இன்னா கபோனெங்கோ

உக்ரைனிய சதுரங்க வீராங்கனை

இன்னா கபோனெங்கோ (Inna Gaponenko) என்பவர் உக்ரைனிய பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டு சூன் மாதம் 22 ஆம் நாள் பிறந்தார். இன்னா யானோவ்சுகா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். பிடே அமைப்பு வழங்கும் பெண் கிராண்டு மாசுட்டர் பட்டம் மற்றும் அனைத்துலக சதுரங்க மாசுட்டர் பட்டம் ஆகிய தலைப்புகளுக்கு சொந்தக்காரராக கபோனெங்கோ சதுரங்கம் ஆடி வருகின்றார்.

இன்னா கபோனெங்கோ
Inna Gaponenko
இன்னா கபோனெங்கோ (2013)
நாடுஉக்ரைன்
பிறப்புசூன் 22, 1976 (1976-06-22) (அகவை 47)
பட்டம்அனைத்துலக சதுரங்க மாசுட்டர்,
பெண் கிராண்டு மாசுட்டர்
உச்சத் தரவுகோள்2482 (ஏப்ரல் 2005)

சதுரங்க வாழ்க்கை தொகு

1992 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் ஐரோப்பிய சாம்பியன் சதுரங்கப் போட்டியில் முதலிடம் பிடித்தார்.1994 இல் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோர் சதுரங்கப் போட்டியிலும் இவர் வெற்றி பெற்றார். 2002 ஆம் ஆண்டு துருக்கியின் ஆந்தாலியா நகரில் நடைபெற்ற பெண்கள் ஐரோப்பிய விரைவு சதுரங்கப் போட்டியில் கபோனெங்கோ வெற்றி பெற்றார்[1]. 2008 ஆம் ஆண்டின் உக்ரைன் பெண்கள் சாம்பியன் பட்டத்தை இவர் வென்றார்[2].

கபோனெங்கோ 1994 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையும் 2002 முதல் 2014 வரையிலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகளிர் சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் உக்ரைனிய தேசிய அணிக்காக விளையாடினார். 2006 ஆம் ஆண்டு போட்டியில் தங்கப் பதக்கமும், 2008 ஆம் ஆண்டு போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2012, 2014 போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களும், 2010 போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கமும் வென்றார். மகளிர் உலக அணி சதுரங்கப் போட்டிகளில் 2013 இல் இவர் இடம்பெற்ற அணி தங்கப் பதக்கமும், 2007, 2009 ஆம் ஆண்டுகளில் வெண்கலப் பதக்கமும், இதே ஆண்டுகளில் தனிநபர் பிரிவில் இரண்டு தங்கப் பதங்களும் வெல்வதற்கு இவர் காரணமாக இருந்தார். 2013 ஆம் ஆண்டு போலந்து நாட்டின் வார்சாவா நகரில் நடைபெற்ற மகளிர் ஐரோப்பிய அணி சதுரங்கப் போட்டியில் உக்ரைன் அணிக்கு தங்கப் பதக்கம் பெற்றுக் கொடுத்தார்[3].

மேற்கோள்கள் தொகு

  1. 3rd European Women Rapid Championship 2002 Antalya, Turkey Chess-Results.com
  2. "72nd Ukrainian Woman Chess Championship". Ukrainian Chess Federation. Archived from the original on 20 January 2013. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  3. Inna Yanovska team chess record at OlimpBase.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்னா_கபோனெங்கோ&oldid=3586257" இலிருந்து மீள்விக்கப்பட்டது