இராசா ராணிக்கோவில்

ராஜா ராணி கோயில் ஒரிசா பகுதியில் கிடைக்கின்ற ஒரு வகையான மணற்கல்லைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த மணற்க்கல்லை ஒரிசா பகுதி மக்கள் ராஜா ராணி என்று கூறுகின்றனர். இந்த வகை மணற்கல்லைக் கொண்டு கட்டப்பட்டதால் இக்கோயிலும் ராஜா ராணி கோயில் என்று சொல்லப்பட்டது. இக்கோயில் கருவறையில் சிற்பங்கள் ஏதும் இல்லை. பரிவார தேவதைகள் மட்டும் உள்ளன. வெளிபகுதியில் உள்ள இலகுலீசர், நடராசர், பார்வதி போன்ற சிற்பங்கள் குறிப்பிடத்தக்கன. ராஜா ராணி கோயில் கட்டட அமைப்பு முறை கஜுராகோ கோயில் கட்டட அமைப்பு முறையை போன்று காணப்படுகிறது. இக்கோயிலின் சங்காப்பகுதியில் 17.98 மீட்டர் உயரமுள்ள திக்குபாலர்களின் சிற்பங்கள் உள்ளன. மரக்கிளையைப் பிடித்திருக்கும் பெண், கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண் போன்ற பெண்களின் சிற்பங்கள் உயிரோட்டமுடையவை. விமானம் எழு அடுக்குகளைக் கொண்டது. ராகபாகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள சிங்கம் குறிப்பிடதக்கதாகும். கருவறையை அடுத்துள்ள ஜெகன் மோகன் பஞ்சரதப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. நுழைவாயிலில் சிங்க உருவமும் நவகிரகமும் உள்ளன.

கட்டடக்கலை சிறப்பு வாய்ந்த கோயில்களை தவிர பலகோயில்கள் புவனேஸ்வரத்தில் அங்கும் இங்கும் காணப்படுகின்றன. மித்தரீசுவரர், வருணீசுவரர், பாக்கீசுவரர், யாமீசுவரர், ராமீசுவரர் கோயில்கள் போன்றவை பிற்காலத்தில் எடுக்கப்பட்டவை பல பெயர்தெரியாத கோயில்களும் புவனேஸ்வரத்தில் உள்ளன.

மேற்கோள்நூல்:

     வாழ்வியற் களஞ்சியம் தொகுதி பன்னிரண்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசா_ராணிக்கோவில்&oldid=3078140" இருந்து மீள்விக்கப்பட்டது