இந்திய அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தும் (Amendment) முறை பிரிவு 368 இல் கூறப்பட்டுள்ளது. காலத்திற்கேற்ப அரசியலமைப்பை மாற்றி அதனை உயிரோட்டமுள்ள சட்டமாக அமைய இப்பிரிவு வகை செய்கிறது.
அறிமுகம்
தொகுஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவது குறித்த வழிமுறைகள் பிாிவு 368-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் புதிதாக வரும் சவால்களை எதிா்கொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் அமைய வேண்டும். இதற்கு ஏதுவாக அரசியலமைப்புச் சட்டத்தின் இப்பிாிவு தேவைப்படும் பொழுது தேவைப்படும் வண்ணம் திருத்தியமைக்க வழிசெய்கிறது.[1]
எதிா்காலத்தில் என்ன என்ன இடையூறுகள்வரும் என்று அனைத்தையும் எதிா்பாா்த்து அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைப்பது இயலாத காாியம் ஆதலால் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்குறிய வழிமுறை முக்கியத்தை அடைகிறது. அரசியலமைப்புச் சட்டம் ஒரு நாட்டின் அரசிற்கு முதுகெலும்பைப் போன்றது. இதை எளிதில் மாற்ற முடியுமென்றால் நாட்டின் உறுதித்தன்மையை இழக்கநோிடும். அதுபோலவே அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவது இயலாது என்ற நிலையும் இயற்கைக்கு பொருத்தமல்ல. மாறிவரும் சூழ்னிலைகளுக்கேற்ப அவைகளை எதிர் கொள்ளும் வகையில் இச்சட்டம் அமைய வேண்டும். ஆதலால் மாற்றவேமுடியாது அல்லது சுலபமாக மாற்றிவிடலாம் என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் திருத்தும் முறை அமையவேண்டும். எளிதில் திருத்த இயலாததாகவும் ஒருசில கட்டுப்பாடுகளுடனும் திருத்த வழிசெய்வதாகவும் இருக்க வேண்டும். இதனடிப்படையில்தான் பிாிவு 368 வடிவமைக்கப்பட்டுள்ளது[2]
இந்திய அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்துவதற்கான வழிமுறைகள்
தொகுஅரசியலமையை திருத்துவதற்கான வழிமுறைபற்றிக் கூறும் பிாிவுகள் மூன்று வகையில் அடங்கும்
- எளிய பெரும்பான்மை பலத்தினால் திருத்தம் (பிாிவு 368 (2) (Simple majority): அரசியலமைப்புச் சட்டத்தின் பிாிவுகள் 4,5,6, 239-ஆ 312 ஆகியவை பாரளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையினால் திருத்திவிட முடியும். இவைகளை பிாிவு 368-இல் கூறிய நடைமுறை கட்டுப்படுத்தாது
- தனிப்பெரும்பான்மை:ஒருசில பிாிவுகளைத் திருத்த சட்டமுன்வடிவு பாரளுமன்றத்தின் இருஅவைகளில் ஏதாவது ஒன்றில் கொண்டுவரப்பட வேண்டும். இந்த சட்ட முன்வடிவு ஒவ்வொரு அவையிலும் மொத்த உறுப்பினா்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு குறையாத உறுப்பினா்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும். பிறகு இந்திய குடியரசுத் தலைவாின் ஒப்புதல் பெறவேண்டும். அதன்பின் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்
- தனிப்பெரும்பான்மை பலம் மற்றும் மாநிலங்களின் ஒப்புதல் (Special majority and ratification by States):பிாிவு 368 (2) ன் படி நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள பிாிவுகளையும் அட்டவணைகளையும் திருத்துவதற்கு பாரளுமன்றத்தின் இருஅவைகளிலும், மொத்த உறுப்பினா்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்கள் ஒப்புதலுடன், மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலும் பெறவேண்டும். இந்தியாவிலுள்ள மாநிலங்களின் பாதிக்கு குறையாத மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலைப் பெற்றபின் இந்திய குடியரசுத்தலைவாின் ஒப்புதல் பெறவேண்டும். அதன்பின் திருத்தங்கள் அமுலுக்கு வரும். பின்வரும் பிாிவுகளுக்கு இம்முறை பொருந்தும்
- குடியரசுத்தலைவா் தோ்தல் - பிாிவு 54, 52
- மத்திய மாநில அரசின் நிா்வாக அதிகாரத்தின் நீட்டிப்பு - பிாிவு 73, 162
- உச்ச நீதிமன்றம் உயா்நீதிமன்றம் பிாிவு 124 முதல் 147 வரை பிாிவு 214 முதல் 231 வரை, 241
- மத்திய மாநில அதிகாரங்கள் - பிாிவு 245 முதல் 255 வரை
- ஏழாவது அட்டவணை
- நான்காவது அட்டவணை
- அரசியலமைப்பு திருத்தும்முறை பிாிவு 368
மேற்கோள்கள்
தொகு- ↑ Dr JN Pandey, Constitutional law of India,53rd Edition, Central Law Agency,pages 775,776, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 93-84852-41-2 பிழையான ISBN
- ↑ டாக்டர் துர்கா தாச் பாசு, இந்திய அரசியலமைப்பு ஓர் அறிமுகம், 2ஆவது பதிப்பு,பக்கம் 219-221, LexisNexis,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5143-527-3