இயான் புரொடக்சன்சு

இயான் புரொடக்சன்சு (ஆங்கில மொழி: Eon Productions) என்பது பிரித்தானிய நாட்டு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் 1962 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு லண்டனின் பிக்காடில்லியிலும் மற்றும் இங்கிலாந்தில் உள்ள பைன்வுட் படப்பிடிப்புத் தளத்திலும் இயங்குகிறது. இது முதன்மையாக ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத் தொடர்களை தயாரித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் தயாரிப்பு நிறுவனம் ஆனது.

இயான் புரொடக்சன்சு
வகைபங்குகளால் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் [1]
நிறுவுகை1962; 61 ஆண்டுகளுக்கு முன்னர் (1962)
நிறுவனர்(கள்)ஆல்பர்ட் ஆர். ப்ரோக்கோலி
ஹாரி சால்ட்ஸ்மேன்
தலைமையகம்லண்டன், ஐக்கிய இராச்சியம்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்மைக்கேல் ஜி. வில்சன்
பார்பரா ப்ரோக்கோலி
தொழில்துறைமகிழ்கலை
திரைப்படம்
உற்பத்திகள்ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள்
இணையத்தளம்eon.co.uk

பாண்ட் திரைப்படங்கள் தொகு

இந்த நிறுவனம் 1961 இல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆல்பர்ட் ஆர். "கப்பி" ப்ரோக்கோலி மற்றும் ஹாரி சால்ட்ஸ்மேன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. அதே நேரத்தில் அவர்கள் பங்காளராக இணைந்து டாக்டர் நோ என்ற திரைப்படத்தை தயாரித்தனர். அதன் பிறகு ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட உரிமையை பெற்று இருவரும் இணைந்து புரொம் ரஷ்யா வித் லவ் (1963), கோல்டு பிங்கர் (1964), தன்டர்பால் (1965), யு ஒன்லி லிவ் டூவைய்ஸ் (1967), டைமோண்ட்ஸ் ஆர் போறேவேர் (1971), ஒன் ஹேர் மேஜஸ்ட்டி சீக்ரெட் சேர்வீஸ் (1969), லைவ் அண்ட் லெட் டை (1973), தி மேன் வித் தி கோல்டன் கன் (1974), தி ஸ்பை கு லவ்ட் மீ (1977), மூன்ரேக்கர் (1979), போர் யுவர் ஐஸ் ஒன்லி (1981), ஆக்டோபஸ்ஸி (1983), அ வியூ டு அ கில் (1985), தி லிவிங் டயலைட்ஸ் (1987), லைசென்ஸ் டு கில் (1989), பியர்ஸ் புரோஸ்னன் (1995), டுமாரோ நெவர் டைஸ் (1997), தி வேர்ல்ட் இஸ் நோட் ஏனோக்ஹ் (1999), டை அனதர் டே (2002), கேசினோ ராயல் (2006), குவாண்டம் ஆஃப் சோலஸ் (2008), ஸ்கைஃபால் (2012), ஸ்பெக்டர் (2015) மற்றும் நோ டைம் டு டை (2021) போன்ற பல படங்களை தயாரித்துள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயான்_புரொடக்சன்சு&oldid=3432307" இருந்து மீள்விக்கப்பட்டது