இரகுராஜ் பிரதாப் சிங்

இந்திய அரசியல்வாதி

குன்வர் ரகுராஜ் பிரதாப் சிங் (Kunwar Raghuraj Pratap Singh) (பிறப்பு 31 அக்டோபர் 1969), ராஜா பையா என்று பிரபலமாக அறியப்பட்ட இவர், ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் குன்டா சட்டமன்றத் தொகுதியிலிருந்து 18வது உத்தரபிரதேச சட்டமன்றத்தில் ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்) கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரகுராஜ் பிரதாப் சிங்
உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1993
முன்னையவர்சிவ நாராயண் மிசுரா
தொகுதிகுன்டா
உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை, சிறைத் துறை
பதவியில்
2004–2007, 2012–2017
விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்
பதவியில்
1999–2000, 2000-2002
[புள்ளியியல் மற்றும் நிரல் அமலாக்கத் துறை
பதவியில்
1997–1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
குன்வர் ரகுராஜ் பிரதாப் சிங்[1]

31 அக்டோபர் 1969 (1969-10-31) (அகவை 54)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்) (2018–தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
சுயேட்சை (1993–2018)
துணைவர்பன்வி குமாரி (15 பிப்ரவரி 1995)
பிள்ளைகள்4
வாழிடம்(s)குன்டா, பிரத்தாப்புகர், உத்தரப் பிரதேசம், இந்தியா[2]
முன்னாள் கல்லூரிஇலக்னோ பல்கலைக்கழகம் (1989)
தொழில்அரசியல்வாதி
புனைப்பெயர்மாநிலங்களவை]]
As of 25 ஏப்ரல், 2015

2018 நவம்பர், 16 அன்று, சிங் சொந்தமாக ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்) என்ற கட்சி ஒன்றை உருவாக்குவதாக அறிவித்தார்.[3] இவரது கட்சி மக்களவைத் தேர்தலில் பிரதாப்கர் மற்றும் கௌசாம்பி ஆகிய இரு தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது.[4]

ஆரம்ப வாழ்க்கை தொகு

சிங், 31 அக்டோபர் 1969 அன்று மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்தார் [1][5] இவருடைய தந்தை ராஜா உதய் பிரதாப் சிங் மற்றும் அயோத்தி இராச்சியத்தின் பத்ரி பகுதியைச் சேர்ந்தவர். இவரது தாத்தா ராஜா பஜ்ரங் பகதூர் சிங், பந்த் நகர் வேளாண் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் துணைவேந்தராகவும், பின்னர் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் இரண்டாவது ஆளுநராகவும் இருந்தார். இரகுராஜ் தனது குடும்பத்தில் முதலில் அரசியலுக்கு வந்தார். இவரது தாத்தா தனது மருமகன் ராஜா உதய் பிரதாப் சிங்கை தனது மகனாக ஏற்றுக்கொண்டார்.

சிங், 1989 -இல் [6] பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பிப்ரவரி 15, 1995 இல் பன்வி குமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.[1][5] சிங் ஒரு விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவராவார்.[6]

குறிப்பிடத்தக்க தேர்தல் முடிவுகள் தொகு

2007 உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் தொகு

2007 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், சுயேட்சையாக நின்ற இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் சிவபிரகாஷ் மிசுராவை விட கிட்டத்தட்ட பாதி வாக்குகள்[7] வித்தியாசத்தில் குன்டா சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிக அளவு வாக்கு வித்தியாத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரத்தாப்புகர் பகுதியிலுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும், அண்டை மாநிலமான பீகாரில் சில தொகுதிகளிலும் கணிசமான செல்வாக்கைப் பெற்றுள்ளார். இப்பகுதியில் நடக்கும் தேர்தல் பேரணிகளில், இவரை முன்னிருத்தியே தேர்தல் பரப்புரைகள் இருக்கும்.[8]

2007 தேர்தலுக்குப் பிறகு, மாயாவதி குமாரி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தபோது, இவர் மீண்டும் காவல் துறையின் கண்காணிப்பின் கீழ் வந்தார்.

2017 உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் தொகு

2017 சட்டமன்றத் தேர்தலில், இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஜானகி சரணை 103,647 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் மொத்தம் 136,597 வாக்குகளைப் பெற்றார்.

