இம்மானுவேல் கால்ட்டன்

பிரித்தானிய வானியலாளர்

இம்மானுவேல் கால்ட்டன் (Immanuel Halton; 21 ஏப்ரல் 1628 – 1699) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் ஜான் பிளேம்சுட்டீடின் உதவியாளராக இருந்தார்.

வாழ்க்கை தொகு

இவர் கம்பர்லாந்தில் உள்ள கிரேசுட்டோக்கில் 1628 ஏப்பிரல் 21 இல் கிரீன்த்துவைட் முற்றத்தில் வாழ்ந்துவந்த மைல்சு கால்ட்டனின் மூத்த மகனாகப் பிறந்தார். மைல்சு கால்ட்டனின் இலைய மகன் திமோத்தி கால்ட்டன் ஆவார். இவர் கும்பர்லாந்தில் இருந்த பிளென்கோவ் இலக்கணப் பள்ளியில் படித்தார். பிறகு, இவர் கிரே இன்னின் மாணவரானார். பின்னர், இவர் அருந்தேலின் 23 ஆம் கோமான் தாமசு கோவார்டிடம் பணிசெய்தார். இவர் அவருக்காக ஆல்ந்து நாட்டு முதன்மை விவகாரங்களுக்கான தகவல் தொடர்புகளை மேற்கொண்டார். இவர் இங்கிலாந்து திரும்பியதும் அவரது வீட்டுக்குத் தணிக்கையாளர் பதவியேற்று 20 ஆண்டுகளுக்கு அரசு ஆணையங்கள், வழக்கு நடுவுநிலைப் பேணும் விவகாரப் பணிகளை நிறைவேற்றிவந்தார்.

இவரது புரவலரான தாமசு கோவார்டுக்குப் பின் வந்த கோமான், இவருக்கு 1660 இல் தெர்பிசயரில் இருந்த சர்லாந்து மாளிகையின் வருவாயில் ஒரு பகுதியை நிதிநல்கையாக வழங்கினார்; இவர் 1666 தொடக்கத்தில் அதே கவுன்ட்டியில் இருந்த விங்பீல்டு மாளிகைக்கு வந்தார். அங்கு, இவர் நோர்போக்கின் ஆறாம் குறுநில மன்னரான என்றி கோவார்டிடம் 1678 மே 28 இல் தனக்கு அருகில் இருந்த நிலங்களைக் விலைக்கு வாங்கினார். கால்ட்டன் இங்கு விங்பீல்டு மாளிகையில் சூரியக் கடிகைகளை நிறுவினார்;கிரே இன்னுக்கு 1650 இல் எழுதிய கடிதத்தில் இக்கடிகையைத் தானே புதிதாக புனைந்ததாகக் கூறி, அதன் விவரிப்பையும் தந்துள்ளார். அதைச் சாமுவேல் பாசுட்டரின் Miscellanea வில் 1959 இல் இலண்டனில் வெளிட்டார். இவர் விங்பீல்டு மாளிகைக்குப் பல மாற்றங்களையும் மேம்பாடுகளையும் செய்துள்ளார்; உள்நாட்டுப் போரில் சிதிலமடைந்த இடிபாடுகளைப் பழுதுபார்த்தார். இம்மாளிகை இவரது குடும்பத்திடம் 19 ஆம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது.

கால்ட்டன், ஜான் பிளேம்சுட்டீடின் வானியல் திறமை பற்றி கேள்விபட்டு, அவரைப் பார்க்க 1666 இல் டெர்பிக்குச் சென்றார். பின்னர், அவருக்கு ஜியோவன்னி பாட்டிசுட்டா இரிக்கோலி எழுதிய நியூ ஆல்மகெசுட்டு, யோகான்னசு கெப்ளர் எழுதிய உருடோல்பைன் பட்டியல்கள், இன்னும் பிற வானியல் நூல்களை அனுப்பி வைத்துள்ளார்.பிளேட்ம்சுட்டீடு இவரைச் சிறந்த இயற்கணிதவியலாளராக மதித்துள்ளார். மேலும் 1675, பிப்ரவரி, 23 இல் கால்ட்டன் விங்பீல்டில் எடுத்த சூரிய ஒளிமறைப்பு நோக்கிடுகளை அரசு கழகத்துக்கு அனுப்பினார். [1] பிளேம்சுட்டீடு 1678 பிப்ரவரி 20 இல் கணிதவியலாளர் ஜான் காலின்சுக்கு எழுதிய கடிதத்தில் தனக்காக கால்ட்டன் ஜெரார்டு கின்குய்சென்னின் மூன்-வைசர் எனும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பிறகு கால்ட்டனின் கோண அளவிகளை நோக்கிடுகளுக்குப் பயன்படுத்தியதைப் பற்றியும் ஜான் காலின்சிடம் அறிவித்துள்ளார்.மேலும், 1673, திசம்பர், 27 இல் காலின்சிடம் ' இப்போதெல்லாம் நான் கால்ட்டனிடம் உரையாடி, சூரியனின் குத்துயரத்தையும் நடுவரை விலக்கக் கோண அளவையும் கொண்டு ஆய்வுவழி ஒரு நேர்கோட்டு நீட்டலால் மணிக் கணக்கைக் காணும் வழிமுறையை அறிந்தேன்' என க் கூறியுள்ளார்.

இவர் தெர்பிசயரில் உள்ள ஓக்கர்த்திரோப் நகரத்தில் வாழ்ந்த ஜான் நியூட்டனின் மகளான மேரியை மணந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்மக்கள் உள்ளனர். இவர்களுக்குப் பிறந்த இருகுழந்தைகள் இறந்துவிட்டுள்ளனர். இவர் தன் 72 ஆம் அகவையில் 1699 ஆண்டில் இறந்துள்ளார். இவர் தென் விங்பீல்டில் அமைந்த அனைத்துப் புனிதர் பேராயத்தின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

குறிப்புகள் தொகு

  1. Phil. Trans. xi. 664.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்மானுவேல்_கால்ட்டன்&oldid=3615215" இலிருந்து மீள்விக்கப்பட்டது