இயாசின் மாலிக்கு

காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர்

இயாசின் மாலிக்கு (Yasin Malik) இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமான சம்மு காசுமீர் விடுதலை முன்னணியின் தலைவர் ஆவார். முன்னாள் போராளியான இவர் இந்தியா மற்றும் பாக்கித்தான் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் காசுமீரைப் பிரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இது முதலில் காசுமீர் பள்ளத்தாக்கில் ஆயுதமேந்திய போர்க்குணத்தை முன்னெடுத்தது.[2] மாலிக்கு 1994 ஆம் ஆண்டில் வன்முறையைத் துறந்தார். காசுமீர் மோதலைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை மூலம், அமைதி வழியில் தீர்வு காணப்படவேண்டும் என்று இயாசின் மாலிக்கு பிறகு கூறத் தொடங்கினார். 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் குற்றவியல் சதி மற்றும் அரசுக்கு எதிராக போர் தொடுத்த குற்றச்சாட்டில் மாலிக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.[3][4][5] வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றவியல் சதி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு[1] ஆகிய காரணங்களுக்காக தில்லி நீதிமன்றம் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்தது.[6]

இயாசின் மாலிக்கு
Yasin Malik
பிறப்பு3 ஏப்ரல் 1966 (1966-04-03) (அகவை 57)
சிறிநகர், சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசம்மு மற்றும் காசுமீர் விடுதலை முன்னணி
குற்றச்செயல்குற்றவியல் சதி
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு[1]
வாழ்க்கைத்
துணை
முசால் உசைன் முல்லிக்கு
பிள்ளைகள்1 மகள்

ஆரம்ப வாழ்க்கை தொகு

இயாசின் மாலிக்கு 3 ஏப்ரல் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி சிறீநகரின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மைசுமா பகுதியில் பிறந்தார்.[7][8]

மாலிக்கு சிறுவனாக இருந்தபோது, ​​பாதுகாப்புப் படையினரால் தெருக்களில் நடத்தப்பட்ட வன்முறைகளைக் கண்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.[9] 1980 ஆம் ஆண்டில் இராணுவத்திற்கும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைக் கண்ட பிறகுதான் இவர் ஒரு கிளர்ச்சியாளராக மாறியதாகக் கூறப்படுகிறது. தல கட்சி என்ற ஒரு கட்சியை இவர் உருவாக்கினார். இக்கட்சியின் மூலம் புரட்சிகர முன்னணியை உருவாக்கி அரசியல் செய்திகளை அச்சடித்து விநியோகம் செய்து குழப்பம் விளைவித்தார். இவரது குழு 1983 ஆம் ஆண்டு சிறீநகரில் செர்-இ-காசுமீர் விளையாட்டு அரங்கில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த பன்னாட்டு துடுப்பாட்ட போட்டியை சீர்குலைக்க முயன்றது.[10] சிறீநகரில் தேசிய மாநாட்டுக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தது. மக்பூல் பட்டு தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இக்காரணங்களால் மாலிக்கு கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார்.[11][12]

1986 ஆம் ஆண்டு தலா கட்சி இசுலாமிய மாணவர் லீக்கு என மறுபெயரிடப்பட்டது. மாலிக்கு பொதுச் செயலாளராக இருந்தார். இசுலாமிய மாணவர் லீக்கு ஒரு முக்கியமான இளைஞர் இயக்கமாக மாறியது. அசுஃபாக் மசீத் வானி, இயாவேத் மிர் மற்றும் அப்துல் அமீது சேக் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இருந்தனர்.[a]

அரசியல் தொகு

1987 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இயாசின் மாலிக்கு தலைமையிலான இசுலாமிய மாணவர் கழகம் முசுலீம் ஐக்கிய முன்னணியில் இணைந்தது.[11]அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லாததால் கட்சி எந்த இடத்திலும் போட்டியிடவில்லை. ஆனால் அனைத்து சிறீநகர் தொகுதிகளிலும் முசுலீம் ஐக்கிய முன்னணி கட்சிக்காகப் பிரச்சாரம் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. முசுலீம் ஐக்கிய முன்னணியில் இணைந்த அனைத்துக் கட்சிகளும் சுதந்திரத்திற்கு ஆதரவானவை அல்லது சுயநிர்ணயத்திற்கு ஆதரவானவை என்று சமாத்-இ-இசுலாமின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.[12] ஆளும் கட்சியான தேசிய மாநாட்டின் "குண்டர்த்தனத்தை" எதிர்கொள்ளவே இசுலாமிய மாணவர் கழகம் கட்சியில் சேர்க்கப்பட்டது என்று மற்றொரு சமாத்து உறுப்பினர் கருத்து தெரிவித்தார்.[12]

