இந்தோனேசியாவில் சுற்றுலா
இந்தோனேசியாவில் சுற்றுலா (Tourism in Indonesia) என்பது இந்தோனேசிய பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். அத்துடன் அதன் அந்நிய செலாவணி வருவாயின் குறிப்பிடத்தக்க ஆதாரமாகவும் இருக்கிறது. 2017ஆம் ஆண்டில் உலகச் சுற்றுலாத் துறையில் இந்தோனேசியா 20வது இடத்தில் இருந்தது. இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒன்பதாவது சுற்றுலாத் துறையாகவும், ஆசியாவில் மூன்றாவது வேகமாக வளர்ந்து வரும் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா இடமாகவும் உள்ளது . [1]
வளர்ச்சி
தொகு2018 ஆம் ஆண்டில், உலகின் 10 நகரங்களில் தென்பசார், ஜகார்த்தா மற்றும் பத்தாம் ஆகியவை சுற்றுலாவில் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன. முறையே 32.7, 29.2 மற்றும் 23.3 சதவீதம். [2] மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதத்தை சுற்றுலாத் துறையிலிருந்து அடைய நாடு திட்டமிட்டுள்ளது. மேலும் 2019க்குள் சுமார் 20 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. [3] சுற்றுலாத்துறை சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி துறைகளில் 4வது இடத்தில் உள்ளது. [4]
பார்வையாளர்கள்
தொகு2019 ஆம் ஆண்டில், இந்தோனேசியா 16.10 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவுசெய்தது. இது 2018ஐ விட 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டில், இந்தோனேசியாவிற்குள் 9.73 மில்லியன் சர்வதேச பார்வையாளர்கள் வருகை புரிந்தனர். சராசரியாக 7.5 இரவுகளில் விடுதிகளில் தங்கியிருந்தனர. மேலும் அவர்களின் வருகையின் போது ஒரு நபருக்கு சராசரியாக 1,142 அமெரிக்க டாலர் அல்லது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 152.22 அமெரிக்க டாலர் செலவிட்டனர். [3] சிங்கப்பூர், மலேசியா, சீனா, ஆத்திரேலியா மற்றும் யப்பான் ஆகியவை அதிக அளவில் இந்தோனேசியாவிற்கு வருகை தரும் முதல் ஐந்து ஆதார நாடுகளாகும்.
புதிய திட்டங்கள்
தொகு2016 ஆம் ஆண்டில், அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்களை தங்கள் நாட்டுக்கு அதிக அளவில் ஈர்ப்பதன் மூலம் சுற்றுலா வளர்ச்சியில் அரசாங்கம் அதிக முதலீடு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. அரசாங்கம் 10 இடங்களுக்கு பின்வருமாறு முன்னுரிமை அளித்துள்ளது: போரோபுதூர், நடு சாவகம்; மண்டலிகா, மேற்கு நுசா தெங்கரா ; லாபன் பாஜோ, கிழக்கு நுசா தெங்கரா; புரோமோ-தெங்கர்-செமரு, கிழக்கு சாவகம்; ஆயிரம் தீவுகள், ஜகார்த்தா; தோபா, வடக்கு சுமாத்ரா; வகாடோபி, தென்கிழக்கு சுளாவேசி; தன்சங் லெசுங், பந்தன்; மொரோடாய், வடக்கு மளுக்கு; மற்றும் தஞ்சங் கெலாயாங், பெலிதுங். போன்றவை தி ஜகார்த்தா போஸ்டில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி, 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளால் 275 மில்லியன் பயணங்களை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது. [5] அரசாங்கம் சாத்தியமான முதலீட்டாளர்களிடமிருந்து உறுதிகளைப் பெற்றுள்ளது. 10 பகுதிகளில் 3 இடங்களில் தங்குமிடம், கடற்கரை, சுற்றுச்சூழல் சுற்றுலா வசதிகள் போன்ற துறைகளில் மொத்தம் 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்வதற்கு முடிவெடுத்துள்ளது. லோன்லி பிளானட் என்ற பயண தளத்தின் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா ஏழாவது இடத்தில் உள்ளது. [6] [7] டிரிப் அட்வைசர் என்ற பயண தளத்தால் 2018 ஆம் ஆண்டில் உலகின் முதல் 25 இடங்களில் நாடு நான்காவது இடத்தில் இருந்தது. [8]
-
சிங்காரக் ஏரி, மேற்கு சுமத்ரா
-
கெலிமுட்டு மலை ஏரிகள், கிழக்கு நுசா தெங்கரா
-
பங்கந்தரன் கடற்கரை, மேற்கு ஜாவா
-
கவா புதி, மேற்கு ஜாவா
-
https://nyiatourtravel.com/rental-mobil-borobudur%7Cபோரோபுதூர்[தொடர்பிழந்த இணைப்பு] கோயில், யோககர்த்தா
-
பரங்ட்ரிடிஸ் கடற்கரை, யோககர்த்தா
-
தொலைதூர பின்னணியில் லோம்போக்குடன் கில்லி மெனோவில் உள்ள கடற்கரை
-
பிரதான துறைமுகமான கரிமுஞ்சாவாவில் மீன்பிடி படகுகள்
-
தெர்னேட், வடக்கு மளுக்கு
-
கெடோங் சாங்கோ கோயில்கள், உங்கரன், மத்திய ஜாவா
-
அம்பராவா இரயில்வே அருங்காட்சியகம், மத்திய ஜாவா
-
திரோவுலன் தொல்பொருள் தளம், கிழக்கு ஜாவா
-
சரோண்டே தீவு
-
புனக்கன் கடல் பூங்கா, வடக்கு சுலவேசி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Indonesian tourism set to beat Thailand in 5 years". http://www.thejakartapost.com/news/2018/10/23/indonesian-tourism-set-to-beat-thailand-in-5-years.html.
