இந்தியாவில் பலதார மணம்

திருமண முறைகள்

இந்தியாவில் பலதார மணம் (Polygamy in India) என்பது தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். பண்டைய இந்தியாவில் பலதுணை மணம் தடை செய்யப்படவில்லை. மேலும், இது பிரபுக்களிடையேயும் பேரரசர்களிடையேயும் பொதுவானது என்றாலும், இது ஒரு பெரிய கலாச்சார நடைமுறை அல்ல என்று நம்பப்படுகிறது. நிலச்சட்டங்கள். மதம் (நீதித்துறை சுதந்திரம்) ஆகியவற்றுக்கு இடையேயான பிரிவின் காரணமாக ஓரளவு தடை இல்லாமல் இருந்தது. மேலும், இந்தியாவின் அனைத்து முக்கிய மதங்களும் பலதார மணத்தை நடுநிலையான முறையில் சித்தரித்தது.[1]

ஜெய்பூரின்இரண்டாம் மன்சிங்கின் மூன்றாவது மனைவி காயத்திரி தேவி, 1940இல் சிசில் பீட்டன் என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படம்

ஐரோப்பாவிற்கு மாறாக, பழங்கால இந்தியாவில் ஆட்சியாளர்களிடமும் மன்னர்களிடமும் பலதார மணம் நிலவியது.[2] ஆட்சியாளர்களுக்கு இது பொதுவானது (உதாரணமாக பாட்டியாலாவின் பூபிந்தர் சிங் , உதய்பூர் மற்றும் மேவாரின் பதே சிங்). சில பணக்காரர்கள் (உதாரணமாக இராமகிருஷ்ணா டால்மியா, கஜனன் பிர்லா[3] , பி. இராஜகோபால் ) போன்றோர் பல மனைவிகளைக் கொண்டிருந்தனர்.

குடியேற்ற பிரித்தானிய இந்தியாவில் இசுலாமிய மாகாணங்களில் இசுலாமியச் சட்ட முறைமையின் படி கணவனுக்கு பல மனைவிகளை அனுமதித்தது. இலாகூரில் ரஞ்சித் சிங் தகனம் செய்யப்பட்டபோது, அவருடைய நான்கு மனைவிகளையும், ஏழு மறுமனையாட்டிகளையும் உடன்கட்டை ஏற அழைத்துச் சென்றனர்.[4] மேலும் அவரது சமாதியில் அவர்களின் கலசம் போன்ற நினைவுச்சின்னங்களும் ஏற்படுத்தப்பட்டன.[5]

சட்ட முன்னேற்றங்கள் தொகு

1860ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494 மற்றும் 495, கிறிஸ்தவர்களுக்கு பலதார மணத்தை தடை செய்தது. 1955ஆம் ஆண்டில், இந்திய இந்து திருமணங்கள் சட்டம் உருவாக்கப்பட்டது. இது ஒரு இந்துவின் மனைவி உயிரோடு இருந்தால் இரண்டாவது திருமணத்தை தடைசெய்தது. இதனால் 1956ஆம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களைத் தவிர அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியாக பலதார மணம் சட்டவிரோதமாக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு நான்கு மனைவிகள் பெற அனுமதிக்கப்பட்டது. கோவாவிலுள்ள இந்துக்களுக்கும், மேற்கு கடற்கரையிலும் பலதார மணம் சட்டபூர்வமானது.

பலதார மணம் கொண்ட இந்து திருமணம் செல்லாது.[6] 494 மற்றும் 495 பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனை பொருந்தும் என்றாலும், முதல் மனைவிக்கு ஆட்சேபனை எழுப்பவில்லை என்றால் இதற்கு தண்டனை இல்லை என்பது அரிது.

முஸ்லிம் பலதார மணம் தொகு

நாட்டின் பிற பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தால் விளக்கப்படும் 1937ஆம் ஆண்டின் முஸ்லிம் தனிநபர் சட்டம் (இசுலாமியச் சட்ட முறைமை) விண்ணப்பச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டவர்கள்.