1987 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறீநகரின் அமிரகதலில் நின்ற முசுலீம் ஐக்கிய முன்னணி வேட்பாளர் முகமது யூசுப் சாவுக்காக மாலிக்கு பிரச்சாரம் செய்தார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் யூசுப் சா அமோக வெற்றி பெறுவது தெரிய வந்தது என்று அறிஞர் சுமந்திர போசு கூறினார். ஆனால், எதிர்த்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் குலாம் மொகிதீன் சா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. யூசுப் சாவும் மாலிக்கும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 1987 ஆம் ஆண்டு இறுதி வரை முறையான குற்றச்சாட்டு ஏதுமின்றியும் விசாரணையின்றியும் சிறையில் அடைக்கப்பட்டனர். பரவலான தில்லுமுல்லுகளும் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்ட நிகழ்வுகளும் பதிவாகின. இத்தகைய முறைகேடுகள் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.[14] போலீசார் எந்த புகாரையும் கேட்க மறுத்துவிட்டனர். தேசிய மாநாடு-காங்கிரசு கூட்டணி சட்டமன்றத்தில் 62 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரசாங்கத்தை அமைத்தது.[15]

1987 ஆம் ஆண்டின் இந்த மோசடியான தேர்தல் காசுமீர் கிளர்ச்சிக்கான தூண்டுதலாக அமைந்தது என பெரும்பாலான அறிஞர்களால் பார்க்கப்படுகிறது.[16][17] மாலிக்கு இதற்கு உடன்படவில்லை. "1987 தேர்தலின் முறைகேடுகள் ஆயுதமேந்திய போர்க்குணத்தை ஏற்படுத்தவில்லை. 1987 ஆம் ஆண்டுக்கு முன்பே நாங்கள் அங்கு இருந்தோம் என்று அவர் கூறுகிறார்.[12]

போர்க்குணம் தொகு

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, மாலிக்கு பாக்கித்தானால் நிர்வகிக்கப்படும் காசுமீர் பகுதிக்குச் சென்று அங்குள்ள முகாம்களில் பயிற்சி பெறச் சென்றார்.[18] சம்மு மற்றும் காசுமீர் விடுதலை முன்னணியின் முக்கிய உறுப்பினராக 1989 ஆம் ஆண்டில் காசுமீர் பள்ளத்தாக்குக்குத் திரும்பினார். முன்னாள் சமசுதானமான சம்மு மற்றும் காசுமீர் முழுமைக்கும் சுதந்திரம் பெற்றுத்தருவதே தனது இலக்காக அறிவித்தார்.[19]

குறிப்புகள் தொகு

  1. ஏனைய உறுப்பினர்கள்: முசுத்தாக் உல் இசுலாம், அப்துல்லா பங்குரூ, அஜாஸ் தார், சௌக்காத் பட்சி, மெகுமூத் சாகர், இக்பால் கந்துரூ, நூர் முகமது கல்வால், பிர்தோசு சா, சகீல் பட்சி, இலால் ஏ. வார்.[11][13][12]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Rahul Pandita, Kashmir: Blood Transactions, OPEN Magazine, 1 April 2022.
  2. Bose 2003, ப. 3: "In early 1990 a group of young men in the Kashmir Valley launched a guerrilla revolt against Indian rule under the banner of a movement calling itself the Jammu and Kashmir Liberation Front (JKLF)."
  3. "Yasin Malik: Terror funding case; NIA court convicts Yasin Malik | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). May 19, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-19.
  4. "காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு". BBC News தமிழ். 2022-05-25. பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  5. "Kashmiri Separatist Yasin Malik Convicted In Terror Funding Case". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-19.
  6. Reuters, Story by. "Indian court sentences top Kashmiri separatist to life in prison". CNN. பார்க்கப்பட்ட நாள் 2022-05-26. {{cite web}}: |last= has generic name (help)
  7. Joshi, Arun (2004), Eyewitness Kashmir: Teetering on Nuclear War, Marshall Cavendish Academic, p. xxiv, ISBN 978-981-210-381-9
  8. Bose 2003, ப. 49.
  9. Schofield 2003, ப. 139.
  10. India v West Indies, Srinagar 1983-84
  11. 11.0 11.1 11.2 Das Gupta, J. B. (2002), Islamic Fundamentalism and India, Gurgaon: Hope India Publications (for Maulana Abul Kalam Azad Institute of Asian Studies), ISBN 9788178710136
  12. 12.0 12.1 12.2 12.3 12.4 Saima Bhat, Battleground Amira Kadal, Kashmir Life, 24 March 2016.
  13. Jamal 2009, p. 279, note 15.
  14. Inpreet Kaur, Warring over Peace in Kashmir in (Sidhu, Asif & Samii 2000, ப. 13), quoted in Timothy D. Sisk 2009, ப. 171
  15. Bose 2003, ப. 47-49.
  16. Schofield 2003, ப. 138.
  17. Bose 2003, ப. 50.
  18. Bose 2003, ப. 3:"The JKLF nucleus in IJK [Indian Jammu and Kashmir] had received weapons and training from a JKLF organization located across the border in AJK [Azad Jammu and Kashmir], as well as from Pakistani military agencies."
  19. Bose 2003, ப. 49-50.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயாசின்_மாலிக்கு&oldid=3437360" இலிருந்து மீள்விக்கப்பட்டது