இரட்சிப்பு (கிறித்தவம்)

இரட்சிப்பு என்ற சொல் கிறித்தவ இறையியலில் பாதுகாக்கப்படுதல், விடுவிக்கப்படுதல் என்ற பொருள் கொண்டது. எதிரிகளிடமிருந்து, போராட்டங்களிலிருந்து, பாவத்திலிருந்து, நரகத்துக்குச் செல்வதிலிருந்து பாதுகாப்பதையும் விடுவிப்பதையும் குறிப்பிடுவதாக விவிலியத்தின் பல இடங்களில் இச்சொல் கையாளப்பட்டுள்ளது.

வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இரட்சிப்பு என்பது பாவமன்னிப்படைந்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுவதற்கு அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது.