy industry". World Report 380: 1663–1664. https://www.thelancet.com/pdfs/journals/lancet/PIIS0140-6736(12)61933-3.pdf. 
  2. "16 Things You Should Know About IVF Treatment". Fight Your Infertility. 2016-01-22. Archived from the original on 27 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-03-27.
  3. Kannan, Shilpa. "Regulators Eye India's Surrogacy Sector" பரணிடப்பட்டது 6 ஏப்பிரல் 2010 at the வந்தவழி இயந்திரம். India Business Report, BBC World. Retrieved March 23, 2009.
  4. See:
  5. Kannan, Shilpa (18 March 2009). "Regulators eye India's surrogacy sector". India Business Report (BBC World) இம் மூலத்தில் இருந்து 6 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100406080744/http://news.bbc.co.uk/2/hi/business/7935768.stm. 
  6. Associated Press (31 December 2007). "Indian women carrying babies for well-off buyers, 'Wombs for rent' pleases women and customers, but raises ethical questions". CBC News (Canadian Broadcasting Corporation) இம் மூலத்தில் இருந்து 13 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160813144846/http://www.cbc.ca/news/technology/indian-women-carrying-babies-for-well-off-buyers-1.681951. 
  7. 7.0 7.1 Timms, Olinda (5 March 2018). Ghoshal, Rakhi. ed. "Ending commercial surrogacy in India: significance of the Surrogacy (Regulation) Bill, 2016". Indian Journal of Medical Ethics 3 (2): 99–102. doi:10.20529/IJME.2018.019. பப்மெட்:29550749. 
  8. Bhalla, Nita; Thapliyal, Mansi (30 September 2013). "India seeks to regulate its booming surrogacy industry". Medscape (Reuters Health Information) இம் மூலத்தில் இருந்து 16 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210216032201/https://www.medscape.com/viewarticle/811861?nlid=35152_2043&src=wnl_edit_medn_obgy&uac=149266AJ&spon=16. 
  9. "India bans gay foreign couples from surrogacy". Daily Telegraph. 2013-01-18 இம் மூலத்தில் இருந்து 27 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190327195336/https://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9811222/India-bans-gay-foreign-couples-from-surrogacy.html. 
  10. "The Surrogacy Regulation Bill (No. 257), 2016". PRS Legislative Research. 20 September 2019. Archived from the original on 20 April 2019. பார்க்கப்பட்ட நாள் 20 September 2019.
  11. "Lok Sabha passes Surrogacy Bill". The Hindu Business Online. 19 December 2018 இம் மூலத்தில் இருந்து 16 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210216032201/https://www.thehindubusinessline.com/news/national/lok-sabha-passes-surrogate-bill/article25781949.ece. 
  12. Srivastava, Ananya (14 February 2019). "Explained: Citizenship (Amendment) Bill, triple talaq bill among 46 draft laws set to lapse as Parliament adjourns sine die". Firstpost இம் மூலத்தில் இருந்து 31 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190531130550/https://www.firstpost.com/india/explained-citizenship-amendment-bill-triple-talaq-bill-among-46-draft-laws-set-to-lapse-as-parliament-adjourns-sine-die-6082661.html. 
  13. "The Surrogacy (Regulation) Bill (No. 156), 2019". PRS Legislative Research. பார்க்கப்பட்ட நாள் 20 September 2019.
  14. "Lok Sabha passes Surrogacy (Regulation) Bill". The Hindu. 5 August 2019. https://www.thehindu.com/news/national/lok-sabha-passes-surrogacy-bill/article28824277.ece. 
  15. "Baby Manji Yamada v. Union of India and another". Supreme Court Cases 13: 518. 29 September 2008. https://www.scconline.com/. பார்த்த நாள்: 22 September 2019. 
  16. Yamada, Manji (3 November 2008). "India-born surrogate baby arrives to unite with Japanese dad". Zee News. http://zeenews.india.com/news/nation/india-born-surrogate-baby-arrives-to-unite-with-japanese-dad_480751.html. 
  17. Express News (Pakistan) (12 November 2009). "HC confers Indian citizenship on twins fathered through surrogacy". இந்தியன் எக்சுபிரசு (Ahmedabad) இம் மூலத்தில் இருந்து 5 January 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100105054632/http://www.indianexpress.com/news/hc-confers-indian-citizenship-on-twins-fathered-through-surrogacy/540419/.