2022 உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் தொகு

2022 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்) சார்பில் போட்டியிட்டு சமாஜ்வாதி கட்சியின் குல்சன் யாதவை 30,315 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் மொத்தம் 99,612 வாக்குகளைப் பெற்றார். சிங் தொடர்ந்து ஏழாவது முறையாக 2022-இல் குன்டா சட்டமன்றத்தின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9][10]

சர்ச்சைகளும் மோதல்களும் தொகு

2002ல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தல் தொகு

2002 ஆம் ஆண்டில், இரகுராஜ் சிங் தன்னை கடத்தி,அச்சுறுத்துவதாகக் கூறி பாரதிய ஜனதா கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் பூரன் சிங் பண்டேலா, புகார் அளித்ததன் பேரில் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின்மீது, அப்போதைய முதல்வர் மாயாவதியின் உத்தரவின் பேரில், இரகுராஜ் கைது செய்யப்பட்டார். . பின்னர் உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான அரசாங்கம் இவரை பயங்கரவாதி என்று அறிவித்து, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவரது தந்தை உதய் பிரதாப் சிங், உறவினர் அக்‌சய் பிரதாப் சிங் ஆகியோருடன் சிறைக்கு அனுப்பப்பட்டார்.[11] பின்னர், அக்சய் பிணை பெற முடிந்தது. ஆனால் இவரது மனுக்கள் பல முறை நிராகரிக்கப்பட்டன.[12]

சிறையிலிருந்து அமைச்சர் வரை தொகு

2003 இல் முலாயம் சிங் யாதவ் அரசாங்கம் பதவிக்கு வந்த 25 நிமிடங்களில் [13] இவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டன. இருப்பினும், மாநில அரசின் இச்செயல்க்ளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.[13]

இறுதியில் 2004-இல் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் மீண்டும் இவரை விடுவிக்க மறுத்துவிட்டது.[14] பின்னர் இவர் அரசாங்கத்தில் ஒரு சக்திவாய்ந்த மனிதராக ஆனார். மேலும் இவருக்கு எதிராக பழிவாங்கலைத் தொடங்கியதாக காவல்துறை அதிகாரி ஆர். எஸ். பாண்டே (இவரது வீட்டில் சோதனை நடத்தியவர்) குற்றம் சாட்டப்பட்டார்.[15] இறுதியில் பாண்டே ஒரு சாலை விபத்தில் கொல்லப்பட்டார்.[16] இது தற்போது நடுவண் புலனாய்வுச் செயலகத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

2005 ஆம் ஆண்டில், இவர் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சரானார். மேலும் இவர் மீதான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்த போதிலும்,[17] எதிரான அச்சுறுத்தல்கள் இல்லையென்றாலும், மாநிலத்தால் வழங்கப்பட்ட மிக உயர்ந்த பாதுகாப்பு (இசட்-வகை) இவருக்கு ஒதுக்கப்பட்டது. குறிப்பிடப்பட்டுள்ளது.

சியா உல் அக் கொலை வழக்கு தொகு

3 மார்ச் 2013 அன்று, இவரது சொந்தத் தொகுதியான குன்டாவில் கிராம மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலின் போது துணைக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சியா உல் அக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட அதிகாரியின் மனைவி பர்வீன் ஆசாத் அளித்த புகாரின் பேரில், பிரதாப்கர் காவல் துறையினர், இவர் மீது 'சதித்திட்டத்தில்' ஈடுபட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக 7 பிப்ரவரி 2013 அன்று நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.[18]

ஆகஸ்ட் 1, 2013 அன்று, நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் நீதி மன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டு இவர் குற்றமற்றவர் எனக் கூறி விடுவிக்கப்பட்டார்.[19]

