இம்பிச்சி பாவா
ஏழு குடிக்கல் இம்பிச்சி பாவா (E. K. Imbichi Bava) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1917 ஆம் ஆண்டு முதல் 1955 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். கேரளாவின்,பொன்னானி நகராட்சியின் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சு) பிரிவின் தலைவராக இருந்தார். பாராளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் உறுப்பினராக இருந்தார்.[1]
இ.கே. இம்பிச்சி பாவா E. K. Imbichi Bava | |
---|---|
இ.கே. இம்பிச்சி பாவா உடன் ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு மற்றும் வி. எஸ். அச்சுதானந்தன் | |
தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு இரண்டாவது அமைச்சரவை | |
பதவியில் 6 மார்ச்சு 1967 – 1 நவம்பர் 1969 | |
முன்னையவர் | கே.டி. அச்சுதன் |
பின்னவர் | கே.எம். சியார்ச்சு |
மாநிலங்களவை உறுப்பினர் கேரளம் | |
பதவியில் 3 ஏப்ரல் 1952 – 2 ஏப்ரல் 1954 | |
பொன்னானி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1962–1967 | |
முன்னையவர் | கே. கேளப்பன் |
பின்னவர் | சி.கே. சக்கரபாணி |
கோழிக்கோடு மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1980–1984 | |
முன்னையவர் | வி.ஏ. சையத் முகமது |
பின்னவர் | கே. ஜி. அதியோதி |
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா) மண்ணார்க்காடு சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 1967–1970 | |
முன்னையவர் | கிருட்டிணன் கொங்காசேரி |
பின்னவர் | ஜான் மேன்போரன் |
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), பொன்னானி சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 1991–1996 | |
முன்னையவர் | பி.டி. மோகன கிருட்டிணன் |
பின்னவர் | பலோலி முஹமத் குட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பொன்னானி, மலப்புறம், கேரளம் | 20 சூலை 1917
இறப்பு | 11 ஏப்ரல் 1995 | (அகவை 77)
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | பாத்திமா |
பிள்ளைகள் | 4 மகன்கள், 1 மகள் |
வாழிடம் | பொன்னானி |
As of 18 மே 2008 மூலம்: Government of Kerala |
பிறப்பு
தொகுஇம்பிச்சி பாவா 1917 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதி பொன்னானி ஏழுகுடிக்கலில் அப்துல்லாவுக்கு மகனாகப் பிறந்தார்.[2] [3]
அரசியல் வாழ்க்கை
தொகுமாணவராக இருக்கும் போதே பொது நோக்கங்களுக்காகப் பணியாற்றத் தொடங்கினார். இடதுசாரி சிந்தனைகளில் மெதுவாக ஈர்க்கப்பட்ட அவர், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும், பின்னர் 1940 முதல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிலும் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
கேரளத்தில் "தொழிலாளர் இயக்கங்கள்" மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதிலும், பின்னர் பல்வேறு இயக்கங்களிலும் பங்கு வகித்தார். 1948 இல் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா காங்கிரஸில் மலபார் உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் பங்கேற்றார்.
சுதந்திரத்திற்குப் பின் (1947–1995)
- இம்பிச்சி பாவா கேரளாவில் சிபிஐ(எம்) கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர்.
- 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் பிரிவதற்கு முன் உறுப்பினராக இருந்தார்.
- இ.பொ.க மார்க்சிஸ்ட் நிறுவனர்களில் ஒருவர். கட்சிப் பணியில் ஈடுபட்டு பலமுறை சிறைவாசம் அனுபவித்தவர்.
- இ.பொ.க, மாநிலக் குழு உறுப்பினர்,
- இ.பொ.க, பாலக்காடு மாவட்ட செயலாளர்,
- இ.பொ.க, மலப்புரம் மாவட்ட செயலாளர்,
- இந்திய தொழிற் சங்க மையம், மலப்புரம் மாவட்ட தலைவர்,
- இந்திய தொழிற் சங்க மையம், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்.
- 1952-54 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
- மக்களவைக்கு 1962 இல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக பொன்னானி மக்களவைத் தொகுதியிலிருந்து 3வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
- மண்ணார்க்காடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, இ.பொ.க வேட்பாளராக 3வது கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான அமைச்சகத்தில் 6 மார்ச் 1967 முதல் நவம்பர் 1, 1969 வரை போக்குவரத்து அமைச்சராக இருந்தார்.
- 1980 இல், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக கோழிக்கோடு தொகுதியிலிருந்து 7வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]
- 1991 இல் பொன்னானி சட்டமன்றத் தொகுதி 9வது கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [7]
குடும்பம்
தொகு1956 ஆம் ஆண்டு பாத்திமாவை, இம்பச்சி பாவா மணந்தார், (முன்னாள் பொன்னானி பேரூராட்சித் தலைவர், ஆசிரியர் மற்றும் சமூகஆர்வலர்) பாவாவிற்க்கு ரசூல் சலாம், கலீல், ஜலீல் மற்றும் முஸ்தாக் என நான்கு மகன்களும், ஜீனத் என ஒரு மகளும் இருந்தனர்.
இறப்பு
தொகுபாவா 11 ஏப்ரல் 1995 அன்று கேரள சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது இறந்தார், அவருக்கான மரியாதையை 24 ஏப்ரல் 1995 அன்று பேரவை செலுத்தியது.[8]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Imbichi Bava MP". rajyasabha.nic.in. 21 November 2020. Archived from the original on 2019-04-18. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
- ↑ "Personal Life". niyamasabha.org. 21 November 2020. Archived from the original on 2012-09-30. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
- ↑ https://sansad.in/ls/members%7C7th Lok Sabha Members Bioprofile
- ↑ "Imbichi Bava MP62". loksabhaph.nic.in. 21 November 2020. Archived from the original on 2019-12-11. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
- ↑ "Members of Previous Assembly - Third KLA (1967 –1970)". Official website of the Kerala State Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 2011-03-10.
- ↑ "Imbichi Bava MP80". loksabhaph.nic.in. 21 November 2020. Archived from the original on 2019-12-11. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
- ↑ "Members of Previous Assembly - Ninth KLA (1991 –1996)". Official website of the Kerala State Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 2011-03-10.
- ↑ "Bava Homage". stateofkerala.in. 22 November 2020. Archived from the original on 2017-07-27. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.