இயோசியாகி அராட்டா

சப்பானிய இயற்பியலாளர்

இயோசியாகி அராட்டா (Yoshiaki Arata) சப்பான் நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளர் ஆவார். சப்பானில் அணுக்கரு இணைவுக்கான முன்னோடி ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். 1924 ஆம் ஆண்டு மே மாதம் 22 அன்று இவர் பிறந்தார். [1][2] – 5 June 2018}}[3][4][5] அராட்டா ஒசாகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். [6] இவர் ஒரு வலுவான தேசியவாதி என்றும் கூறப்படுகிறது, சப்பானியர்களை பற்றி மட்டுமே பொதுவில் இவர் பேசிக்கொண்டிருந்தார். [5] சப்பான் அரசு அராட்டாவிற்கு 2006 ஆம் ஆண்டு கலாச்சார விருதை வழங்கி சிறப்பித்தது. [7]

இயோசியாகி அராட்டா
Yoshiaki Arata
இயோசியாகி அராட்டா
பிறப்பு(1924-05-22)22 மே 1924
கியோத்தோ நகரிய மாநிலம், சப்பான்
இறப்பு5 சூன் 2018(2018-06-05) (அகவை 94)
வாழிடம்சப்பான்
தேசியம்சப்பான்
துறைகுளிர் இணைவு
பணியிடங்கள்ஒசாக்கா பல்கலைக்கழகம்
விருதுகள்சப்பானின் கலாச்சார விருது

அராட்டா தனது சகாவான யூ சாங் யாங்குடன் சேர்ந்து 1998 ஆம் ஆண்டு குளிர் இணைவு துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அக்கட்டுரைகளை வெளியிடவும் தொடங்கினார். [8]

2018 ஆம் ஆண்டு சூன் மாதம் 5 அன்று இவர் காலமானார்.

வெளியீடுகள்

தொகு
  • Y. Arata and Y. C. Zhang. "Achievement of intense 'cold' fusion reaction," Proceedings of the Japanese Academy, series B, 1990. 66:l.
  • Y.Arata. Patent Application US 2006/0153752 A

மேலும் படிக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயோசியாகி_அராட்டா&oldid=3773262" இலிருந்து மீள்விக்கப்பட்டது