தொண்டு மற்றும் சமூக பணி தொகு

நவம்பர் 2019 இல், புற்றுநோயாளியான ஆறு வயதேயான விதுசி என்பவரின் சிகிச்சை தொடர்பான அனைத்து செலவுகளையும் சிங் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.[20] 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும், சிங் நூற்றுக்கணக்கான பெண்களின் கூட்டுத் திருமணத்தை நடத்துகிறார்..[21]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Members of Uttar Pradesh Legislative Assembly". uplegisassembly.gov.in (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
  2. Ramendra Singh (9 March 2013). "The Raja's Backyard". இந்தியன் எக்சுபிரசு. Retrieved 11 March 2013.
  3. "Uttar Pradesh: Kunda MLA Raja Bhaiyya announces new party, likely to field candidates in 2019". The New Indian Express. 16 November 2018. https://www.newindianexpress.com/nation/2018/nov/16/uttar-pradesh-kunda-mla-raja-bhaiyya-announces-new-party-likely-to-field-candidates-in-2019-1899085.html. 
  4. "Modi is popular but his MPs will struggle: Independent MLA Raja Bhaiyya". The Times of India. 7 May 2019. https://timesofindia.indiatimes.com/elections/news/modi-is-popular-but-his-mps-will-struggle-independent-mla-raja-bhaiyya/articleshow/69209923.cms. 
  5. 5.0 5.1 "Uttar Pradesh Legislative Assembly (UPLA): Member info". www.upvidhansabhaproceedings.gov.in. பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
  6. 6.0 6.1 "Raghuraj Pratap Singh(Independent(IND)):Constituency- KUNDA(PRATAPGARH) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 20 November 2020.
  7. "2007 Uttar Pradesh state elections". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 30 September 2007. பார்க்கப்பட்ட நாள் 3 March 2022..
  8. Prem Panicker (20 February 2002). "Election 2002: The secret of Raja Bhaiya's success". ரெடிப்.காம். http://www.rediff.com/election/2002/feb/20_upr_prem_spe_1.htm. 
  9. "Uttar Pradesh - Kunda". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 20 March 2022.
  10. "Kunda Election Result UPDATE: रघुराज प्रताप सिंह का फिर चला जादू, सपा प्रत्याशी को 30 हजार वोटों से हराया". News18 हिंदी. 10 March 2022. https://hindi.news18.com/news/uttar-pradesh/pratapgarh-uttar-pradesh-2-kunda-pratapgarh-assembly-seat-result-live-update-win-loss-raja-bhaiya-raghuraj-pratap-singh-sindhuja-mishra-senani-gulshan-yadav-yogesh-kumar-mu-phaheem-2-4045857.html. 
  11. "The gang of Raja Bhaiyya" இம் மூலத்தில் இருந்து 2012-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121019112748/http://articles.timesofindia.indiatimes.com/2007-06-24/lucknow/27973946_1_raja-bhaiyya-gang-raghuraj-pratap-singh. 
  12. J.P. Shukla (15 April 2004). "Muscle and mafia links still matter in Uttar Pradesh". தி இந்து இம் மூலத்தில் இருந்து 16 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081016095713/http://www.hinduonnet.com/2004/04/15/stories/2004041500781200.htm. 
  13. 13.0 13.1 George Iype and Ehtasham Khan (11 March 2004). "Caught in the POTA trap: Uttar Pradesh". ரெடிப்.காம். http://in.rediff.com/news/2004/mar/11spec1.htm. 
  14. Ram Dutt Tripathi (14 November 2005). "Politician held on terror charge". BBC News, Lucknow. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4435840.stm. 
  15. "Raja Bhaiya cases: DSP being 'victimised'". 28 August 2004. http://www.tribuneindia.com/2004/20040828/nation.htm#7. 
  16. "Night before HC says yes to his plea for CBI probe, UP cop dies". இந்தியன் எக்சுபிரசு. 17 January 2007 இம் மூலத்தில் இருந்து 14 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121014072702/http://www.expressindia.com/latest-news/Night-before-HC-says-yes-to-his-plea-for-CBI-probe-UP-cop-dies/21077/. 
  17. Aman Sharma (22 June 2005). "Now, Z security for Bhaiyya". இந்தியன் எக்சுபிரசு. http://www.indianexpress.com/full_story.php?content_id=73090. 
  18. "UP top cop killed in gunbattle following village head's murder". இந்தியா டுடே (15-07-14). http://indiatoday.intoday.in/story/dsp-zia-ul-haq-pratapgarh-up-uttar-pradesh-up-top-cop-village-head/1/252399.html. 
  19. "CBI gives clean chit to Raja Bhaiya in deputy SP murder case". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2 August 2013 இம் மூலத்தில் இருந்து 5 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130805192318/http://articles.timesofindia.indiatimes.com/2013-08-02/india/41005265_1_nanhe-yadav-gulshan-yadav-cbi-report. 
  20. "कैंसर से लड़ रही ये मासूम, 3 दिन में मदद को ब दर्जनों हाथ, राजा भैया ने कहा- पूरी हेल्प करूंगा" (in hi). Asianet News Network Pvt Ltd. 6 November 2019. https://hindi.asianetnews.com/uttar-pradesh/many-people-started-to-help-of-6-year-old-cancer-patient-vidushi-q0j6uq. 
  21. "हिंदी खबर, Latest News in Hindi, हिंदी समाचार, ताजा खबर" (in hi). Patrika News. https://www.patrika.com/pratapgarh-up-news/raja-bhaiya-will-organise-group-marriage-for-poor-families-on-31-may-in-pratapgarh-news-in-hindi-1589349/. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகுராஜ்_பிரதாப்_சிங்&oldid=3743752" இலிருந்து மீள்விக்கப்பட்டது