இராக்கெட் திருவிழா

ராக்கெட் விழா (Rocket Festival) என்பது இசான் மற்றும் லாவோஸின் பெரும்பகுதி முழுவதும் பாரம்பரியமாக லாவோ மக்களால் நடத்தப்படும் ஒரு விழாவாகும். மாரிக்காலத்தின் தொடக்கத்தில் ஏராளமான கிராமங்கள் மற்றும் நகரங்களில் இது கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்களில் பொதுவாக முதல் நாளில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், இரண்டாவது நாளில் மிதவைகள், நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் போட்டி ஊர்வலங்கள் மற்றும் மூன்றாம் நாள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் வெடிப்பதில் போட்டி போன்றவற்றில் முடிவடைகிறது. தென்கிழக்காசியா முழுவதும் பாரம்பரிய பௌத்த நாட்டுப்புற விழாக்களில் வழக்கம் போல் உள்ளூர் பங்கேற்பாளர்கள் மற்றும் ஆதரவாளர் தங்கள் சமூக கௌரவத்தை மேம்படுத்த இந்த நிகழ்வைப் பயன்படுத்துகின்றனர். [1]

மிக உயர்ந்த உயரத்தை எட்டும் இராக்கெட்டுகள்
பயா தென் பார்க் சென் ஏவுதளங்கள், யசோதன், தாய்லாந்து

வரலாறு தொகு

இந்த பௌத்த திருவிழாக்கள் 9ஆம் நூற்றாண்டில் வெடிமருந்து கண்டுபிடித்ததற்கு முன்பிருந்தே, மழை வருவதைக் கொண்டாடுவதற்கும் ஊக்குவிப்பதற்கும் நடத்தப்பட்ட பௌத்தத்திற்கு முந்தைய கருவுறுதல் சடங்குகளிலிருந்து உருவாகியதாகக் கருதப்படுகிறது. இந்த திருவிழா லாவோ நாட்டுப்புற கதைகளின் சில அடிப்படைக் கூறுகளைக் காட்டுகிறது. நடவு பருவத்தை உடனடியாக எதிகொள்வதற்கும், திருவிழாக்கள் தொடங்குவதற்கு முன்பு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. அத்துடன் வகுப்புவாத கௌரவத்தையும் மேம்படுத்துகின்றன.

கிழக்கில் ராக்கெட் வரலாற்றில் இது குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கலாம். [2] மற்றும் தென்கிழக்கு ஆசிய தேசிய மாநிலங்களின் பிந்தைய காலனித்துவ சமூக-அரசியல் வளர்ச்சியிலும் இது குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கலாம் என்பதால் அறிஞர்கள் இன்று பல நூற்றாண்டுகள் பழமையான இராக்கெட் திருவிழா பாரம்பரியத்தை ஆய்வு செய்கின்றனர். பொருளாதார ரீதியாக, கிராமங்கள் மற்றும் ஆதரவாளர்கள் லாவோஸ் மற்றும் வடக்கு இசான் (வடகிழக்கு தாய்லாந்து ) ஆகிய இடங்களில் பல இடங்களில் இதற்கான செலவுகளை ஏற்கின்றனர். திருவிழாக்கள் பொதுவாக மழைக்காலத்தின் தொடக்கத்தில், ஆறாவது அல்லது ஏழாவது சந்திர மாதங்களில் தொடங்குகின்றன .

மானுடவியல் பேராசிரியர் சார்லஸ் எஃப். கீஸ் என்பாரின் கூற்றுப்படி, தென்கிழக்கு ஆசியாவின் சமுதாயங்களின் மக்களுக்கு சில மரபுகளின் ஆழமான பொருளை அங்கீகரிப்பதற்காக, இந்த சமூகங்களின் ஆட்சியாளர்கள் பிந்தைய காலனித்துவ காலத்தில் கட்டியெழுப்ப அவர்கள் பணியாற்றிய தேசிய கலாச்சாரங்களில் சில உள்நாட்டு அடையாளங்களை இணைத்துள்ளனர். [3] "பன் பேங் ஃபை அல்லது லாவோஸின் இராக்கெட் திருவிழா" ஒரு உதாரணமாக இருக்கிறது. "... நகரங்களை விட கிராமங்களில் மிகவும் விரிவாக உள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

தற்போதைய நாளில் தொகு

தாய்லாந்தின் வடகிழக்கு பிராந்தியத்தில் சி ஆற்றில் உள்ள ஒரு நகரமான யசோதனின் கிராமங்கள் "பன் பேங் ஃபை" விழாக்களை நடத்துவதில்லை. இருப்பினும், கிராமங்களில் ஒரு அலங்கரிக்கப்பட்ட தளம் இருக்கும். இது ஒரு டிரக் போன்ற ஒரு வாகனத்தில் கட்டப்பட்டிருக்கும். அவை கண்காட்சிகளையும் கொண்டிருக்கும். சமீபத்திய ஆண்டுகளில், தாய்லாந்தின் சுற்றுலா ஆணையம் இந்த நிகழ்வுகளை ஊக்குவிக்கிறது. குறிப்பாக தாய்லாந்து மாகாணங்களான நோங் கை மற்றும் யசோதோன் ஆகியவற்றில் நடைபெறும் திருவிழாக்கள், இந்த பண்டிகைகளில் மிகப்பெரிய மற்றும் மிக விரிவான பெருமை கொண்டவை.

யசோதனின் திருவிழா தொகு

1972 மார்ச் 1 முதல், யசோதன் உபோன் ராட்சத்தானி மாகாணத்திலிருந்து அதன் உலகப் புகழ்பெற்ற மெழுகுவர்த்தி திருவிழாவுடன் பிரிந்தது. யசோதனின் மாகாண தலைநகரம் இப்போது தாய்லாந்தில் புகழ்பெற்ற மூன்று இராக்கெட் விழாக்களில் ஒன்றை விரிவாக ஆண்டுதோறும் மே, நடுப்பகுதியில் வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு வார இறுதிகளில் நடத்தியது.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Kammerer, Cornelia Ann and Tannenbaum, Nicola (1996). MERIT AND BLESSING: In Mainland Southeast Asian Comparative Perspective.. New Haven (Connecticut): Yale University.: Southeast Asia Studies (Monograph 45).. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-938692-61-5. https://archive.org/details/meritblessinginm00kamm. 
  2. Frank H. Winter, curator of the Rocketry Division of the National Air and Space Museum in Washington D.C., "The 'Bun Bang Fai' Rockets of Thailand and Laos: Possible Key to determining the Spread of Rocketry in the Orient", in Lloyd H. Cornett, Jr., ed., History of Rocketry and Astronautics - Proceedings of the Twentieth and Twenty-First History Symposia of the International Academy of Astronautics, AAS History Series, Vol. 15 (Univelt Inc: San Diego, 1993), pp. 3-24.
  3. Keyes, Charles F. (1995). The golden peninsula : culture and adaptation in mainland Southeast Asia. Includes bibliographical references and index.. Honolulu: (SHAPS library of Asian studies) University of Hawai'i Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8248-1696-X. , p. 285.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராக்கெட்_திருவிழா&oldid=2939996" இலிருந்து மீள்விக்கப்பட்டது