- ↑ Hilda B Alexander (September 26, 2019). "Denpasar, Jakarta, dan Batam, Top Ten Pertumbuhan Turis Terbesar Dunia".
- ↑ 3.0 3.1 Indonesia Investments. "2013's Growing Number of Tourists in Indonesia Meets Government Target". Indonesia-investments.com. பார்க்கப்பட்ட நாள் 11 June 2015.
- ↑ Muhammad Hasanudin (5 September 2013). "Devisa Pariwisata 2013 Ditargetkan 10 Miliar Dollar AS" (in Indonesian). Jakarta: Kompas.com. பார்க்கப்பட்ட நாள் 24 December 2013.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Government prioritizes tourism development in 10 regions". Thejakaratapost.com. பார்க்கப்பட்ட நாள் 23 August 2017.
- ↑ "Indonesia makes Lonely Planet's 2019 top-10 countries to visit". http://www.thejakartapost.com/travel/2018/11/04/indonesia-makes-lonely-planets-2019-top-10-countries-to-visit.html. பார்த்த நாள்: 4 November 2018.
- ↑ Purba, Agustinus. "Pariwisata Indonesia Terima Penghargaan dari Lonely Planet di WTM London – Berita Daerah" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-17.
- ↑ "Bali ranks 4th among TripAdvisor's top 25 global destinations". http://www.thejakartapost.com/travel/2018/11/28/bali-ranks-4th-among-tripadvisors-top-25-global-destinations.html. பார்த்த நாள்: 28 November 2018.
- ↑ Mark Elliott ... Indonesia.
மேலும் படிக்க
தொகு- Adams, Kathleen M. (2006). Art as Politics: Re-crafting Identities, Tourism and Power in Tana Toraja, Indonesia. Honolulu: University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-3072-4.
- Buckles, Guy (1996). The Dive Sites of Indonesia. New Holland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85368-598-4.
- Elliot, Mark (November 2003). Indonesia. Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-74059-154-2.
- Rush, James R. (1996). Java: A Travellers' Anthology. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-65-3082-4.
- McCarthy, John (1994). Are sweet dreams made of this? : Tourism in Bali and Eastern Indonesia. Indonesia Resources and Information Program. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-646-18791-0.
- McPhee, Colin (2000). A House in Bali. Victor Gollancz Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-593-629-7.
- Miller, George (1996). To The Spice Islands And Beyond: Travels in Eastern Indonesia. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-65-3099-9.
- Scidmore, E.R. (1986). Java: The Garden of the East. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-582596-9.
- Severin, Tim (1997). The Spice Island Voyage: In Search of Wallace. Abacus. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-349-11040-9.
- Shavit, David (2003). Bali and the tourist industry : a history, 1906–1942. Jefferson, N.C. : McFarland & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7864-1572-X.
- Vickers, Adrian (1994). Travelling to Bali: Four Hundred Years of Journeys. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-65-3081-6.
வெளி இணைப்புகள்
தொகு- Indonesia's official tourism website
- Wonderful Indonesia online travel guide பரணிடப்பட்டது 2019-08-09 at the வந்தவழி இயந்திரம்
- Indonesia Travel Wonderful Indonesia YouTube channel
- Indonesian Tourism Journalist