இந்திய செவிலியர் கல்விக் குழு
இந்தியாவில் செவிலியர் (Nursing) பயிற்சி மற்றும் அது தொடர்பான கல்வி நிறுவனங்களுக்கான அனுமதி வழங்கும் அமைப்பாக புதுடெல்லியிலுள்ள இந்திய செவிலியர் குழு செயல்பட்டு வருகிறது.
பாடப் பிரிவுகள்
தொகுஇந்திய செவிலியர் குழுமம் கீழ்காணும் பாடப்பிரிவுகளுக்கு அனுமதியை வழங்குகிறது. இந்தப் பாடப்பிரிவுகளுக்கான நுழைவுத்தகுதி, பயிற்சிக் காலம் தேர்வு நடத்தும் அமைப்புகள் மற்றும் பதிவு குறித்த அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
வ.எண் | பாடப்பிரிவு | நுழைவுத் தகுதி | பயிற்சிக்காலம் | தேர்வுகள் | பதிவுமுறை |
---|---|---|---|---|---|
1 | செவிலியர் உதவிப் பயிற்சி | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி | 2 வருடங்கள் | மாநிலச் செவிலியர் குழு | மாநிலச் செவிலியர் குழு |
2 | செவிலியர் பொதுப் பயிற்சி | 10 + 2 ஆம் வகுப்பு (கலை அல்லது அறிவியல்) தேர்ச்சி | 3.5 வருடங்கள் | மாநிலச் செவிலியர் குழு/மாநிலத் தேர்வு வாரியம் | மாநிலச் செவிலியர் குழு |
3 | இளம்நிலை அறிவியல் (செவிலியர்-அடிப்படை) | 10 + 2 ஆம் வகுப்பு (அறிவியல்) தேர்ச்சி | 4 வருடங்கள் | பல்கலைக்கழகம் | |
4 | இளம்நிலை அறிவியல் (செவிலியர்-முதுநிலை அடிப்படை) | 10 +2 ஆம் வகுப்பு (அறிவியல்) தேர்ச்சி/ செவிலியர் பொதுப் பயிற்சி தேர்ச்சி | 2 வருடங்கள் (நேரடிகல்வி) / 3 வருடங்கள் (தொலைகல்வி) | பல்கலைக்கழகம் | |
5 | முதுநிலை அறிவியல் (செவிலியர்) | இளம்நிலை அறிவியல் (செவிலியர்) தேர்ச்சி & 2வருடங்கள் அனுபவம் | 2 வருடங்கள் | பல்கலைக்கழகம் | |
6 | ஆய்வியல் நிறைஞர் (செவிலியர்) | முதுநிலை அறிவியல் (செவிலியர்) | 1 வருடம் (முழு நேரம்) / 2 வருடங்கள் (பகுதி நேரம்) | பல்கலைக்கழகம் | |
7 | முனைவர் (செவிலியர்) | முதுநிலை அறிவியல் (செவிலியர்)/ஆய்வியல் நிறைஞர் (செவிலியர்) | 1 வருடம் (முழு நேரம்) / 2 வருடங்கள் (பகுதி நேரம்) | பல்கலைக்கழகம் |
நுழைவுத் தகுதிகள்
தொகுஇந்தியாவில் செவிலியர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் செவிலியர் கல்விக்கான நுழைவுத் தகுதிகளை இந்திய செவிலியர் குழு நிர்ணயித்துள்ளது.
செவிலியர் உதவிப் பயிற்சி
தொகு- செவிலியர் உதவிப் பயிற்சிக்கு (Assitant Nursing and Midwifery -A.N.M) விண்ணப்பிப்பவர்களுக்குக் கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்.
- வயது15 -லிருந்து 35 -க்குள் இருக்க வேண்டும்
- குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக மத்தியப் பள்ளிக் கல்வி வாரியம் அல்லது மாநிலக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் 10 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அல்லது, அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இத்தேர்வில் குறைந்தபட்சமாக 45 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- மருத்துவத் தகுதியில் திருப்தியடைந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
செவிலியர் பொதுப் பயிற்சி
தொகு- செவிலியர் பொதுப் பயிற்சிக்கு (General Nursing and Midwifery - G.N.M) விண்ணப்பிப்பவர்களுக்குக் கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்.
- வயது17 -லிருந்து 35 -க்குள் இருக்க வேண்டும். செவிலியர் உதவிப் பயிற்சி பெற்றவர்களுக்கு வயது தடையில்லை.
- குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக மத்தியப் பள்ளிக் கல்வி வாரியம் அல்லது மாநிலக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் இயற்பியல் , வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களைக் படித்துத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இத்தேர்வில் குறைந்தபட்சமாக 45 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது,
10 + 2 ஆம் வகுப்புத் தேர்வில் செவிலியர் உதவிப் பயிற்சிக்கான தொழிற்பிரிவில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இத்தேர்வில் குறைந்தபட்சமாக 45 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது,
10 + 2 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியுடன் செவிலியர் உதவிப் பயிற்சிக்கான தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
அல்லது
இதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
- மருத்துவத் தகுதியில் திருப்தியடைந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சேர்க்கை நடைபெறும்.
