இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், அகர்தலா

அகர்தலாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம்

அகர்தலாவிலுள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Information Technology, Agartala) இந்தியாவில் இலாப நோக்கற்ற பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் நிறுவப்பட்ட 20 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். அகர்தலாவிற்கு அருகிலுள்ள போத்யங்னாகரத்து கிராமத்தில் 52 ஏக்கர் பரப்பளவில் நிரந்தர வளாகத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, இந்நிறுவனம் அகர்தலா தேசிய தொழில்நுட்ப நிறுவன வளாகத்திற்குள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.[1][2]

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், அகர்தலா
Indian Institute of Information Technology, Agartala
Other name
ஐ.ஐ.ஐ.டி
வகைபொது மற்றும் தனியார் கூட்டாண்மை
உருவாக்கம்2018; 3 ஆண்டுகளுக்கு முன்
பணிப்பாளர்எச்.கே.சர்மா
கல்வி பணியாளர்
50
மாணவர்கள்தோராயமாக 300
அமைவிடம், ,
இணையதளம்iiitagartala.ac.in

அகர்தலா நகரில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நிறுவுவதற்கான திட்டம் 2012 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது.[2] 2020 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Deb, Debraj (2018-06-29). "Tripura IIIT to start from NIT campus". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. 2.0 2.1 "Tripura IIIT to start functioning this year, says state education minister". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-06-29. பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
  3. "IIIT Laws (Amendment) Bill 2020 passed in Rajya Sabha; know about the bill". The Indian Express (in ஆங்கிலம்). 2020-09-22. பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.