இரண்டாம் நெபுகாத்நேசர்

நேபுகாத்னேச்சர் அல்லது நெபுகத்நேசர் II (Nebuchadnezzar II), கிமு 634 – கிமு 562) புது பாபிலோனியப் பேரரசின் தலைசிறந்த, மிக நீண்ட காலப் பேரரசராக விளங்கியவர்.[2] இவர் கிமு 587-இல் எருசலேம் நகரையும், யூதக் கோயிலையும் அழித்தவர். இஷ்தர் பெண் கடவுளுக்கு அழகிய கோயில் எழுப்பினார். இவா் பாபிலோன் நகரை மீண்டும் பொழிவுடன் கட்டி எழுப்பி, " தொங்கும் தோட்டம்" அமைத்தார்.[3]

நபூ-குதுரி-உசூர்
Nabû-kudurri-usur
புது பாபிலோனியப் பேரரசர்
Nebukadnessar II.jpg
இரண்டாம் நெபுகாத்நேசர் மன்னரின் தலை பொறிக்கப்பட்ட ஒரு வேலைப்பாடு. அன்டன் நீசுட்ரோம், 1901.[1]
ஆட்சிஅண். கிமு 605 – அண். கிமு 562
முன்னிருந்தவர்நபோபலசார்
பின்வந்தவர்ஆமெல்-மர்தூக்
தந்தைநபோபலசார்
பிறப்புஅண். கிமு 634
இறப்புஅண். கிமு 562 (அகவை 71/72)
பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசரால் நிறுவப்பட்ட இஷ்தர் கோயிலின் நுழைவாயில், பெர்கமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி

நெபுகாத்நேசா் தனது தலைநகரில் அமைத்த கட்டிடங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்ட அனைத்து வகையான கட்டிட அமைப்புகளும் திட்டமிட்டு சுமார் 16 கிமீ சுற்றளவில் இரண்டு சுவர்களுக்கு இடையே பிரமாண்டமான இஷ்தர் கோயில் நுழைவாயில் அமைத்து பாதுகாப்பாக அமைக்கப்பட்ட நகரமாக நிறுவினார். இவர் மேலும் ஒரு பெரிய அழகான புகழ்பெற்ற அரண்மனையை கட்டினார். அது, தி மார்வெல் ஆப் தி மேன்கைண்ட்[தெளிவுபடுத்துக] என்று அழைக்கப்பட்டது. மேலும் இவர் பாரசீக வளைகுடாவில் ஒரு கப்பல் துறைமுகத்தை முதன்முதலில் அமைத்து உலகப்புகழ் பெற்றாா்.[4]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Anton Nyström, Allmän kulturhistoria eller det mänskliga lifvet i dess utveckling, bd 2 (1901)
  2. Freedman 2000, ப. 953.
  3. Nebuchadnezzar II
  4. "Manorama Tell me why" July 2017

உசாத்துணைகள்தொகு