முதன்மை பட்டியைத் திறக்கவும்

இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்

பதவிதொகு

தகுதிகள்தொகு

  • இந்தோனேசியக் குடிமகனாகவோ குடிமகளாகவோ இருக்க வேண்டும்.
  • குறைந்தது 30 வயதை அடைந்திருக்க வேண்டும்.
  • தனியார் நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கக் கூடாது.
  • வாக்களிக்கும் உரிமை பெற்றிருக்க வேண்டும்.
  • மற்றொரு நாட்டின் குடியுரிமையை பெற்றிருக்கக் கூடாது
  • நாட்டிற்கு கேடு விளைவித்திருக்கக் கூடாது.
  • உடல்நலக் குறைவோ, மனநலக் குறைவோ இருக்கக் கூடாது.
  • அரசியல் கட்சியோ, கூட்டணியோ வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும்.
  • குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடாது
  • பள்ளிக் கல்வி வரையாவது கற்றிருக்க வேண்டும்.

தேர்வுமுறைதொகு

பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் குடியரசுத் தலைவரும் துணைக் குடியரசுத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

உறுதிமொழிதொகு

தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவியேற்கும் முன் உறுதிமொழி ஏற்க வேண்டும்.

எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தோனேசிய குடியரசுத் தலைவர் பதவியை ஏற்று, என்னால் முடிந்தவரையில், சிறப்பாக பணியாற்றுவேன் என்றும், அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்தி, அதன் வழி நடப்பேன் என்றும், நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்றும் அல்லாவின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.

பதவிக்காலம்தொகு

இவர் ஐந்தாண்டு காலம் பதவியில் இருக்கலாம். மீண்டும் ஒரு முறை மட்டுமே தேர்ந்தெடுக்கப்படலாம்.

இருப்பிடம்தொகு

இவர் பொறுப்பேற்ற பின் அரசின் தலைமையகம் அமைந்துள்ள நகரத்தில் குடியிருக்க வேண்டும். இவருக்கான தனி இருப்பிடம் அங்கே உண்டு.

அதிகாரங்கள்தொகு

அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் உண்டு. அவசரகாலத்தில் சட்டங்களை இயற்றும் அதிகாரமும் உண்டு. நிலப்படை, வான்படை, கப்பற்படை ஆகியவற்றிற்கும் தலைவர் இவரே. எனவே, இவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரமும் உண்டு. மற்ற நாடுகளுடன் போர் தொடுக்கவும், அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உரிமை உண்டு. பிற நாட்டுத் தூதுவர்களை ஏற்கவும், தம் நாட்டுத் தூதுவர்களை நியமிக்கவும் அதிகாரம் உண்டு. குற்றவாளிகளுக்கு கருணை வழங்கவும், தகுதியுடையோருக்கு விருதுகளும், பட்டப்பெயர்களும் வழங்கும் அதிகாரமும் உண்டு.

இவர் பிரதமரை நியமிப்பார். அரசைக் கலைத்துவிட்டு, அடுத்த 30 நாட்களுக்குள் தேர்தலை நடத்துமாறு கட்டளையிடலாம். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளை நியமிக்கலாம்.

துணைதொகு

குடியரசுத் தலைவருக்கு உதவியாக துணைக் குடியரசுத் தலைவரும், அமைச்சர்களும் செயல்படலாம். தேவைப்படும் பட்சத்தில், ஆலோசனைக்குழுவிடமும் ஆலோசனை பெறலாம்.

பதவி நீக்கமும் அடுத்த பதவியாளரும்தொகு

1945 அரசமைப்புச் சட்டம்: குடியரசுத் தலைவராக இருப்பவர் இறந்தாலோ,, பதவிவிலகினாலோ, தன் பணிகளை செய்ய இயலாத நிலையில் இருந்தாலோ, துணைக் குடியரசுத் தலைவர் இவருக்கான அதிகாரங்களை பெற்று, இவரது பணிகளை நிறைவேற்றுவார்.

துணைக் குடியரசுத் தலைவரும் செயலாற்ற இயலாத நிலையில் இருந்தாலோ, இறந்திருந்தாலோ, வெளியுறவு அமைச்சர், உள்துறை அமைச்சர், இராணுவ அமைச்சர் ஆகிய மூவரும் இணைந்து அரசை வழிநடத்துவர். கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு நியமிக்கப்பட்டு, அதிக வாக்குகள் பெற்ற முதல் இரு வேட்பாளார்களில் ஒருவரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.[1] செயலாற்ற முடியாத நிலையில் இருக்கும் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். குடியரசுத் தலைவரின் மீது ஊழல் குற்றச்சாற்று இருந்தால் உச்சநீதிமன்றம் விசாரிக்கலாம்.

குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தொகு

இணைப்புகள்தொகு

சான்றுகள்தொகு