இந்துக் கோயில் மண்டபங்கள்

இந்துக் கோயில் மண்டபங்கள் என்பது இந்து சமயக் கோயில்களில் கட்டப்படுகின்ற மண்டபங்கள் ஆகும். இந்த மண்டபங்கள் சிறு கோயில்களில் குறைவான எண்ணிக்கையிலும், அரசர்கள் கட்டிய பெருங் கோயில்களில் அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகின்றன.

வகைகள் தொகு

இந்து சமயக் கோயில்களில் உள்ள மண்டபங்கள் ஆதார மண்டபங்கள், எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்தப்படும் மண்டபங்கள், பயன்பாட்டு ரீதியாக வகைப்படுத்தும் மண்டபங்கள் என பல பிரிவுகளைக் கொண்டுள்ளன.

ஆதார மண்டபங்கள் தொகு

இந்து சமயக் கோயில்களில் காணப்படுகின்ற கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், நீராட்டு மண்டபம், அலங்கார மண்டபம், சபா மண்டபம் என ஆறு மண்டபங்களும் ஆதார மண்டபங்கள் என்று அழைக்கப்படுகின்றன. [1]

எண்ணிக்கை அடிப்படியில் மண்டபங்கள் தொகு

மண்டபங்களின் தூண்களின் அடிப்படையில் மண்டபங்கள் நான்கு கால் மண்டபம், ஆறு கால் மண்டபம் மற்றும் ஆயிரம் கால் மண்டபம் என்று வகைப்படுத்தப்படுகின்றன.[1]

பிற மண்டபங்கள் தொகு

இந்த மண்டப வகைகளைத் தவிர்த்து வாகன மண்டபம், நடன மண்டபம், நாடக மண்டபம், புராண மண்டபம், தருக்க மண்டபம், ஊஞ்சல் மண்டபம், முத்தி மண்டபம், நித்த மண்டபம், வசந்த மண்டபம், நவராத்திரி மண்டபம், கொடிக்கம்ப மண்டபம்,நீராழி மண்டபம், தேர்முட்டி மண்டபம் போன்றவைகள் உள்ளன.[1]

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "D061151".