இயற்கைநிலைக் கோட்பாடு

அறிமுகம்தொகு

இப்பிரபஞ்சமானது இயற்கையானது;இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி கிடையாது. இது கிரேக்க தத்துவ அறிஞர் தாலஸ் என்பவரின் கருத்தாகும். இயற்கைநிலைக் கோட்பாடு மிகப் பழமையான கருத்தாகும்.

இயற்கைநிலைக் கோட்பாட்டின் கருத்துக்கள் மற்றும் கல்வியாளர்கள்தொகு

அறிவியல் தன்மையுடைய இயற்கை நிலைக் கோட்பாடு-ஹெர்பார்ட் ஸ்பென்சர். அனுபவத் தன்மையுடைய இயற்கைநிலைக் கோட்பாடு-ரூஸோ. குழந்தையின் இயல்பான வளர்ச்சி-ரூஸோ, பெஸ்டலாசி, புரோபல், மாண்டிச்சோரி.

கல்விக் குறிக்கோள்கள்தொகு

குழந்தை இயல்பாக வளரவும், இயல்பாக வாழவும் கற்க உதவுவதே கல்வியின் குறிக்கோள் என ரூஸோ கருதுகிறார்.

கற்கும் சூழல்தொகு

இயற்கைச் சூழலே மாணவர்கள் கற்கும் இடமாகும் என ரூஸோ கருதுகிறார்.மாணவர்களை இயற்கையின் மடியில் தவழ விடுதல் வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

சான்றாதாரம்தொகு

இந்திய சமுதாயத்தில் கல்வி(ஏப்ரல்-1995).டாக்டர் கோகிலா தங்கசாமி(ஆசிரியர்).பக்.53-54,மாநிலா பதிப்பகம், மதுரை-625 004.