இராகுல் உத்தம்ராவ் திகாலே

இந்திய அரசியல்வாதி

இராகுல் உத்தம்ராவ் திகாலே (Rahul Uttamrao Dhikale) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார் .[1] 2019ஆம் ஆண்டில், இவர் மகாராட்டிராவின் நாசிக் கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]

இராகுல் உத்தம்ராவ் திகாலே
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம்
தொகுதிநாசிக் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர், 2024
பதவியில்
23 அக்டோபர் 2019 – 22 அக்டோபர் 2024
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 ஆகத்து 1979 (1979-08-14) (அகவை 45)
நாசிக்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)திகாலே நகர், பாஞ்ச்வாதி, நாசிக்
கல்விஇளங்கலைச் சட்டம்
வேலைஅரசியல்வாதி

இளமையும் குடும்பமும்

தொகு

இராகுல் திகாலே ஆகத்து 14,1979இல் பிறந்தார். இவரது தந்தை மறைந்த உத்தமராவ் திகாலே. உத்தமராவ் திகாலே நாசிக் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்தியாவின் 13வது மக்களவை உறுப்பினராக இருந்தார்.[6][7] இராகுல் தனது கல்லூரிக் கல்வியினை நாசிக்கில் உள்ள என். பி. டி சட்டக் கல்லூரியில் சட்டத்தில் இளங்கலைச் சட்டத்தில் முடித்தார். தனது பன்னிரண்டாவது வயதில், இராகுல் திகாலே மல்யுத்தத்தில் பயிற்சி பெற்று மகாராட்டிரா இந்த் கேசரி போட்டிகளில் பங்கேற்றார். 1995ஆம் ஆண்டில், இராகுல் திகாலே நாசிக்கின் மாநகரத் தந்தை கேசரி போட்டியில் வெற்றி பெற்றார்.[8]

அரசியல் வாழ்க்கை

தொகு

இராகுல் திகாலே நாசிக் மாநகராட்சியின் பகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2012-2017).[9] 2014-2015இல் நாசிக் மாநகராட்சியில் நிலைக்குழுவின் தலைவராக இராகுப் இருந்தார்.[10] 2019ஆம் ஆண்டில், மகாராட்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நாசிக் கிழக்கு தொகுதியிலிருந்து இராகுல் திகாலே வெற்றி பெற்றார்.[11]

விருதுகள்

தொகு
  • நாசிக் மாநகரத் தந்தை கேசரி வெற்றி-1995 [8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rahul Uattamrao Dhikle(Bharatiya Janata Party(BJP)):Constituency- NASHIK EAST(NASHIK) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  2. "Maharashtra Assembly (Vidhan Sabha) Election Results 2019". Maps of India. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  3. "लोकप्रतिनिधी | नाशिक जिल्हा, महाराष्ट्र शासन | India" (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  4. "Nashik East (Maharashtra) Assembly Election Results 2022: Candidate List, Winner, Runner-Up, Latest News and Updates, Videos , Photos". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  5. "Nashik East Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  6. "Former MP Uttam Nathuram Dhikale passes away". Mid-day (in ஆங்கிலம்). 2015-04-07. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  7. "उत्तमराव ढिकले यांचे निधन". Maharashtra Times (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  8. 8.0 8.1 देवगिरे, संपत (6 December 2019). "आमदार पै.राहुल ढिकलेंचा दिवस सुरू होतो तासभर धावल्यानंतर !". Sarkarnama (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-16.
  9. "Elected Members". Nashik Municipal Election 2017 (in ஆங்கிலம்). 2016-06-04. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  10. "नाशिक महापालिकेत मनसेचे भाजपला धोबीपछाड; स्थायीच्या अध्यक्षपदी ढिकले". Loksatta (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  11. "Rahul Uattamrao Dhikle-rahul Uattamrao Dhikle Bjp Candidate Nashik East Election Result 2019". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.