இரத்னபுரியின் காலச்சூரிகள்

மத்திய இந்தியாவை ஆண்டு வந்த பண்டைய வம்சம்

இரத்தினபுரியின் காலச்சூரிகள் (Kalachuris of Ratnapura) 11ஆம்- 12ஆம் நூற்றாண்டுகளில் மத்திய இந்தியாவிலிருந்து ஆண்டு வந்த ஒரு வம்சமாகும். இவர்கள் இன்றைய சத்தீசுகரின் சில பகுதிகளை தங்களின் தலைநகரான இரத்தினபுரிலிருந்து (நவீன இரதன்பூர் பிலாஸ்பூர் மாவட்டம் ) ஆட்சி செய்தனர். இவர்கள் திரிபுரியின் காலச்சூரிகளின் ஒரு கிளையினராக இருந்தனர். மேலும் பல ஆண்டுகளாக தாய் வம்சத்தின் அடிமைகளாக ஆட்சி செய்தனர்.

இரத்னபுரியின் காலச்சுரிகள்
11ஆம் நூற்றாண்டு–13ஆம் நூற்றாண்டு
Map
Find spots of inscriptions from Ratnapura Kalachuri period (map of India)[1][2]
தலைநகரம்இரதன்பூர்
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
11ஆம் நூற்றாண்டு
• முடிவு
13ஆம் நூற்றாண்டு
முந்தையது
பின்னையது
Kalachuris of Tripuri
Somavamshi dynasty
Eastern Ganga dynasty
தற்போதைய பகுதிகள்இந்தியா

வரலாறு தொகு

இரத்தினபுரி கிளையின் பல கல்வெட்டுகளும், நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை பிராந்தியத்தின் அரசியல் வரலாற்றை முழுமையான உறுதியுடன் புனரமைக்க போதுமான தகவல்களை வழங்கவில்லை. [2]

முதலாம் ஜஜ்ஜலதேவனின் பொ.ச. 1114 தேதியிட்ட இரதன்பூர் கல்வெட்டின் படி, திரிபுரி காலச்சூரி மன்னர் கோகல்லனுக்கு 18 மகன்கள் இருந்தனர். அவர்களில் மூத்தவன் அவனுக்குப் பின் திரிபுரியின் அரியணையில் அமர்ந்தார். இளையவர்கள் மண்டல ஆட்சியாளர்களாக (நிலப்பிரபுத்துவ ஆளுநர்கள்) ஆனார்கள். இரத்னபுரி காலச்சூரிகள் இந்த இளைய மகன்களில் ஒருவரிடமிருந்து வந்தவர்கள். [3] புதிய கிளை பொ.ச.1000 இல் கலிங்கராசனால் நிறுவப்பட்டது. [4]

கலிங்கராசன் தெற்கு கோசலப் பகுதியைக் கைப்பற்றி, தும்மனைத் தலைநகராகக் கொண்டான். அவனது பேரன் இரத்னராசா இரத்தினபுரியை நிறுவினான். [5] கலிங்கராசனின் கொள்ளுப் பேரன் முதலாம் பிருத்விதேவனின் கல்வெட்டுகள், அவன் இரத்னபுரி காலச்சூரிகள் தொடர்ந்து திரிபுரி காலச்சூரிகளின் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்ததைக் குறிப்பிடுகின்றன. [2]

பிருத்விதேவனின் மகன் இரண்டாம் இரத்னதேவன், கீழைக் கங்க வம்சத்தின் அரசன் அனந்தவர்மன் சோடகங்கனின் படையெடுப்பை முறியடித்தான். [6]

தோல்விகள் தொகு

வம்சத்தின் கடைசியாக அறியப்பட்ட இறையாண்மை ஆட்சியாளராக பிரதாப மல்லன் இருந்தான். பிரதாபமல்லன் தனது மகன் பரமார்தி தேவனுடன் சேர்ந்து கங்கர்களின் எல்லையில் படையெடுக்கும் முயற்சியைத் தொடர்ந்தான். கீழைக் கங்க ஆட்சியாளரான மூன்றாம் அனங்கபீம தேவன், தனது திறமையான பிராமணத் தளபதியான விஷ்ணுவின் தலைமையில் ஒரு பெரிய படையை அனுப்பினான். பிரிக்கப்படாத சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சிவ்ரிநாராயணா கிராமத்தில் விந்திய மலைகளுக்கு அருகில் பீமா நதிக்கரையில் இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தன. அனங்கபீமனின் சட்டேசுவரா கோயில் கல்வெட்டு, விஷ்ணு காலச்சூரி மன்னனை மிகவும் பயமுறுத்தினான் என்று குறிப்பிடுகிறது. [7]

