இந்திய விடுதலை இயக்கத்தில் முஸ்லிம்கள்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

இந்திய விடுதலை இயக்கத்தில் முஸ்லீம்கள் சிறப்பு பங்காற்றியுள்ளனர். இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம் [1] ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை முகலாய மன்னர்கள் ஆண்டனர். இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் ஒளரங்கசீப் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு வலிமை குன்றியது. இந்த வீழ்ச்சிதான் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமிக்க வழி செய்தது. இவர்களுக்கெதிராக நடைபெற்ற வீரம் செறிந்த போர்களில் முஸ்லிம்கள் பங்கு கொண்டனர்.[2]

குஞ்சாலி மரைக்காயர்கள்

தொகு

போர்ச்சுகீசியர்கள்தான் முதன் முதலில் இந்தியாவின் மலபார் கடலோரப் பகுதிகளை கடற்படையுடன் முற்றுகையிட்டபோது, கேரளாவின் பகுதிகளை ஆட்சி செய்து வந்த குஞ்சாலி மரைக்காயர்கள்தான் அவர்களை படு தோல்வி அடையச் செய்தனர். முதலாம் குஞ்சாலி மரைக்காயர், இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் எனத் தலைமுறையாக தொடர்ந்த விடுதலைப் போரில் அனைவரும் தங்கள் இன்னுயிரை நீத்தனர். 16ஆம் நூற்றாண்டிலேயே போர்த்துகீசியர்களுக்கு எதிராக போரிட்டவர்கள் இவர்களாவர்.[3]

சிராஜுத் தௌலா

தொகு

17ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிளாசி என்ற இடத்தில் கடும் போர் நடத்தி ஆங்கிலேயர்களை திணறடித்தவர் சிராஜுத் தௌலா. சூழ்ச்சிகள் மூலம் துரோகிகளின் துணையுடன் சிராஜுத் தௌலா கைது செய்யப்பட்டார். அவரைப் பணியவைக்க ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அந்த மாவீரனை கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டு கொன்றனர்.[4]

மருதநாயகம்

தொகு

பிரெஞ்சுக்காரர்கள் படையில் சாதாரண வீரனாக இருந்து தம் திறமைகளால் படைத் தளபதியானவர் மருதநாயகம். இஸ்லாத்தில் இணைது கொண்டு யூசுப்கான் என்றஅடையாளத்துடன் பின்னாளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார். நவீன ஆயுதங்களுடன் கூடிய ஆங்கிலப் படை மருதநாயகத்தின் வீரத்தின் முன் பலமுறை தோற்றது. பின்னர் சூழ்ச்சியால் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 15.10.1764ல் தூக்கிலிடப்பட்டார்.[5]

ஹைதர் அலி

தொகு

17ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் விடுதலை அதிர்வுகளை முதலில் தொடங்கியவர் ஹைதர் அலி அவர்கள்தான். அவர் நடத்திய விடுதலைப் போர் 'முதலாம் கர்நாடகப் போர்' என வர்ணிக்கப் படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலி. பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர் விளங்கினார்.[6] ஆங்கிலேயர்களை நாலா புறமும் திணறடித்த ஹைதர் அலி இறுதியி எதிரிகளால் கொல்லப்பட்டார்.[7]

திப்பு சுல்தான்

தொகு

[8] திப்பு சுல்தான் கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றியை அடைந்தார். கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் திப்பு சுல்தான் வெற்றியடைந்தார். 1782, டிசம்பர் 6-ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782, டிசம்பர் 26 ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.[9]

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போரில் துவக்கத்தில் வெற்றி பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார். ஆங்கிலேயர்கள் லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இறுதியில் போர்க்களத்தில் திப்புசுல்தான் உயிர்துறந்தார்.[10]

பேகம் அசரத் மஹால்

தொகு

பேகம் அசரத் மகால் 1857 இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போரிட்ட வீரப்பெண்மணி ஆவார். அசரத் பேகம் ஆவாதில் உள்ள ஃபைசாபாத்தில் பிறந்தவர்.[11] எனவே ஆவாத் பேகம் என்றும் அறியப்பட்டார்.

1857–58 கிளர்ச்சியின் போது பேகம் தனது ஆதரவாளர்களோடு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போரிட்டார்.

மேற்கோள்

தொகு
  1. குஷ்வந்த்சிங், 'இல்லஸ்டிரேட் வீக்லி', நாள்- 29.12.1975)
  2. -ஆசிரியர், மக்கள் உரிமை வார இதழ், சென்னை.
  3. http://www.tamilislamicaudio.com/articles/detail.asp?aid=49
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-04-19. பார்க்கப்பட்ட நாள் 2012-05-25.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-01. பார்க்கப்பட்ட நாள் 2012-05-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. ஜவஹர்லால் நேரு :‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73
  7. http://en.wikipedia.org/wiki/Hyder_Ali
  8. http://konulampallampost.blogspot.in/2011/04/blog-post_4921.html
  9. http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/
  10. https://groups.google.com/forum/#!msg/panbudan/QdNbHU2Y5ZE/qHMSUnFeeRsJ
  11. "Begum Hazrat Mahal Summary & Analysis". BookRags.com. 2010-11-02. பார்க்கப்பட்ட நாள் 2012-10-18.

வெளியிணைப்புகள்

தொகு