இரணியாட்சன்

இரணியாட்சன்அல்லது இரண்யாட்சன் (Hiranyaksha), ஒரு இந்து புராணக் கதாபாத்திரம் ஆகும். இவர் காசிபர் - திதி தம்பதியரின் மகன். இரணியனின் அண்ணன் ஆவார். பிரம்மாவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டு, தனக்கு எந்த ஆயுதத்தின் மூலமும் மரணம் ஏற்படக்கூடாது என்றும், மூவுலகத்திற்கும் தான் அரசனாக இருக்க வேண்டி வரம் பெற்றவன். மூவுலகையும் வென்று, பின் பூமியை அபகரித்து பாதாள லோகத்தில் மறைத்து வைத்து, அதர்ம வழியில் வாழ்ந்தவன் இரண்யாட்சன். இரண்யாட்சனின் கொடுமைகளைத் தாங்காத பூமா தேவி, பிரம்மா, இந்திராதி தேவர்களின் வேண்டுகோளை ஏற்று திருமால், வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனை தன் கூரிய கோரைப் பற்களால் கடித்துக் குதறி அழித்து, பூமாதேவி, இந்திராதி தேவர்கள் உட்பட மூவலகையும் மீட்டு தர்மத்தை நிலைநாட்டினார்.[1][2]

திருமால் வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனின் தலை கொய்து, பூமாதேவியை மீட்டல்

இவற்றையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. http://www.gita-society.com/scriptures/ALL18MAJORPURANAS.IGS.pdf பரணிடப்பட்டது 2014-11-13 at the வந்தவழி இயந்திரம் பக்கம் 424 முதல் 431 வரை
  2. பதினெண் புராணங்கள் நூல், பக்கம் 549, நர்மதா பதிப்பகம், சென்னை

நூல் உதவிதொகு

கூடுதல் வாசிப்பிற்குதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரணியாட்சன்&oldid=3693933" இருந்து மீள்விக்கப்பட்டது