பிரதாபமல்லன் சிறைபிடிக்கப்பட்டு, சம்பல்பூர் - சோன்பூர் - பலாங்கிர் பகுதிகளையும், இப்போது சத்தீஸ்கர் மாநிலத்தின் சில பகுதிகளையும் கங்க இராச்சியத்திற்கு விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் தனது மந்திரி விஷ்ணுவின் ஆலோசனையுடன், அனங்கபீமன் தனது மகள் சந்திரிகாவை காலச்சூரி இளவரசரான பரமார்தி தேவனுக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலம் காலச்சூரிகளுடன் இராஜதந்திர மற்றும் திருமண உறவை ஏற்படுத்தினார். கூட்டணி உறுதியானதும், கங்கப் படைகளின் பலம் பெருகின. உமுர்தானில் (மயூர்பஞ்சு மாவட்டத்தில் உள்ள அமர்தா) வங்காளத்தின் மீதான முதலாம் நரசிங்க தேவவனின் இறுதிப் பதிவு செய்யப்பட்ட போரில் பரமார்த்தி தேவன் இறந்தான். பரமார்தி தேவன் கீழைக் கங்கப் படைகளை தனது சகோதரரின் கட்டளையின் கீழ் வங்காளத்தின் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிழக்கு இந்தியாவில் உள்ள சுதந்திர மற்றும் அரை சுதந்திர இந்து இராச்சியங்களில் இருந்து மற்ற கட்டாயப் படை வீரர்களுடன் வழிநடத்தினான். அவனது வாரிசுகளின் கதி தெரியவில்லை. [4]

ஆட்சியாளர்களின் பட்டியல் தொகு

இரத்தினபுரி காலச்சூரி ஆட்சியாளர்களின் பட்டியலானது, அவர்களின் ஆட்சிக்காலம் கணக்கிடப்பட்டுள்ளது: [8]

  • கலிங்கராசா (1000-1020 பொ.ச.)
  • கமலா-ராசா (1020-1045 பொ.ச.)
  • இரத்ன-ராசா என்கிற முதலாம் இரத்னா-தேவன் (1045-1065 பொ.ச.)
  • முதலாம் பிருத்வி-தேவன் என்கிற பிருத்விஷா (1065-1090 பொ.ச.)
  • முதலாம் ஜஜல்லா-தேவன் (1090-1120 பொ.ச.)
  • இரண்டாம் இரத்னதேவன் (1120-1135 பொ.ச.) (சுதந்திரத்தை அறிவித்தான்)
  • இரண்டாம் பிருதிவிதேவன் (1135-1165 பொ.ச.)
  • இரண்டாம் ஜஜல்லா-தேவன் (1165-1168 பொ.ச.)
  • ஜகத்-தேவன் (1168-1178 பொ.ச.)
  • மூன்றாம் இரத்ன-தேவன்I (1178-1200 .பொ.ச.)
  • பிரதாப-மல்லன் (1200-1225 பொ.ச.)
  • பரமார்த்தி தேவன் ( கீழைக் கங்கர்களின் பிரதேசங்களின் ஆளுநர்)

நாணயம் தொகு

இரத்தினபுரியின் காலச்சூரி ஆட்சியாளர்கள் தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவை நாகரி எழுத்துக்களில் வழங்குபவரின் பெயரைக் கொண்டுள்ளன. நாணயங்கள் நான்கு வகையான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன: [9]

  • கஜ-சார்துலா : சிங்கத்திற்கும் யானைக்கும் இடையே நடக்கும் சண்டையை சித்தரிக்கிறது. இந்த வடிவமைப்பு அவர்களின் அனைத்து தங்க நாணயங்களிலும், சில செப்பு நாணயங்களிலும் காணப்படுகிறது.
  • அனுமன்: அனுமன் பறப்பது, அரக்கனை நசுக்குவது (உட்கார்ந்திருக்கும் போது அல்லது நிற்கும் போது), திரிசூலத்தை வைத்திருப்பது அல்லது கொடியை வைத்திருப்பது போன்ற பல்வேறு தோற்றங்களில் சித்தரிக்கிறது. செப்பு நாணயங்கள் மட்டுமே இந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளன.
  • சிங்கம்: சிங்கத்தை சித்தரிக்கிறது, சில நேரங்களில் மனித தலையுடன். செம்பு மற்றும் வெள்ளி நாணயங்களில் இடம்பெற்றுள்ளது.
  • குத்துவாள்: செப்பு நாணயங்களில் குத்து வாள் காணப்படுகிறது.

இவர்களின் நாணயங்களின் குவியல் சத்தீசுகரின் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: [10]

பால்பூர் அருகே உள்ள மகாநதி ஆற்றங்கரையிலிருந்து பிரிதிவிதேவனின் 3 வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள தன்பூரில் 3900 செப்பு நாணயங்கள் உட்பட இவர்களால் வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான செப்பு நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [11]

கல்வெட்டுகள் தொகு

 
இரத்னதேவனின் சர்கோன் கல்வெட்டு

இன்றைய சத்தீசுகரின் பல இடங்களில் இரத்தினபுரி காலச்சூரி ஆட்சியாளர்களின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: [1] [2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Rajiv Kumar Verma 2015, ப. 59.
  2. 2.0 2.1 2.2 2.3 Om Prakash Misra 2003, ப. 14.
  3. F. Kielhorn 1888.
  4. 4.0 4.1 Om Prakash Misra 2003.
  5. F. Kielhorn 1888, ப. 138.
  6. Hermann Kulke & Dietmar Rothermund 1998, ப. 172-173.
  7. "ANANGABHIMADEVA III(1211-1238 A. D.)" (PDF). www.shodhganga.inflibnet.ac.in. p. 27. பார்க்கப்பட்ட நாள் 18 October 2018.
  8. V. V. Mirashi 1957.
  9. P. C. Roy 1980, ப. 20-22.
  10. P. C. Roy 1980, ப. 18-20.
  11. P. C. Roy 1980.

உசாத்துணை தொகு