இருப்பினும், 2015 பிப்ரவரியில் ஒரு தீர்ப்பில் இந்திய உச்ச நீதிமன்றம் "பலதார மணம் முஸ்லிம் மதத்தின் ஒரு ஒருங்கிணைந்த அல்லது அடிப்படை பகுதியாக இல்லை. மேலும் ஒற்றைத் திருமணம் என்பது 25வது பிரிவின் கீழ் மாநிலத்தின் அதிகாரத்திற்குள் ஒரு சீர்திருத்தம்" என்று கூறியது.[7]

நவீன இந்தியாவில் இந்துகளின் பலதாரமணம் தொகு

பாலிவுட் நட்சத்திரமும் மக்களவை உறுப்பினருமான தர்மேந்திரா 1980இல் நடிகை ஹேம மாலினியை திருமணம் செய்தபோது பிரகாஷ் கௌர் என்பவரை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டிருந்தார்.[8] முதல் மனைவி விவாகரத்து அளிக்காததால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இசுலாத்திற்கு மாறி ஹேம மாலினியை மணந்தார் எனபட்டது.[9] ஆனால் பின்னர் இவர் இசுலாமிற்கு மாறியதை மறுத்தார்.[10][11]

சட்டரீதியாக ஒரு இந்துவின் இரண்டாவது மனைவி ஒரு மறுமனையாட்டியாகவே இருப்பார். இருப்பினும் மத ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அவர் ஒரு மனைவியாக கருதப்படலாம்.

சில கிராமப்புறங்களில் இந்துக்களிடையே பெரும்பாலும் முந்தைய மனைவிகளின் ஒப்புதலுடன் பலதார மணம் சில நேரங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.[12] 2005-06 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு, 2 சதவிகிதப் பெண்கள் தங்கள் கணவருக்குத் தன்னைத் தவிர வேறு மனைவிகளும் இருப்பதாகக் கூறியதாகக் கண்டறிந்தது. குழந்தை இல்லாத பெண்களின் கணவர்களுக்கு பல மனைவிகள் இருக்க வாய்ப்புள்ளது.[13]

மேற்கோள்கள் தொகு

  1. "Polyandrous family customs in India". Drishtikone. பார்க்கப்பட்ட நாள் 2016-05-16.
  2. "Polygamous Marriages in India, Vaidehi Yelamanchili, Sulabha Parasuraman, Population Association of America, 2010 Annual Meeting". Archived from the original on 2022-03-14. பார்க்கப்பட்ட நாள் 2021-09-08.
  3. The Birlas: Empire in transition, T.N. Ninan, Chander Uday Singh, Sumanta Sen, India Today, 20 July 2013
  4. Samadhi of Ranjit Singh – a sight of religious harmony, Pakistan Today, JANUARY 16, 2016, NADEEM DAR
  5. ‘Sati’ choice before Maharaja Ranjit’s Ranis, Kanwarjit Singh Kang, 28 June 2015
  6. Modern Indian Family Law, Werner Menski, Routledge, 2013 p.194
  7. http://timesofindia.indiatimes.com/india/Polygamy-not-integral-part-of-Islam-SC/articleshow/46180105.cms
  8. "Bobby Deol Reportedly Attacked Hema Malini with a Knife After Dharmendra's 2nd Marriage; Here's What Prakash Kaur Said on the Matter!" (in en). dailybhaskar. 16 October 2016. https://daily.bhaskar.com/news/ENT-BOW-dharmendra-hema-controversy-5440408-PHO.html. பார்த்த நாள்: 13 February 2020. 
  9. "Celebrities who converted to Islam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 27 February 2017. பார்க்கப்பட்ட நாள் 23 August 2015.
  10. Dharmendra or "Dilawar Khan?" Mili Gazette, 16-30 June 2004
  11. Two's A Crowd His marriages give the actor's campaign a rude jolt, K.S. SHAINI, KAPIL BHATT, Outlook 2004
  12. Some Indian men are marrying multiple wives to help beat drought, Mallika Kapur, CNN, 16 July 2015
  13. "Polygamous Marriages in India". Archived from the original on 2022-05-10. பார்க்கப்பட்ட நாள் 2021-09-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவில்_பலதார_மணம்&oldid=3742336" இலிருந்து மீள்விக்கப்பட்டது