இன்கா பாலம்

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் உள்ள ஒரு பாலம்

இன்கா கயிற்றுப் பாலம் அல்லது கேஸ்வாசக்கா பாலம் (Inca rope bridge or Qeswachaka bridge ), தென் அமெரிக்காவின் பெரு நாட்டின், கன்காஸ் மாகாணத்தின், கியுகு மாவட்டத்தில், கூஸ்கோ பகுதியில் இரு மலைக்களுக்கிடையே பாயும் அபோரிமாக் ஆற்றின் மேல், இரு மலைகளை இணைக்க காய்ந்த புற்களை கயிறாக திரித்து, ஒவ்வொரு ஆண்டும் புதிய புற்களால் ஆன கயிறுகளைக் கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம் ஆகும். இப்பாலம் இன்கா பண்பாட்டுக் காலத்திலிருந்து 600 ஆண்டுகளாக கட்டப்படுகிறது. [1][2] அறிவு, திறமை மற்றும் சடங்காக கடந்த 600 ஆண்டுகளாக பாரம்பரியமாகத் தொடர்ந்து பெரு மக்களின் கூட்டு முயற்சியால் கேஸ்வாசக்கா பாலம் நிறுவப்படுவதால், யுனெஸ்கோ நிறுவனம், இப்பாலத்தை தனது பதிவேட்டில் 2013-இல் பதிவு செய்துள்ளது. [3]

இன்கா கயிற்றுத் தொங்கு பாலம்

கயிற்றுப் பாலம் அமைக்கும் முறை தொகு

பெரு மக்கள் பாரம்பரியச் சடங்காக, ஆண்டுதோறும், தங்களது கூட்டு முயற்சியல், இந்த கயிற்றுப் பாலத்தின் பழைய கயிறுகளை அப்புறப்படுத்தி, காய்ந்த புற்களாளான புது கயிறுகளைக் கொண்டு, அபோரிமாக் ஆற்றின் இரு கரைகளில் உள்ள மலைகளின் இரு பக்கமும் 124 நீள கயிறுகளால் கட்டுவார்கள். பெரு நாட்டின் இன்கா இன பெண்களால் மட்டும் ஒரு வகை காய்ந்த புற்களைக் கொண்டு கைகளால் நெய்து கயிறுகள் தயாரிக்கப்படுகிறது. பழைய கயிற்றுப் பாலத்தை நீக்கி, பெண்கள் தயாரித்த புதிய கயிறுகளைக் கொண்டு ஆண்கள் மட்டும், ஆற்றின் இரு கரைகளில் உள்ள மலைகளை இணத்து புதுப்பாலம் அமைப்பர். [4] [5]

படக்காட்சிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்கா_பாலம்&oldid=2800546" இலிருந்து மீள்விக்கப்பட்டது