இயோசினோரி ஓசூமி

இயோசினோரி ஓசூமி (大隅 良典 Ōsumi Yoshinori?) (பிறப்பு பிப்பரவரி 9, 1945) ஓர் சப்பானிய உயிரணுவியல் ஆய்வாளர். உயிரணுக்கள் சிலசூழல்களில் தன்னையே அழித்துக்கொள்கின்றன. உயிரணுக்கள் தன்னையே அழித்துக்கொள்ளும் இத்துறையில் இவர் பெயர் நாட்டியவர். 2016 ஆண்டுக்கான உடலியக்கவியல் மருத்துவ நோபல் பரிசை வென்றுள்ளார்[1]. இயோசினோரி ஓசூமி தோக்கியோ தொழினுட்பக் கழகத்தில் முன்னெல்லை ஆய்வு நடுவத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.[2] இவர் அடிப்படை அறிவியல் பிரிவுக்கான கியோட்டோ பரிசை 2012 இல் வென்றார்[3]

இயோசினோரி ஓசூமி
Yoshinori Ohsumi
இயோசினோரி ஓசூமி
பிறப்புபெப்ரவரி 9, 1945 (1945-02-09) (அகவை 79)
புக்குவோக்கா
தேசியம்சப்பானியர்
துறைஉயிரணுவியலாளர்
பணியிடங்கள்தோக்கியோ தொழினுட்பக் கழகம்
கல்வி கற்ற இடங்கள்தோக்கியோ பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதன்னுயிரணுவழித்தல்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2016)
இணையதளம்
www.ohsumilab.aro.iri.titech.ac.jp/english.html

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ஓசூமி பிப்பிரவரி 9, 1945 இல் சப்பானில் புக்குவோக்கா (Fukuoka) என்னுமிடத்தில் பிறந்தார். 1967 ஆம் ஆண்டு அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1974 இல் 'D.Sci' என்னும் முனைவர்ப்பட்டம் பெற்றார். இவ்விரண்டையுமே தோக்கியோ பல்கலைக்கழகத்தில் பெற்றார். 1974-77 காலப்பகுதியில் அமெரிக்காவில் நியூயார்க்கு நகரத்தில் உள்ள இராக்கபெல்லர் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவராக ஆய்வு செய்தார்.[2]

இவர் பின்னர் தோக்கியோ பல்கலைக்கழகத்துக்கு 1977 இல் இணை ஆய்வாளராகச் சேர்ந்தார். பின்னர் 1986 இல் விரிவுரையாளராக உயர்ந்தார். அதன் பின்னர் 1988 இல் இணைப்பேராசிரியராக உயர்ந்தார். 1996 இல் ஓக்காசாக்கி நகரத்தில் உள்ள அடிப்படை உயிரியலுக்கான நாடளாவிய கழகத்தில் (National Institute for Basic Biology) பேராசிரியராகச் சேர்ந்தார். அதன் பின்னர் 2004 முதல் 2009 வரை சப்பானில் உள்ள அயாமா (Hayama) என்னுமிடத்தில் உள்ள முன்னேறிய பட்ட ஆய்வுகளுக்கான பல்கலைக்கழகத்திலும் (Graduate University for Advanced Studies) பேராசிரியராக இருந்தார் 2009 இல் மூன்றுபதவிகளையும் கொண்டிருக்கும் நிலைக்கு நகர்ந்தார். அடிப்படை உயிரியலுக்கான நாடளாவிய கழகத்திலும், முன்னேறிய பட்ட ஆய்வுகளுக்கான பல்கலைக்கழகத்திலும் ஓய்வுநிலைப் பேராசிரியராகவும், தோக்கியோ தொழினுட்பக் கழகத்தில் பேராசிரியராகவும் இருந்தார். 2014 இல் ஓய்வு பெற்றபிறகு தோக்கியோ தொழினுட்பக் கழகத்தின் புத்தாக்க ஆய்வுகளுக்கான கழகத்தில் (Institute of Innovative Research) பேராசிரியராக இருந்தார். தற்பொழுது அதே கழகத்தின் தலைவராக இருக்கின்றார்.

2016 இல் உடலியக்கவியல் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசை வென்றார். இது உயிரணுக்கள் தன்னை அழிக்கும் (autophagy) முறைகளை விளக்கியமைக்காக வழங்கப்பட்டது.[4]

படைப்புகள்

தொகு

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

தொகு
  1. "The Nobel Prize in Physiology or Medicine 2016". The Nobel Foundation. 3 October 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2016.
  2. 2.0 2.1 Yoshinori Ohsumi's Entry at ORCID
  3. Lawrence Biemiller, "Kyoto Prize Is Awarded to 3 Scholars" The Chronicle of Higher Education Nov. 10, 2012 [1]
  4. "Yoshinori Ohsumi". நோபல் பரிசு. 3 October 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயோசினோரி_ஓசூமி&oldid=3520274" இலிருந்து மீள்விக்கப்பட்டது