இந்து சமயக் கடவுளின் வாகனங்கள்

யானை வாகனம்

இந்து சமயத்தில் ஒவ்வொரு இறைவனுக்கும் அவர்களுக்கென தனித்த வாகனம் உள்ளது. எனினும் ஒரே இறைவனுக்கு பல வாகனங்களும் உள்ளன. இந்த வாகனங்கள் மரத்தினாலும், உலோகங்களினாலும் செய்யப்பட்டு வாகன மண்டபம் என்ற கோவிலின் ஒரு பகுதியில் வைக்கப்படுகின்றன. கோவில் திருவிழாக்களின் போது உற்சவர் இந்த வாகனங்களில் வீதியுலா வருகிறார்.

இந்த வாகனங்கள் பெரும்பாலும் விலங்கு, பறவையாக இருப்பினும், கற்பக விருட்சம், காமதேனு போன்ற கற்பனை உயிரினங்களும் உள்ளன.

தோற்றம்தொகு

அரசர்களைப் போல இறைகளுக்கும் கொடிகள் உள்ளன. அவைகளில் குறிப்பிடப்பட்ட உயிரினங்கள் பிற்காலத்தில் வாகனங்களாக மாற்றப்பட்டன என்றொரு கருத்தாக்கம் உள்ளது. உதாரணமாக சிவபெருமானின் கொடியாக குறிப்பிடப்படும் விடைக் கொடியில் உள்ள காளையானது சிவபெருமானின் வாகனமாக உள்ளது.

மர வாகனங்கள்தொகு

இந்து சமய பெருங்கோயில்களில் தொடக்க காலத்தில் இறை வாகனங்கள் மரத்தினால் செய்யப்பட்டன. அவற்றை இயற்கை சீற்றங்களிலிருந்து காக்க மர வாகனங்களின் மீது உலோகத் தகடுகள் சேர்க்கப்பட்டன.

பிற்காலத்தில் இறை வாகனங்கள் உலோகங்களால் செய்யப்பட்டு வருகின்றன.

இறை வாகனங்களின் பட்டியல்தொகு

வ.எண் இறைவன் பெயர் வாகனம்
1 சிவன் காளை
2 விஷ்ணு கருடன்
3 சுப்ரமணியன் மயில், யானை
4 கணபதி மூஞ்சூறு
5 ஐயப்பன் புலி
6 இந்திரன் வெள்ளை யானை
7 மன்மதன் தேர்
8 இரதி தேவி அன்னம்
9 துர்க்கை சிங்கம்

திசை காவலர் வாகனங்கள்தொகு

இது போல் இந்து சமயப் புராணங்களில் திசைக்காவலர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வாகனம் உள்ளது.

வ.எண் திசைக்காவலர் பெயர் வாகனம்
1 இந்திரன் வெள்ளை யானை
2 வருண பகவான் மகரம்
3 வாயு பகவான் மான்
4 எமன் எருமைக்கிடா
5 அக்னி பகவான் ஆட்டுக்கிடா
6 குபேரன் மனிதன்
7 ஈசானன் ரிசபம்
8 நிர்ருதி சவம்

பிற வாகனங்கள்தொகு

இவற்றைத் தவிர பத்துநாட்கள் நடைபெறும் விழாக்காலங்களில் விழாநாயகர் (உற்சவர்) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் திருவுலா வருதலும் உண்டு. இவற்றில் கற்பக மரம், சூரிய பிரபை, சந்திரப் பிரபை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றையும் காண்கதொகு

ஆதாரங்கள்தொகு