இந்தோ சசானியர்கள்

இந்தோ சசானியர்கள் அல்லது குசான சசானியர்கள் (Indo-Sassanids or Kushano-Sassanids) (ஆட்சிக் காலம்: கி பி 230 - 636) என்பவர்கள் பாரசீகச் சாசானியர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். குசானர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் இந்தோ சசானியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் வடமேற்கில் கி பி 3 - 4-ஆம் நூற்றாண்டில் தங்கள் ஆட்சியை நிறுவினர். கி பி 410-இல் ஹூணர்களின் படையெடுப்பால், தற்காலிக வீழ்ச்சி கண்ட இந்தோ சசானியர்கள், கி பி 565-இல் சாசானியர்கள், ஹூணர்களை வீழ்த்திய பின்னர், மீண்டும் தாங்கள் ஆண்ட நிலப்பரப்பை ஹூணர்களிடமிருந்து கைப்பற்றினர். அரபு இசுலாமியர்களின் தொடர் படையெடுப்பால் கி பி ஏழாம் நூற்றாண்டில் இந்தோ சசானியர்கள் வீழ்ச்சி அடைந்தவர்.[1]

முதலாம் ஹோர்மிஸ்ட் ஆட்சிக் காலத்தில் (265 – 295) ஆப்கனில் வெளியிடப்பட்ட நாணயம்
முதலாம் வர்கரன் காலத்தில் கி பி நான்காம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட நாணயம்

இவர்கள் ஆண்ட நிலப்பரப்புகள் தற்கால மேற்கு பாகிஸ்தான், கந்தகார் மற்றும் காபூல் ஆகும்.

வரலாறு தொகு

இந்தோ சாசானியர்கள் தொகு

 
இந்தோ சசானிய நாணயம்
 
இந்தோ சசானியர்களின் தங்க நாணயம்

சாசானியப் பேரரசர் முதலாம் ஷாப்பூர் காலத்தில் கி பி 230-இல், குசான் பேரரசின் ஒரு பகுதியான தற்கால மேற்கு பாகிஸ்தான், கந்தகார் பகுதிகளை கைப்பற்றிய சசானியப் பிரபுக்கள், குசானர்களின் மன்னர் என்ற பட்டப் பெயருடன் இந்தோ சாசானியர்கள் ஆண்டனர்.

புகழ் பெற்ற இந்தோ சசானிய மன்னர்கள் தொகு

  • முதலாம் அர்தசிர் (230 – 250)
  • முதலாம் பிரோஸ் (250 – 265)
  • முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா (265 – 295)
  • இரண்டாம் ஹோர்மிட்ஸ் (295 – 300)
  • இரண்டாம் பிரோஸ் (300 – 325)
  • இரண்டாம் ஷாப்பூர் (325)
  • முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வர்க்கரன் (c. 325 – 350)
  • மூன்றாம் பிரோஸ் (350 – 360)

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோ_சசானியர்கள்&oldid=2990227" இலிருந்து மீள்விக்கப்பட்டது