இரத்னா தே

இந்திய அரசியல்வாதி

இரத்னா தே (Ratna De) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேற்கு வங்காள அரசாங்கத்தில் சுற்றுச்சூழல் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயிரி-தொழில்நுட்பத்திற்கான அமைச்சராக பணியாற்றி வருகிறார். இவர் சிங்கூர் பகுதியை உள்ளடக்கிய ஹூக்ளியில் மக்களவைத் தொகுதி 15வது மக்களவை மற்றும் 16வது மக்களவை உறுப்பினராக இருந்தார். தே 2019 மக்களவைத் தேர்தலில் ஹூக்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட லாக்கெட் சாட்டர்ஜியிடம் தோல்வியடைந்தார். 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில், இவர் பாண்டுவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தே சித்தார்த்த சங்கர் ராயின் இந்தியத் தேசிய காங்கிரசு அரசாங்கத்தில் தொழிலாளர் அமைச்சராக இருந்த கோபால் தாசு நாக்கின் மகள் ஆவார். இவர் 2001 மற்றும் 2006-ல், சிறீராம்பூர் (செரம்பூர்) சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[1][2][3]

மருத்துவராகத் தொழில் செய்து வரும் தே,மக்களவையின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு குழுவின் உறுப்பினராக இருந்தார். இவர் பதினாறாவது மக்களவையில் தலைவர்கள் குழுவின் உறுப்பினராக இருந்தார்.[4]

சுற்றுச்சூழல் துறை[5] மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இலாகாக்களுடன் மம்தா பானர்ஜியின் தலைமையில் மேற்கு வங்க மாநிலத்திற்கான 21வது அமைச்சர்கள் குழுவின் ஒருவராக தே உள்ளார்.[6][7][8]

மேற்கோள்கள் தொகு

  1. "Why Mamata didn't give women MPs a chance". Archived from the original on 2009-06-06. பார்க்கப்பட்ட நாள் 2009-08-12.
  2. "Dr. Ratna De(nag)". Archived from the original on 2012-10-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-12.
  3. "180 Serampore Assembly Constituency". Partywise Comparison Since 1977. Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-08-12.
  4. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2016-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Environmental Department, Govt. of West Bengal". www.environmentwb.gov.in.
  6. "Department Of Science & Technology And Biotechnology". www.wbdstbt.in.
  7. "১০টা ৪৫-এ শপথ, নীলবাড়িতে মমতার নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ২৭, একদম নতুন ১৬". www.anandabazar.com (in Bengali).
  8. "West Bengal: Amit Mitra, 42 others set to join Mamata's third cabinet - Times of India". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்னா_தே&oldid=3683842" இலிருந்து மீள்விக்கப்பட்டது