இரட்டை மீனவர் முடிச்சு

(இரட்டை ஆங்கிலேயர் முடிச்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரட்டை மீனவர் முடிச்சு அல்லது இரட்டை ஆங்கிலேயர் முடிச்சு என்பது உண்மையில் இரண்டு கயிறுகளைத் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு தொடுப்பு ஆகும். இந்த முடிச்சும், மும் மீனவர் முடிச்சும் பாறை ஏறுவதில் அதிகமாகப் பயன்படும் முடிச்சுக்களாகும். இவை தவிர, மீட்பு வேலைகளிலும், தேடுதல் நடவடிக்கைகளிலும் இம் முடிச்சைப் பயன்படுத்துகின்றனர். பாறை ஏறுபவர்களின் பாதுகாப்புத் தொகுதியின் பல்வேறு பகுதிகளை இணைப்பதற்கான உயர் வலிமை கொண்ட நாண்களை உருவாக்குவதே பாறையேற்றத்தில் இந்த முடிச்சின் முதன்மைப் பயனாகும்.

இரட்டை மீனவர் முடிச்சு
பெயர்கள்இரட்டை மீனவர் முடிச்சு, திராட்சைக்கொடி, இரட்டை ஆங்கிலேயர் முடிச்சு
வகைதொடுப்பு வகை
மூலம்பழங்காலம்
தொடர்புமீனவர் முடிச்சு, மும் மீனவர் முடிச்சு, Double overhand knot, Strangle knot
அவிழ்ப்புஇறுகக்கூடியது
பொதுப் பயன்பாடுமெல்லிய, விறைப்பான, வழுக்கும் தன்மை கொண்ட கயிறுகளை இணைத்தல்; எட்டு வடிவ முடிச்சுப் போன்ற முக்கிய முடிச்சுக்களுக்குப் பக்கபலமாகப் போடுதல்.]]
எச்சரிக்கைஅவிழ்ப்பது கடினம்
ABoK
  1. 294, #1415
இரட்டை மீனவர் முடிச்சை முடிதல்

இம் முடிச்சின் இன்னொரு பயன்பாடு முக்கியமான வேறு முடிச்சுக்களுக்குப் பின்பலமாக இருப்பதாகும். கழுத்தணிகளைக் கட்டுவதற்கும் இந்த முடிச்சைப் பயன்படுத்துவது உண்டு. இதில் இரண்டு கயிறுகளுக்குப் பதில் ஒரே கயிற்றின் இரண்டு முனைகளை முடிகின்றனர். இந்த முடிச்சைப் பயன்படுத்துவது மூலம் கயிற்றை அறுக்காமல் கழுத்தணியின் அளவைச் சுருக்கவோ விரிவாக்கவோ முடிகிறது.

குறிப்புகள்

தொகு


இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_மீனவர்_முடிச்சு&oldid=3234279" இலிருந்து மீள்விக்கப்பட்டது