இரங்காநதி அணை
இரங்காநதி அணை (Ranganadi Dam) என்பது கான்கிரீட்டால் ஆன புவியீர்ப்பு அணையாகும். இது ஆற்றின் ஓட்டத்தினை திசை திருப்பும் விதமாக இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் இரங்காநதியின் மீது (பனையாறு நதி) கட்டப்பட்டுள்ளது.
இரங்காநதி அணை | |
---|---|
அமைவிடம் | அருணாச்சலப் பிரதேசம், இந்தியா |
புவியியல் ஆள்கூற்று | 27°20′34″N 93°49′0″E / 27.34278°N 93.81667°E |
கட்டத் தொடங்கியது | 1988 |
திறந்தது | 2001 |
உரிமையாளர்(கள்) | வடகிழக்கு மின் ஆற்றல் கழகம் |
அணையும் வழிகாலும் | |
வகை | ஈர்ப்பு அணை, நீர் மாற்றுப்பாதை |
தடுக்கப்படும் ஆறு | இரங்காநதி ஆறு |
உயரம் | 68 m (223 அடி) |
நீளம் | 339 m (1,112 அடி) |
வழிகால் வகை | சேவை, தடுப்பணை கட்டுப்பாடு |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | இரங்காநதி நீர்த்தேக்கம் |
திக்ரங் மின்னாற்றல் நிலையம் | |
ஆள்கூறுகள் | நீர்landmark 27°15′27″N 93°47′32″E / 27.25750°N 93.79222°E |
இயக்குனர்(கள்) | வடகிழக்கு மின் ஆற்றல் கழகம் |
பணியமர்த்தம் | சனவரி 2002 |
வகை | ஆற்றின் ஓட்டத்தில் |
சுழலிகள் | 3 x 135 மெ.வா. பிரான்சிஸ் வகை |
நிறுவப்பட்ட திறன் | 405 மெகா வாட்டு (அலகு) |
உற்பத்தி திறன்
தொகுஇந்த அணை நீர் மின் ஆற்றல் உற்பத்திக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரங்காநதி நீர் மின்சார திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும். சுமார் 405 மெகாவாட் (543,000 குதிரைத் திறன்) திக்ராங் மின்னாற்றல் நிலையம் இதனால் இயக்கப்படுகிறது. சுமார் 68 மீட்டர் உயரமான அணை தண்ணீரை தெற்கே 10.1 கி. மீ. உயர்மட்ட சுரங்கப்பாதை வழியாகவும் 1062 மீட்டர் விசை நீர்க்குழாய் வழியாக 135மெகா வாட் விசையாழிகளை இயக்கப் பயன்படுகிறது. மின் உற்பத்தி நிலையமானது, வறட்சியின் காரணமாக இதன் திறனை விட மிகக் குறைவாகவே மின்னுற்பத்தி செய்து வருகிறது.[1]
திட்டத்தின் இரண்டாம் நிலை, நிலை I க்கு நீர் சேமிப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 134 மீட்டர், 523,000,000 m3 (1.85×1010 cu ft) நீர் சேமிப்புத் திறன் கொண்ட பாறையுடன் கூடிய நீர் சேமிப்பு பகுதியினைக் கொண்டுள்ளது. இந்த அணை கூடுதலாக 180 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நிலையமாக உள்ளது.
மேலும் பார்க்கவும்
தொகு- திபாங் அணை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Reservoir of dams". India Environmental Portal. May 2008. Archived from the original on 24 January 2010. பார்க்கப்பட்ட நாள் 28 August 2010.