- இந்த சேர்க்கை நடைமுறைகளுடன் மாநில செவிலியர் குழு / செவிலியர் தேர்வு வாரியம் நிர்ணயித்துள்ள தகுதிகள்.
இளம்நிலை அறிவியல் (செவிலியர்-அடிப்படை)
தொகு- இளம்நிலை அறிவியல் (செவிலியர்- அடிப்படை) பட்டப்படிப்பிற்கு (Basic B.Sc., Nursing) விண்ணப்பிப்பவர்களுக்குக் கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்.
- வயது17 -க்குக் குறையாமலிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக மத்தியப் பள்ளிக் கல்வி வாரியம் அல்லது மாநிலக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் 10 + 2 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது,
பல்கலைக் கழகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட துறையின் பள்ளியில் 10 + 2 ஆம் வகுப்புக்கு இணையான தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
- மேற்குறிப்பிட்ட 10 + 2 தேர்வில் அல்லது இணையான தேர்வில் இயற்பியல் , வேதியியல் , உயிரியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களைப் படித்துத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இத்தேர்வில் குறைந்தபட்சமாக 50 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- பல்கலைக்கழகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.
இளம்நிலை அறிவியல் (செவிலியர்-முதுநிலை அடிப்படை)
தொகு- இளம்நிலை அறிவியல் (செவிலியர்- முதுநிலை அடிப்படை) பட்டப்படிப்பிற்கு (Post Basic B.Sc., Nursing) விண்ணப்பிப்பவர்களுக்குக் கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக மத்தியப் பள்ளிக் கல்வி வாரியம் அல்லது மாநிலக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் 10 + 2 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1986 ஆம் ஆண்டுக்கு முன்பு 10 + 1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கல்வித்தகுதி போதுமானது.
- செவிலியர் பொதுப் பயிற்சியில் சான்று பெற்று மாநில செவிலியர் பதிவுக் குழுவில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண் செவிலியர்கள் இந்திய செவிலியர் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில பயிற்சிகளில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை சேர்க்கையின் போது காண்பிக்க வேண்டும்.
- மருத்துவத் தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
முதுநிலை அறிவியல் (செவிலியர்)
தொகு- முதுநிலை அறிவியல் (செவிலியர்) பட்டப்படிப்பிற்கு (M.Sc., Nursing) விண்ணப்பிப்பவர்களுக்குக் கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்.
- மாநிலச் செவிலியர் பதிவு வாரியத்தில் செவிலியராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
- இளம்நிலை அறிவியல் (செவிலியர்- அடிப்படை) (Basic B.Sc., Nursing), இளம்நிலை அறிவியல் (செவிலியர்- முதுநிலை அடிப்படை) (Post Basic B.Sc., Nursing) தேர்வில் குறைந்தது 55 சதவிகிதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
- இளம்நிலை அறிவியல் (செவிலியர்- அடிப்படை) (Basic B.Sc., Nursing), இளம்நிலை அறிவியல் (செவிலியர்- முதுநிலை அடிப்படை) (Post Basic B.Sc., Nursing) படிப்புகள் இந்திய செவிலியர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
- இளம்நிலை அறிவியல் (செவிலியர்- அடிப்படை) தேர்வுக்குப் பின் குறைந்தது ஒரு வருடம் வேலை அனுபவம் அடைந்திருக்க வேண்டும்.
- இளம்நிலை அறிவியல் (செவிலியர்- முதுநிலை அடிப்படை) தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வுக்கு முன் அல்லது பின்பாக ஒரு வருடம் வேலை அனுபவம் அடைந்திருக்க வேண்டும்.
- மருத்துவத் தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவிகிதம் வரை சலுகை அளிக்கப்படும்.
- நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இருக்கும்.
ஆய்வியல் நிறைஞர் (செவிலியர்)
தொகு- ஆய்வியல் நிறைஞர் (செவிலியர்) பட்டப்படிப்பிற்கு (M.Phil., Nursing) விண்ணப்பிப்பவர்களுக்குக் கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்.
- முதுநிலை அறிவியல் (செவிலியர்) பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
- மருத்துவத் தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
- நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இருக்கும்.
முனைவர் (செவிலியர்)
தொகு- முனைவர் (செவிலியர்) பட்டப்படிப்பிற்கு (Ph.d., Nursing) விண்ணப்பிப்பவர்களுக்குக் கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்.
- ஆய்வியல் நிறைஞர் (செவிலியர்) அல்லது முதுநிலை அறிவியல் (செவிலியர்) பட்டப்படிப்பில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
- முதுநிலை அறிவியல் (செவிலியர்) பட்டப்படிப்பில் தேர்ச்சி அடைந்தவர்கள் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வெளி இணைப்பு
தொகு- இந்திய செவிலியர் குழுவின் அதிகாரப்பூர்வ தளம் பரணிடப்பட்டது 2008-12-22 at the வந்தவழி இயந்திரம்